Saturday, October 29, 2011

மர்மாத்துகள் மனிதர்களைக் கொல்கின்றனவா?



ஆமாம். மர்மாத்துகள் (Marmots) இருமி இருமியே நோய்க் கிருமிகளைத் தொற்றச் செய்து மனிதர்களைக் கொல்கின்றன.

பானை போன்ற வயிற்றைக் கொண்ட, பயந்த சுபாவம் கொண்ட மர்மாத்துகள் அணில் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒரு பூனை அளவில் இருக்கும் அவை பயப்படும்போது, பலமாக கிறீச்சிடும். மங்கோலியாவின் ஸ்டெப்பி புல்வெளிகளில் காணப்படும் அதிகக் கவர்ச்சியற்ற போபாக் வகை மர்மாத்துகள், எர்சினியா பெஸ்டிஸ் (Yersinia pestis) என்னும் கிருமியைப் பரப்புவதன் மூலம் பொதுவாக புபோனிக் பிளேக் என்று அறியப்பட்டுள்ள நுரையீரல் தொற்று நோயை உண்டாக்குகின்றன.

தாங்கள் இருமுவதன் மூலம் அக்கம் பக்கத்தில் உள்ள தெள்ளுப்பூச்சிகள், எலிகள் இறுதியாக மனிதர்கள் என்று அனைவரிடமும் இந்த நோய்க்கிருமிகளை இவை பரப்புகின்றன.

கிழக்கு ஆசியாவிலிருந்து அய்ரோப்பா வரை  மக்களைப் பெருவாரியாகக் கொன்று குவித்த அனைத்துப் பெரிய பிளேக் நோய்களும் மங்கோலியாவில் இருந்த மர்மோத்துகளிடமிருந்து வந்தவையே. இதனால் இறந்த மக்கள்  100 கோடியாக இருக்கலாம் என்று உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுவே, மனிதர்களைக் கொல்வதில் கொசுவுக்கு அடுத்த படியான உயிரினம் என்ற பெருமையை மர்மாத்துகளை  பெறச் செய்திருக்கின்றது.

பிளேக் நோய் மர்மாத்துகளையும், மனிதர்களையும் தாக்கும்போது அவர்களின் கைஅக்குள்களின் கீழேயும்,  தொடை இடுக்குகளின் கீழேயும் இருக்கும் நிணநீர் சுரப்பிகள் கருப்பு நிறமாக மாறி வீங்கிக் கொள்கின்றன. (இந்த புண்கள் புபோஸ் என்று அழைக்கப்படுகின்றன. புபோன் (boubon)என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது இது. அதன் பொருள் தொடையிடுக்கு என்பதாகும்.) மர்மாத்துகளின் தொடையிடுக்குகளை மங்கோலியர்கள் உண்ணமாட்டார்கள்.  இறந்து போன வேட்டைக்காரரின் ஆன்மா அதில் இருக்கிறது என்று அவர்கள் நம்பி வந்தனர்.

தொடையிடுக்கை நீக்கி அதன் மற்ற பாகங்களை மங்கோலியர்கள் விரும்பி உண்பார்கள். இவற்றைப் பிடிக்க வேட்டைக்காரர்கள்,  போலியான முயல் காதுகளை அணிந்து கொள்வது, எருதின் வாலை ஆட்டிக் கொண்டு நடனமாடுவது போன்ற பல்வேறு தந்திரங்களை மேற்கொள்வர்.  அவர்கள் பிடித்த மர்மாத்துகளை உரித்து சூடான பாறை மீது பரப்பி விருந்துண்ணுவர்.

அய்ரோப்பாவில், ஆல்பின் மர்மாத்தின் கொழுப்பு பக்கவாத நோய்க்கு சரியான மருந்து என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் பிரெய்ரி புல்வெளிப் பகுதிகளில் வாழும் நாய்கள், குளிர்காலத்தில் உறங்கி குழிபறித்து வாழும் வுட்சக் (Woodchuck) எனும் விலங்கு, தரைப்பன்றி உள்ளிட்டவை மர்மாத்தின் பிற இனங்களைச் சேர்ந்தவை ஆகும். புபோனிக் பிளேக் நோய் இன்றும் நம்மிடையே உள்ளது.

இந்தியாவில் கடந்த முறை 1994 இல் இந்த நோய் பெரும் அளவில் வெடித்தது. அமெரிக்க நாட்டிற்கு வரும் பயணிகளை  தனி மைப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்று கூறக் காரணமான மூன்று நோய்களில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டுநோய்கள் மஞ்சள் காய்ச்சலும், காலராவும் ஆகும்.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள்
தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...