Saturday, October 29, 2011

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை


ஜாதி, மத, இன வேறுபாடின்றி, அனைத்துப் பிரிவு மக்களையும் முன்னேற்றம் பெறச் செய்வதில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்கள், காங்கிரசின் இத்தகைய அலட்சியப் போக்கையும், அக்கறையின்மையையும் கண்டு வருந்தினர். அதனால், ஹோம் ரூல் இயக்கம் என்பதே தோன்றி இருக்கா விட்டாலும் கூட,  பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் என்று அழைக்கப்படும் நமது அமைப்பு, இந்திய தேசக் கட்டமைப்பு மற்றும் தேச மறுமலர்ச்சி பற்றி வேறுவிதமான கருத்துகள் பலவற்றைக் கொண்டிருந்த வர்களால் கட்டாயமாக உருவாக் கப்பட்டே இருக்கும் என்பது முன்னமேயே எடுக்கப்பட்ட முடிவாகும். முன்னேற்றம் என்று நாம் அழைப்பது, ஒரு குறிப்பிட்ட பிரிவு அல்லது பகுதி மக்கள் நவீன வழி முறைகளில் முன்னேற்றம் பெறுவதனைக் குறிப்பது அல்ல. நாட்டில் உள்ள அனைத்துப் பிரிவுகளின், சமூகங்களின் மக்கள் ஒரு சேர முன்னேற்றம் அடைவது என் பதையே அது குறிக்கிறது. உண்மை யில் நம் நாட்டில் உள்ள அரசியல் வாதிகள், அவர்களது கட்சிகளில் நிலவும் பாரம்பரிய மூட நம்பிக்கைகள் மற்றும் தள்ளு முள்ளுகளுக்கிடையே, இத்தகைய ஒருங்கிணைந்த முன்னேற்றம் பெறுவது என்பதனை அடையாளம் காணவே இல்லை. ஜாதிகள் மலிந்த இந்தியா போன்ற தொரு நாட்டில், தூய்மையான ஜனநாயக மரபுகள் அரிதாகவே இடம் பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை. அந்த கருத்து தோன்ற வேண்டு மானால், நாட்டின் அனைத்து சமூகங் களைச் சேர்ந்த அனைத்து மக்களும், அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கும் குழுக்களுக்கிடையேயான செயற்கைத் தடைகள் ஏதுமின்றி, சமமான உரிமைகளும், வாய்ப்புகளும் பெற்றவர்களாக  இருக்க வேண்டும் என்ற எண்ணம் வேரூன்ற வேண்டும்.  மக்களின் மனதில் நன்கு ஊடுருவி, மக்களிடையே பரவலாகப் பரவியுள்ள இந்தக் கருத்தின் வழிகாட்டுதலில் தான் நமது இயக்கம் செயல்பட்டு வருகின்றது. இந்தக் கருத்து முழுமை யாகச் செயல் வடிவம் பெற வேண் டுமானால்,  நமது ஆன்மாக்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் நமது அறிவையும், சிந்தனையையும் அடிமைப் படுத்தி வைத்திருக்கும், நமது பழைய ஆன்மிக வழிகாட்டுதல்கள் என்னும் தளைகளில் இருந்து நாம் விடுபடவேண் டும். நமது புதிய இயக்கத்தைத் துவக் கியதற்கான மற்றொரு காரணம் இதுதான். இந்த மாநாடு இக்கொள்கை உணர்வுக்கு உருவம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கோவையில் உள்ள உங்களுக்கு என்று உங்களின் சொந்த காரணங்களும் இருந் திருக்கலாம். உங்களது நலன்களைத் தியாகம் செய்யாமலும், உங்களது எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்தாமலும், இந்த இடத்திலிருக்கும் பொறுமை அற்ற கொள்கையாளர்களுடன் முழுமனதுடன் ஒத்துழைப்பது இயலாது என்பதை நீங்கள் கண்டுகொண்டிருக்கக்கூடும். உங்களை அவர்களிடமிருந்து பிரிக்கும் முக்கியமான பிரச்சினைகளுக்குள் விரிவாகச் சென்றுரைக்க நான் விரும்பவில்லை. மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்பு இங்கு உள்ளூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வினைப் பற்றி மட்டுமே உங்களது கவனத்துக்குக் கொண்டு வர விரும்பு கிறேன். பென்ட்லாண்ட் பிரபு கோவை நகர வாசிகளுக்கு செய்த நன்மைகளுக்காக  அவர்கள் அவரிடம் நன்றி பாராட்ட வேண்டியவர்களாக தாங்கள் இருப்பதாக உணர்ந்தனர். அங்கீகரிக்கப்பட்ட அவர் களின் தலைவர்களின் வழிகாட்டுதலில், அவருக்கு தங்கள் நன்றியினை வெளிப் படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அம்மக்கள் விரும்பினர். ஆனால் இந்த விஷயத்தில் ஹோம் ரூல் இயக்கத்தினர் செய்தது என்ன?  சொல்லப் போனால், நம்மை விடவும் மேதகு பென்ட்லாண்ட் பிரபுவிடம் அவர்கள் நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்பதற்குப் போதிய காரணங்கள் இருக்கலாம்.  பென்ட் லாண்ட் பிரபு கருணை உள்ளமும், தாராள மனமும் கொண்ட ஓர் ஆட்சியாளர். கற்றறிந்த பிரிவு மக்களின் நலன்களை முன்னேற்றம் பெறச் செய்ய அவர் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வந்தார். எடுத்துக் காட்டாக,  உயர்நீதி மன்றத்தில் உள்ள இந்திய நீதிபதிகளின் எண்ணிக்கையை அய்ந்தாக உயர்த் தியதைக் குறிப்பிடலாம்.  அரசு செயலாள ராக இந்தியர் ஒருவர் முதன் முறையாக நியமிக்கப்பட்டது அவர் ஆளுநராக இருந்த காலத்தில்தான்; அதுவும் அவரது வலியுறுத்தலால் செய்யப் பட்டது. வரு வாய்த் துறைக் கழகம் (போர்ட் ஆஃப் ரெவின்யூ)விற்கு உறுப்பினராக ஓர் இந்தியரை நியமித்த முதல் ஆளுநரும் அவர்தான். சென்னையில் பெண்களுக்கான அரசு கல்லூரி ஒன்றை நிறுவியதன் மூலம், பெண்கல்வியில் தனக்கிருந்த ஆர்வத்தை மெய்ப்பித்தார். மாகாணத்தின் தொழில் துறை வளர்ச்சியில் நடைமுறை சாத்தியமான ஆர்வத்தை அவர் எடுத்துக் கொண்டார்.
அவரது நேரடி மேற்பார்வை யில் ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்பட்ட தொழில்துறை கண்காட்சிகளே இதற்கான சாட்சிகளாகும். என்றாலும் அவரது இத்தகைய உதவிகளுக்காக நன்றி பாராட்ட வேண்டியவர்களான இப் பிரி வினர், இந்த மாகாணத்தின் அரசியல் வரலாற்றில் கடந்த முப்பதாண்டு களுக்கும் மேற்பட்ட காலத்தில் சந்தித் திராத ஒரு தீவிரமான தாக்குதலை அவர் மீது மேற்கொண்டனர். இந்த மாகாணத் தின் ஆளுநரான போர்ட்லாண்ட் பிரபு வின் பதவிக் காலத்தை நீட்டித்த இந்தி யாவுக்கான இங்கிலாந்தின் உள்துறை செயலாளருக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப் பட்ட கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் இந்தக் குழுவின் சில உறுப்பினர்கள்  தங்கள் நிலையைக் கூட மறந்து போனார்கள்.  இந்த விஷயத்திலும், ஒரு பெருங்கடலில் உள்ள ஒரு தண்ணீர்த்துளியைப் போன்ற இவர்கள்,  எவரது முடிவை ஏற்றுக் கொண்டு கட்டுப்பட வேண்டுமோ அத்தகைய எண்ணிக்கையில் அடங்கா அண்டை, அயலாரின் உணர்வுகளையும், விருப்பங் களையும் சிறிதும் மதிக்கவும் இல்லை.
இதிலிருந்தே, பெரும்பான்மை மக்கள், இத்தகைய சிறிய விஷயங்களிலாவது தங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களைத் தங்களின் கைகளில் எடுத்துக் கொண்டு நிலைநாட்ட வேண்டுமென்பது தெரிய வில்லையா? வேறு எந்த ஒரு நாகரிகம் படைத்த நாட்டிலும், இத்தகைய மிகமிகச் சிறுபான்மையினராக உள்ள மக்கள், கல்வி கற்று பேசத் தெரிந்தவர்களாக இருப்பதன் காரணமாக,  பெரும்பான் மையான மக்களின் கருத்துகளையும், விருப்பங்களையும் புறந்தள்ள அனு மதிக்கப்படமாட்டார்கள். 
 நமது உரிமை களையும் கடமைகளையும் உணர்ந்து கொண்டு, நமது எண்ணிக்கையின் அடிப்படையில் நமக்கு உரிமையான இடத்தினை உறுதியாகவும், தயக்க மின்றியும் இனி கைப்பற்ற வேண்டும் என்ற  ஓர் அறிவினை நமக்கு அளித் தமைக்காக, நமக்கு நாமேயும், அரசாங்கத்துக்கும் நன்றி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். தங்களது அங்கீகரிக்கப்பட்ட தலைவர்களின் வழிகாட்டுதலில், தங்கள் உரிமை களைக் கைப்பற்றி, நாட்டில் தங்களின் நிலையை நிலை நிறுத்தும் மாபெரும் செயலை  அனைவரும் ஒருங்கிணைந்து செய்து முடிப்பதில் கோவை மாவட்ட மக்கள் முதன்மையாகத் திகழ்கின்றனர் என்பதில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர் என்பதை  நான் கூறவும் வேண்டுமா? வேறு என்ன நடந்தாலும் சரி, இன்று நீங்கள் சாதித்தது என்ன என்பதை உங்களின் வருங்கால சந்ததிகள் மனநிறைவுடன் மட்டுமன்றி,  பெருமையுடனும், நன்றியுடனும்  திரும் பிப் பார்ப்பார்கள். நமது நலன்களைப் பாதுகாத்து, முன்னெடுத்துச் செல்வ தற்கான ஓர் இயக்கம் நமதியக்கம். நமது சமூகத்தைப் போன்றதொரு மாபெரும் சமூகத்தின் நலன்களைப் பாதுகாத்து, முன்னேறச் செய்வது என்பது,  ஓர் ஒழுங்கான அமைப்பு மற்றும் செயல் திட்டமின்றி செய்யப்பட இயன்றதல்ல.
-  தமிழில்: த.க. பாலகிருட்டிணன் (தொடரும்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...