Wednesday, October 26, 2011

அண்ணா நினைத்திருப்பாரா?


சென்னை மாநகராட்சியில் புதிய மேயராக சைதை துரைசாமி பதவி ஏற்றார் - வாழ்த்துகள்!

உறுப்பினர்கள் எப்படி பதவிப் பிரமாணம் எடுத்தார்கள்? தங்கள் தங்கள் கட்சித் தலைவர்களின் பெயரால் உறுதிமொழி எடுத்துள்ளார்கள்.

விழாவில் பங்கு கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா - அப்படியெல்லாம் பதவிப் பிரமாணம் எடுக்கக் கூடாது! கடவுளின் பெயரால்தான் உறுதி மொழி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுகவினர் சட்டப் பேரவையிலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி பதவிப் பிரமாணம் எடுக்கும்பொழுதெல்லாம் உளமார என்றுதான் உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.

ஆனால், அண்ணா பெயரில் கட்சி வைத்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளரோ, வெளிப்படையாக கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்கச் சொல்கிறார்.

நம்மால் தொடங்கப்படும் அரசியல் கட்சியிலிருந்து பிரிந்து போன ஓர் அரசியல் கட்சி ஆன்மீக திமுகவாக மாறக் கூடும் என்று அண்ணா கனவிலும் நினைத்திருப்பாரா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...