தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
எந்தப் பறவை தன் உருவத்தை விட மிகச் சிறிய முட்டையை இடுகிறது?
தீக்கோழியின் முட்டைதான் இயற்கையிலே மிகப் பெரிய ஒரே செல் என்றாலும், தாய்க் கோழியின் எடையில் ஒன்றரை சதவிகிதம் மட்டுமே எடை கொண்டது முட்டை. ரென் என்னும் பாடும் சிறிய வகைப் பறவையின் முட்டை அதன் எடையில் 13 சதவிகிதம் எடை கொண்டதாகும்.
பறவையின் உடல் எடை அளவுடன் ஒப்பிடும்போது அதிக எடை கொண்ட முட்டை சிறு புள்ளி கிவி பறவையின் முட்டைதான். அதன் முட்டை பறவையின் எடையில் 26 சதவிகித எடை கொண்டது. ஒரு மனிதத் தாய் ஆறுவயது குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமமானது இது.
ஒரு தீக்கோழி முட்டையின் எடை 24 கோழி முட்டைகளின் எடைக்கு சமமாகும். இந்த முட்டையை வேக வைக்க 45 நிமிடங்கள் ஆகும். விக்டோரியா மகாராணி தனது காலை சிற்றுண்டியில் வேகவைத்த ஒரு தீக்கோழி முட்டையை சாப்பிட்டுவிட்டு தான் சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த உணவு இது என்று அறிவித்தார்.
டயானோசர் உள்ளிட்ட எந்த ஒரு விலங்கினால் வைக்கப்பட்ட முட்டைகளில் மிகப்பெரிய முட்டை மடகாஸ்கரில் உள்ள யானைப் பறவை முட்டையாகும். 1700 ஆம் ஆண்டோடு அந்த உயிரினம் அழிந்துவிட்டது. அது தீக்கோழி முட்டையினைப் போல் பத்து மடங்கு பெரியதாக இருந்தது. கொள்ளளவில் அது ஒன்பது லிட்டர் இருந்தது. 180 கோழி முட்டைகளுக்குச் சமமானது அது.
அராபிய இரவுகள் கதையில் வரம் சிந்துபாத்தின் போர்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவேசம் மிகுந்த ராக்கிற்கு அடிப்படையாக இருந்தது இந்த யானைப் பறவைதான் என்று கருதப்படுகிறது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment