Monday, October 24, 2011

நிஜத்தைவிட்டு நிழலோடு சண்டை போடுவதா?


நிஜத்தைவிட்டு நிழலோடு சண்டை போடுவதா?


வரலாற்று ஆசிரியர் மறைந்த டி.கே. ராமானுஜத்தால் எழுதப்பட்ட 300 இராமாயணங்கள்  - அய்ந்து உதாரணங்கள் - மொழி பெயர்ப்புக் குறித்த மூன்று சிந்தனைகள் எனும் நூல் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

டில்லிப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தப் பாடம் நீக்கப்பட்டுள்ளது. இந்தநிலை குறித்து  வரலாற்றுப் பேராசிரியர்கள் தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலை ஏன் ஏற்பட்டது? இந்துத்துவாவாதி களின் கடுமையான எதிர்ப்புதான் இந்த முடிவுக்குக் காரணம் என்கிறபோது ஒரு தவறான முன்னு தாரணத்துக்கு இதன் மூலம் வித்தூன்றப்பட்டு விட்டது.

எந்த ஒரு பாடத் திட்டமும் வெளியில் கொடுக்கப் படும் எதிர்ப்பு - ஆதரவு என்கிற அழுத்தத்தின் மூலம்தான் முடிவு செய்யப்படும் என்றால், இதைவிடக் கேலிக் கூத்தும், அறிவுக்கு முரணான செயலும் வேறு எதுவாக இருக்க முடியும்?

இந்தியாவில் ஒரே ஒரு இராமாயணம் இல்லை என்பது தெரிந்த கதை; ஒவ்வொரு இராமாயணத் திலும் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களில் உறவுகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக வங்காளத்தில் இராவணன் மகளாக சீதை கூறப்படு கிறாள். நடிகர் மனோகர் நடித்த லங்கேஸ்வரன் நாடகத்தில் இவ்வாறு சித்திரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இடங்களில் அரங்கேற்றம் செய்யப்படவில்லையா?

உண்மையைச் சொல்லப் போனால் நாட்டின் பெரும்பான்மையான சூத்திர மக்களை இழிவுபடுத் தியதற்காக ஒட்டு மொத்தமாக இராமாயணம் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சூத்திரன் சம்பூகன் என்பவர் வருணாசிரமத்துக்கு எதிராகத் தவம் செய்த காரணத்தால் பார்ப்பனன் வீட்டில் குழந்தை மரணம் அடைந்து விட்டதாகவும், சூத்திரனான சம்பூகனை வருணாசிரமம் வெறியோடு இராமன் வ்டடிக் கொன்றான் என்பதும், சூத்திரன் சம்பூகன் வெட்டிக் கொல்லப்பட்ட உடனேயே செத்துப் போன பார்ப்பனக் குழந்தை உயிர் பிழைத்ததாகவும் இராமாயணம் கூறுகிறதே - இந்த ஒன்றே ஒன்றுக்காகவே இராமாயணம் தடை செய்யப்பட வேண்டாமா?

தந்தை பெரியாரால் எழுதப்பட்ட இராமாயண பாத்திரங்கள் என்னும் நூல்  - இந்தியில் சச்சு இராமாயணம் என்று மொழி பெயர்க்கப்பட்ட நிலையில் உத்தரப்பிரதேச மாநில அரசு தடை செய்தே - அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட மேல் முறையீட்டில் தடை செய்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்படவில்லையா?

டில்லி பல்கலைக் கழகத்தில் குறிப்பாக பேராசிரியர் ராமானுஜம் அவர்களால் எழுதப்பட்ட பாடம் தடை செய்யப்படுவதற்குக் கூறப்படும் காரணம் வேடிக்கை யானது.

வால்மீகி இராமாயணத்தில் அகலிகையே வலிய இந்திரனை அழைத்ததாகவும், அதனால்தான் இந்திரனின் உடல் ஆயிரம் பெண் குறிகளாக மாறட்டும் என்று சாபமிட்டதாகவும் கூறப்பட்டுள்ள தாகவும், இது வேறு சில இராமாயணங்களில் ஆயிரம் கண்களாக மாற்றப்பட்டதாகவும் ஏ.கே. இராமானுஜம் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பெண் பேராசிரியர்கள் இதுபோன்ற விடயங் களை வகுப்பறையில் பேசுவது தர்ம சங்கடத்தை விளைவிக்கும் என்று கருதுவதாகவும் கூறப்பட் டுள்ளது.

அப்படிப் பார்க்கப் போனால் தமிழில் உள்ள கம்ப இராமாயணம் உடனடியாக அரசால் தடை செய்யப்பட வேண்டும்; சீதையின் அங்க அடையாளங்களை கம்பன் வருணித்ததைவிட ஆபாசங்களை வேறு எங்கும் காண - கேட்க முடியாதே! தன் மனைவியின் உள் உறுப்புகளையெல்லாம் பிரம்மச்சாரியான அனுமானிடம் ராமன் கூறுவதாக கம்பன் எழுதியவை சாதாரணமானவைதானா?

எந்தப் பேராசிரியையாவது இந்தப் பகுதிகளைப் பாடமாக  நடத்த முடியாது என்று கூறியதில்லையே.

ஆபாசத்தின் மூல ஊற்றாக இருக்கும் இராமா யணத்தை தடை செய்யாமல், அதில் உள்ளதை எடுத்துக் கூறும் பாட திட்டத்தை தடை செய்வது யோக்கியப் பொறுப்புதானா?

நிஜத்தை விட்டு நிழலோடு சண்டை போடுவது புத்திசாலித்தனம்தானா? இந்தப் பிரச்சினையை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டுவோம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...