Thursday, August 25, 2011

சங்கர்ராமன் கொலை வழக்கு அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல் நீதிபதியுடன் ஜெயேந்திரர் ரகசிய பேரம்

சென்னை,ஆக.25- சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலை பேசியில் பேசுவது போன்ற ஆடியே சிடி வெளியாகியுள்ளது. நீதிபதிக்கு பணம் கெடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச் சேரி நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்த வழக்கை நீதிபதி ராமசாமி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இந்த விசார ணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் மனு, தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயந்திரர், அவரது பெண் உதவியாளர், 2 இடைத் தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசிக் கொள்ளும் உரையாடல் அடங்கிய சி.டி. வெளி யாகி உள்ளது. இதை ஒரு தமிழ்த் தொலைக் காட்சி வெளியிட்டுள்ளது.

பேரம் நடந்துள்ளது


அந்த சி.டி.யில் சங்கரராமன் கொலை குறித்தும், பணம் பட்டு வாடா குறித்தும் பேசுவது போன்று உரையாடல் உள்ளது. இந்தக் கொலை வழக்கிலிருந்து விடுதலை யாக ஏதோ பேரம்' நடந்துள்ளதாகத் தெரிகிறது.

அதில் பேசும் பெண் குரலுக்குச் சொந்தக் காரர் கௌரி என்பவர் ஆவார். இவர் ஜெயேந் திரரின் உதவி யாளர் என்று அந்தத் தொலைக் காட்சி கூறியுள்ளது. இந்த சி.டி. உண்மை யானதா, உண்மை என்றால் பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதுவரை புதுச்சேரி நீதி மன்றத்தில் நடைபெறும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஊழல் கண்காணிப்பாளர்

நீதிமன்றத்தில் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க புதுச்சேரி தலைமை நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்ததேடு, இது தொடர்பாக ஊழல் கண்காணிப்பு பதிவாளர் 8 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...