Thursday, August 25, 2011

விடுதலை 25-08-2011

சங்கர்ராமன் கொலை வழக்கு அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல் நீதிபதியுடன் ஜெயேந்திரர் ரகசிய பேரம்

சென்னை,ஆக.25- சங்கர்ராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலை பேசியில் பேசுவது போன்ற ஆடியே சிடி வெளியாகியுள்ளது. நீதிபதிக்கு பணம் கெடுத்து வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயேந்திரர் முயல்வதாக இந்த சிடி உரையாடல் மூலம் தெரிய வருவதாகவும், இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.

திருவாரூர்


சென்னை மாகாணத் தில் சர்க்கார் உத்தியோகங் களுக்காக ஏற்படுத்தியிருக் கும் வகுப்பு வாரி பிரதிநிதித் துவம் என்பது சர்க்கார் உத்தரவாக மாத்திரம் இல்லா மல், சர்க்கார் சட்டத்திலேயே ஒரு விதியாகக் குறிக்கப்பட வேண்டுமென்று, இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலை சட்டமன்றத்திற்கு வெளியே கலைஞர் பேட்டி

சென்னை, ஆக. 25- தமிழ் நாட்டில் அறிவிக்கப்படாத ஒரு நெருக்கடி நிலை போன்ற சூழ் நிலை காணப்படுகிறது என்று இன்று சட்டமன்றத்திற்கு வெளியே முன்னாள் முதலமைச்சர் கலைஞர் செய்தியாளர்களிடையே தெரி வித்தார்.

விடுதலை தலையங்கம் சத்துணவுத் திட்ட சர்ச்சை

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை 36

5. இந்தியாவும் ஆங்கிலேய சாம்ராஜ்யமும்

(1) பேரரசின் விவகாரங்களை முடிவு செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ உருவாக்கப்பட்டு கூட்டப்படக் கூடிய எந்த ஒரு கவுன்சிலிலோ அல்லது எந்த ஒரு அமைப்பிலோ, டொமீனியன்களு டன் சம உரிமைகள் கொண்ட ஒரு முறையில் இந்தியாவுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப் படும்.

(2) மேதகு ஆங்கிலேய சாம்ராஜ்யப் பேரரசரின் மற்ற குடி மக்களுக்கு இணையான அந்தஸ்தும், உரிமைகளும் அளிக்கப்பட்டு இந்தியக் குடிமக்கள் ஒரு சமநிலையில் வைக்கப்படுவார்கள்.

தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் திராவிடச் சமுதாயம் தலைநிமிர்ந்து கொண்டாடி மகிழ்வோம்!

தி.மு.க. தலைவர் கலைஞர் வேண்டுகோள்!

சென்னை, ஆக.25-தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு திராவிடச் சமுதாயம் தலைநிமிர்ந்து கொண்டாடி மகிழ்வோம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் உடன் பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது கடிதம் வருமாறு:

கலை,இசை,நாடகம் இலக்கியங்களில் பார்ப்பனர்களுக்குள்ள மரியாதை தமிழர்களுக்கு இல்லையே என பெரியார் வேதனைப்பட்டார்!

சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை, ஆக.25-கலை, இசை, நாடகம், இலக்கியங்களில் பார்ப்பனர்களுக்கு உள்ள மரியாதை பாராட்டு தமிழர்களுக்கு இல்லையே என்று வேதனைப்பட்டார் பெரியார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணிஅவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

பொய் வழக்கு போட்டவர்கள் மீது சட்டப்படி வழக்குத் தொடருவோம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேட்டி

மதுரை, ஆக. 25- பொய் வழக்கு போட்ட வர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடருவோம் என்று மதுரை சிறையில் தி.மு.க.வினரைப் பார்த் துவிட்டு வந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

நில அபகரிப்பு வழக் குகளில் கைது செய்யப் பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ள தி.மு.க. நிரு வாகிகளை பார்ப்பதற் காக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நேற்று மாலை 3.35 மணி அள வில் மத்திய சிறைக்கு வந்தார்.

எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீட்டில் கீரீமிலேயர் கட்டுப்பாடு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, ஆக. 25- எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் கட்டுப் பாட்டை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதி மன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.சுக்லா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப் பதாவது: எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்கப் படுகிறது.

சென்னை பெரியார் திடலில் இதழாளர் பயிற்சிப் பட்டறை

சென்னை 25- பெரி யார் மணியம்மை பல் கலைக்கழகம், பெரியார் களம் இணைந்து நடத் திய இதழாளர் பயிற்சி பட்டறையின் இரண் டாம் ஆண்டின் நிகழ்ச் சியை திராவிடர் கழகத் தின் பொருளாளர் வழக் கறிஞர் கோ. சாமிதுரை தொடங்கி வைத்து உரையாற்றினார்.









No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...