Saturday, August 27, 2011

அயல்நாடு வாழ் இந்தியர் நலன் காக்க அரசின் சில முயற்சிகள்

அயல்நாடு வாழ் இந்தியர் குடியுரிமை (ஓ,சி,ஜி) வழங்கும் திட்டமானது இந்திய குடியுரிமைச்சட்டம் 1955-இல் திருத் தங்கள் செய்து 2006-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அயல்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் விசா இல்லாமல் தங்கள் வாழ்நாளில் எப்போதும் இந்தியாவுக்கு வந்து செல்லலாம். குறைந்த செலவில் கல்வி பெறலாம். கலாசார ரீதியான சில பயன்களையும் இதன்மூலம் அவர்கள் பெற முடியும். 2011-ஆம்  ஆண்டு ஜீன் 30-ஆம் தேதி நிலவரப்படி அயல்நாடு வாழ்  இந்தியர் குடியுரிமை பெறுவதற்கு 8,61,726 பேர் பதிவு செய்திருக்கின்றனர்.
வெளிநாட்டு இந்தியர்  வாக்களிக்கும் உரிமை மக்கள் பிரதிநிதித்துவ திருத்த சட்டம் - 2010 இந்திய பாஸ்போர்ட் வைத்திருக் கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனை வருக்கும் வாக்குரிமை அளிக்கிறது அயல்நாடுகளில் வசிக்கும் இந்திய வாக்களர்கள் அனைவரும் தங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்திய முகவரிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க அனுமதி அளித்து 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப் பத்தையும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சான்றுகளின் நகல்களையும் உரிய பதிவு அலுவலரிடம் நேரிலோ, அஞ்சல் மூலமா கவோ சமர்ப்பிக்கலாம். அநத ஆவணங் களுக்கு விண்ணப்பதாரர்கள் சுய சான் றொப்பம் அளித்தால் போதும் என்று விதி முறைகளில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வள மய்யம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவைப் படும் முக்கிய தகவல்களை உடனுக்குடன்  தெரிந்து கொள்ளும் வகையில் வாரத்தின் எல்லா நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும் அயல்நாடு வாழ் வள மய்யம் என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வதில் இருக்கும் ஆபத்துகள் மற்றும் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்துகொள்ள வேண்டிய முன்னேற் பாடுகள் ஆகியவை தொடர்பாக வெளி நாட்டு வேலைக்கு செல்ல விரும்புவர் களுக்கு இந்த வள மய்யம் விழிப்புணர்வு அளிக்கிறது. இந்தியாவில் உள்ளவர்கள் 100 11 1900 என்ற இலவச தொலைபேசி யில் தொடர்பு கொண்டு இது தொடர் பான தகவல்களை கேட்டு பெறலாம். அய்க்கிய அரபு எமிரேட்டில் இருந்து 8000911913 என்ற எண்ணிலும் உலகின் மற்ற நாடுகளில் இருந்து 91-11-40503090 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு குழு அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கான இந்திய குழுவானது சர்வதேச இடம் பெயர்வோர் அமைப்புடன் (அய்.ஓ.எம்) கூட்டு சேர்ந்து இந்தியர்களுக்கு வெளி நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு செல்லக்கூடிய வர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிப்பது இதில் குறிப்பிடத்தக்க ஒரு திட்டமாகும். அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநில அரசுகளுடன் செய்துகொண்டிருக் கும் ஒப்பந்தம் மூலமாக இத்திட்டத்தை சர்வதேச இடம்பெயர்வோர் அமைப்பு செயல்படுத்த உள்ளது.
இந்திய சமுதாய நல நிதி
வெளிநாடுகளில் இக்கட்டான சூழலில் இருக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற் காக இந்திய சமுதாய நல நிதி என்ற நிதி உருவாக்கப்பட்டுள்ளது. குடியேற்ற சோதனை கட்டாயமாக்கப்பட்ட நாடுகளில் இருக்கும் இந்தியர்களுக்காகவே இத் திட்டம் முதலில் தொடங்கப்பட்டது. தற் போது 48 நாடுகளுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் பாதிக்கப் படும் இந்தியர்களுக்கு, குறிப்பாக தொழி லாளர்களுக்கும், பெண்களுக்கும் இந்த நிதி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக வெளிநாட்டில் இருக்கும் இந்திய தூதர கங்கள் கருதுகின்றன. இதையடுத்து, உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் இந்திய தூதரக அலுவலகங்கள் மூலமாக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அயல்நாட்டு இந்தியர் உதவி மய்யம்
அயல்நாட்டு இந்தியர் உதவி மய்யம் என்பது மத்திய அயல்நாடு வாழ் இந்தியர் விவகார அமைச்சகத்தால் ஏற்படுத்தப் பட்ட அமைப்பாகும். இதன் சார்பில் தயா ரிக்கப்பட்ட தாய்நாட்டை நோக்கி       அயல்நாட்டு இந்தியருக்கான ஒழுங்கு முறை மற்றும் முதலீடு கையேடு என்ற புத்தகம் 2011-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை புது டில்லியில் நடந்த 9-ஆவது அயல்நாடு வாழ் இந்தியர் விழாவில் பாரத பிரதமரால் வெளியிடப்பட்டது. வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் தாய்நாட்டுக்குமான பொரளாதார இணைப்பை பலப்படுத்தவும் மற்றும் தாய்நாட்டுடனான அவர்களது உறவுகளை வலுப்படுத்தவும் இந்த மய்யம் அனைத்து வழிகளிலும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
அயல்நாடு வாழ் இந்தியரின் இந்திய மேம்பாட்டு அறக்கட்டளை
அயல்நாட்டு வாழ் இந்தியர்களின் இந்திய மேம்பாட்டு அறக்கட்டளை என்பது நம்பகத்தன்மை வாய்ந்த, லாப நோக்கமில்லாத அறக்கட்டளை அமைப் பாகும். இந்த அறக்கட்டளையானது வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கருணை அடிப்படையில் வழங்கும் நிதியை பெற்று, இந்தியாவில் சமூக மேம்பாட்டு பணிகளுக்கு வழங்குகிறது. சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அறங்காவலர் குழு மூலம் இந்த அறக்கட்டளை நிர்வகிக் கப்படுகிறது. இந்தியாவில் சமூக பணிகளில் ஆர்வம் செலுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றுக்கும் கருணை அடிப்படையில் நிதி வழங்குவோருக்கும் இடையே ஒப்பந்தங்களை உருவாக்கி, அதன் வாயிலாக வெளிநாடு வாழ் இந்தி யர்கள் கருணை அடிப்படையில் வழங்கும் நிதி, இந்தியாவில் சமூக மேம்பாட்டு பணிகளுக்கு கிடைக்க செய்வது இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்க மாகும்.
இந்திய அறிவுசார் இணையம்
உலக அளவில் இந்தியாவின் அறிவாற் றலை ஒருங்கிணைத்து ஒரு இணையம் (நெட்வொர்க்) அமைப்பதே உலக அள விலான இந்திய அறிவுசார் இணையம் எனப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் அறிவாற்றல், புத்திக் கூர்மை, அனுபவம், சிறப்பாற்றல் ஆகிய வற்றை உள்ளடக்கிய அறிவு தொகுப்பை உருவாக்கி, அதை இந்தியாவின் சமூக மேம்பாட்டு பணிகளில் பயன்படுத்திக் கொள்வது இதன் நோக்கமாகும்.
பிரதமரின் வெளிநாடு வாழ் இந்தியர் ஆலோசனைக் குழு
இந்தியர்கள் பலர் உலகம் முழுவதும் பல துறைகளில் முன்னணியில் உள்ளனர். அவர்களது அறிவாற்றலும் அனுபவமும் இந்தியாவுக்கு பயனளிக்கக்கூடிய வகை யில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆலோசனை குழு ஒன்றை மத்திய அயல்நாடு வாழ் இந்தியர் விவகார அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த குழுவின் கூட்டம் புதுடில்லியில் 2011-ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடந்தது. குழுவின் 14 உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் பல்வேறு நாடுகளிலும் முன்னணியில் இருக்கும் இந்தியர்கள் ஆவர். இந்தியாவில் கல்வி, சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு பணிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு தொடர்பாக இவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இடம் பெயர்தல் திட்டம்
வெளிநாடுகளுக்கு செல்வது இடைஞ்சல்கள் இல்லாத வகையில் எளிதாகவும் ஒளிவுமறைவின்றியும் இருக்கும் வகையில் இ-இடம் பெயர்தல் (இ-மைக்ரேட்) என்ற திட் டத்தை செயல்படுத்த மத்திய அயல் நாடு வாழ் இந்தியர் விவகார அமைச் சகம் பரிந்துரை செய்துள்ளது. வெளி நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் எந்த வகையிலும் சிரமப்படாமல், முழு பாதுகாப்புடன், சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இடம் பெயர்வோருக் கான தலைமை பாதுகாவலர் மற்றும் பாதுகாவலர் அலுவலகங்களின் செயல் திறன், ஒளிவுமறைவில்லாத் தன்மை, பொறுப்பு ஆகியவற்றை அதிகரித்தல், இடம் பெயர்வோர் பற்றிய தகவல்களை உடனுக்குடன் புதுப்பித்தல், இத்தக வல்கள் உடனே கிடைக்க செய்தல், வேலைக்கு ஆள் எடுக்கும் பணிகளை கணினிமயமாக்குதல், பாதுகாவலர் அலுவலகங்கள் மற்றும் வேலை வாய்ப்பு ஏஜென்சிகளின் திறனை மதிப்பிடுதல், இடம் பெயர்தல் தொடர்பான குற்றங் களை தீவிரமாக கண்காணித்தல் ஆகியவையும் இத்திட்டத்தின் இதர நோக்கங்களாகும்.

இதன்மூலம் வெளி நாடுகளுக்கு செல்வோர் துன்புறுத்தப் படுவது, தனிநபர் சந்திக்கும் தொந் தரவுகள், ஊழல் போன்றவை தடுக்கப் படும். இது தொடர்பான கொள்கை களை உருவாக்க தகவல்களை வழங்குவது, வெளிநாடு வாழ் இந்தி யர்கள் தொடர்பான இதழ்களை வெளி யிடுவது, வெளிநாடு வாழ் இந்தியர் களின் குறைகளை போக்குவது ஆகிய வையும் இத்திட்டத்தின் முக்கிய பணி களாக இருக்கும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...