Saturday, August 27, 2011

அமங்கலமோ!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் உலக நாதன் கேள்வி ஒன்றை எழுப்பினார். திருத்துறைப்பூண்டியில் அரசு குடியிருப்புகள் கட்ட அரசு ஆவன செய்யுமா?

இயலாது என்று அமைச்சர் வைத்தியலிங்கம் பதில் சொன்னார். உடனே முதல் அமைச்சர் ஜெயலலிதா எழுந்து முதன் முறையாக அமைச்சர் பதில் அளிக்கும்போது சாதகமான மக்கள் விரும்புகிற பதிலாக அமைய வேண்டும்.

இந்தக் கேள்வியைத் தேர்வு செய்த சபாநாயகராகிய நீங்கள் எதிர்காலத்தில் சாதகமான கேள்விகளுக்கு அனுமதி வழங்குங்கள் என்றார்.

சபாநாயகரும் தன் தவறைத் திருத்திக் கொள்வதாகக் கூறினார். (சபாநாயகர் அப்படிக் கூறலாமா என்பது ஒரு புறம் இருக்கட்டும்) முதன் முதலாகக் கேள்விக்குப் பதில் சொல்லும்போது இயலாது, முடியாது என்று சொல்லுவது அமங்கலமாம்! அத்தகு வார்த்தைகளை உச்சரிக்கக் கூடாதாம்! புரிகிறதா? வாழ்க அண்ணா நாமம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...