Monday, August 29, 2011

ஹசாரே கூட்டத்துக்கு அருந்ததிராய் கண்டனம்


மக்கள் ஆதரவு.. மக்கள் ஆதரவு.. என்கிறார்கள். இந்த மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக, ஆயுதப் படைகளுக்கு வழங்கிய சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி பட்டினிப் போராட்டம் மேற்கொண்டு வரும் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவளிக்கும் மக்கள் அல்ல. இந்த, மக்கள் பாஸ்கோ திட்டத்துக்கு எதிராக, கடந்த ஆறு வருடங்களாகப் போராடி வரும் ஜகத்சிங்பூர் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் அல்ல. இந்த மக்கள் கங்கை ஆறு மாசுபட்டு வருகிறது அதனால், சுரங்கத் தொழிலைத் தடை செய்ய வேண்டும்! என்று கூறி பட்டினிப் போராட்டம் நடத்திச் செத்துப் போன சுவாமி நிகாமானந்த்துக்கு ஆதரவு அளித்தவர்கள் அல்ல. இந்த மக்கள் நியாம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் நடத்தி வருகிற சுரண்டலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பழங்குடியினருக்கு ஆதரவு அளிப்பவர்கள் அல்ல. இந்த மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகத் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் மக்களுடன் நிற்பவர்கள் அல்ல. இந்த மக்கள் ஹரியானாவிலும், நொய்டாவிலும் தற்கொலை செய்து சாகும் விவசாயிகளின் நிலையைக் கண்டு மனம் கொதித்தவர்கள் அல்ல. இந்த மக்கள் நர்மதா அணையால் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் ஆதிவாசிகளின் நிலையை உணர்ந்தவர்கள் அல்ல. ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் ஆதரவு  பெருகுகிறது என்கிறார்கள். உண்மையில் இது வெறும் நாடகப் பிரச்சாரம்! என்று காட்டத்தோடு வெடித்திருக்கிறார் அருந்ததிராய்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...