Friday, August 26, 2011

பள்ளியில் நடந்த கதை

நான் சாத்தாங்குளம் பக்க மிருக்கும் இட்டமொழி என்ற ஊரி லுள்ள உயர்நிலைப்பள்ளியில், அங் குள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் போது 1947ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு.

ஒரு நாள் இரவு 11 மணியளவில் நாங்கள் படிக்கும் அறையில் இரவு படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக் கும் போது, பக்கத்திலுள்ள பெண் கள் பள்ளியில், தங்கும் விடுதியில் திடீரென்று மாணவியர் அலறவே, எங்கள் பள்ளி மாணவர்கள் திருடனாயிருக்கலாமென்று நினைத்து உதவிக்கு ஓடினார்கள். அங்குப் போய்ப் பார்த்தால் என்ன காரணம் என்றே தெரியவில்லை. அவள் அலறி னாள், நான் அலறினேன், அவள் ஓடினாள், நான் ஓடினேன் என்று மாணவியர் கூறினார்களே யொழிய உண்மை தெரியவில்லை. ஒரு எலியோ தவளையோ, பாச்சானோ, கரப்பான் பூச்சியோ சேலைக்குள் நுழைந்தால் போதும், ஓலம் கிளம்பி விடும். அது 33 1/3 சதவிகிதம் ஆட்சியிலும், அதி காரத்திலும் பங்கு கேட்கும் பெண்களின் இயற்கை யான பயந்த சுபாவம்தான். அதனால்தான் பேய் பிடித்தவர்கள் பெரும்பான்மையினர் பெண்களா யிருப்பார்கள். அது போலவே போலிச்சாமியாரிடம் ஏமாறுபவர்களும் பெண்களாகவே இருப்பார்கள்.

அன்று எங்கள் விடுதியிலிருந்து ஓடி பள்ளி மாணவியருக்கு உதவச் சென்று திரும்பியவர்களில் ஒரு மாணவனுக்கு மனநிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. பேய் பிடித்துவிட்டதென்று கூறி னார்கள். அந்தப் பள்ளிக்கு ஓடின வழியில், இறந்த வர்களின் புதை குழிகள் இருந்ததாக கூறினார்கள்.

அதனால் அந்த மாணவன் அதோ ஒருவன் தெரிகிறான், இதோ வருகிறான், என் கழுத்தை நெறிக்கிறான் என்று கண் விழிகள் மிரள பிதற்றிக் கொண்டிருந்தான். எங்கள் பள்ளி விடுதிக் காப்பாளர் விவரம் தெரிந்தவராய் இருந்தபடியால், பேய்க்குப் பார்ப்பவர்களிடம் அனுப்பாமல், அருகில் மருத்துவமனைகள் அப்போது இல்லாததால், நாசரேத்திலுள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு போய் அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்கள். பேய் ஓடிவிட்டது. மறுநாள் சுகமாய்ப் பள்ளி விடுதிக்கு வந்தான்.

இந்த நிகழ்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்பொழுதெல்லாம் சிற்றூர்களில் பேய் பிடித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுண்டு. காட்டில் விறகு பொறுக்கப் போன இடத்தில் இசக்கி அம்மன் பிடித்துவிட்டாள், கொள்ளிவாய்ப் பிசாசு அடித்து விட்டது என்று கதை விடுவார்கள். ஊரில் காலராவோ, வைசூரியோ வந்தால் அம்மன் தொந்திரவு என்று சொல்லி கோயில்களில் கோடைவிழா நடத்துவார்கள். அந்தக் கோடை விழாதான் கொடை விழாவாக மாறி - குடை விழா என்று இப்பொழுது சொல்லப்படுகிறது. எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு நாள் விடுப்பு கேட்டு உயர் அதிகாரிக்கு மடல் எழுதியவர், ளுசை, ஐ அயல நெ பசயவேநன டிநே னயல டநயஎந கடிச ரஅநெசடடய கநளவஎயட அல எடைடயபந என்று எழுதியிருந்தார். மேலும் சாதாரண தலைவலி காய்ச் சலுக்குக் கூட பூசாரிகளிடம் போய் மந்திரித்துக் கொள்ளுவார்கள்.

இப்போது கல்வியறிவும், அரை குறை மருத்துவ அறிவும் வந்து விட்டதால், தலைவலி, காய்ச்சலுக்கு கடையில் வலி நிவாரண மாத்திரை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ளுவார்கள். பின்னால் சுகமாக வில்லையென்றால் மருத்துவரிடம் ஓடுகிறார்கள். அந்தக் காலத்தில் டைபாய்ட் போன்ற காய்ச்சல் வந்து 105 டிகிரிக்கு காய்ச்சல் ஏறி, நோயாளி புலம்பும்போது பேய் பிடித்திருக்கிறது என்று கருதி பூசாரிகளிடம் ஓடினார்கள். இன்று மருத்துவர் களிடம் செல்லுவார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.

நூல்: மூடநம்பிக்கைகள் பலவிதம் (தர்மராஜ் ஜோசப், எம்.ஏ.,)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...