Friday, July 1, 2011

பூணூல் மகிமை

கடந்த 29.5.2011 அன்று பெரியார் திடலில் எம் அருமை நண்பர் திருவாரூர் இரா.தியாகராசன் (சின்ன குத்தூசி) அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் எந்த ஒரு பத்திரிகை யாளருக்கும் இப்படிப்பட்ட ஓர் இரங்கல் கூட்டம் நடைபெற்றதில்லை. அவ்வளவு சிறப்பாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவரைப் பற்றி பேசுகிற போது தொடக் கத்திலேயே ஒன்றை நாம் குறிப்பிட் டோம். பார்ப்பனப் பெற்றோர்க்குப் பிறந்த தியாகராசன் சூத்திரராக மரித்தார் என்று பேசினோம். அது எப்படி என்பதை எம்மால் அக்கூட்டத்தில் மிக விளக்கமாக எடுத்துச் சொல்ல முடியவில்லை; போதுமான நேரமில்லை.

பிராமண, ஷத்திரிய , வைசிய, சூத்திர நால்வர்ணத்தில் முதல் மூன்று பிரிவினருக்கு பூணூல் அணியும் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. சரி, பூணூல் என்பது எங்கிருந்து வந்தது? படைப்புக் கடவுளான பிரம்மா பிறக்கிற போதே பூணூலோடு தோன்றினார். அதனால் நால்வர்ண வரிசையில் முதல் முப்பிரிவினர் உயர்ந்தோர் ஆதலால் பூணூல் அணிகிற பழக்கம் உண்டா யிற்று. அதற்கென்று மரபு, சம்பிர தாயங்கள், யாகங்கள், மந்திரங்கள் என்று தோன்றலாயின. பூணூல் அணிவதைப் பூணூல் கல்யாணம் என்றும் உபநயனம் என்றும் கூறுவர்.

மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...