Saturday, June 25, 2011

எங்க மகேசனைப் பார்த்தீங்களா - அந்த மணல்மேடு புழுதிக்குள்ளே!

இறங்கிவிட்டது! இறங்கி விட்டது!! செவ்வாய் கிரகத்திலே வைக்கிங் இறங்கி விட்டது! செவ்வாய் கிரகத்தின் படங்கள் பூமிக்கு வந்து கொண்டிருக் கின்றன. அந்த வைக்கிங் காமரா அனுப்பிய புகைப்படங்களிலே.... கங்கையை தலையில் சுமந்து களி நடனம் புரியும் எங்கள் சிவபெருமான் படம் விழுந்து விட்டதா? சுடர் முகம் தூக்கி சூரனை அழித்த, சூலாயுதக் கடவுள் சுப்ரமணியன் போஸ் கிடைத்ததா? தங்கத் தாமரையில் வீற்றிருக்கும் எங்கள் குலச் செல்வி சரசுவதி படம் வந்து விட்டதா? வள்ளியோடு பள்ளிகொண்டு துள்ளி விளையாடும் எங்கள் சல்லாப முருகனுமா கிளிக் ஆகவில்லை! கூரான கற்கள் படிந்த புழுதிகளையும், மணல் மேடுகளையும் தான் வைக்கிங் படம்பிடிக்க முடிந்ததா? அய்யோ, செவ்வாய் கிரகத்தில் எங்கள் கடவுள்கள் ஒன்று கூட இல்லையா? அவர்களெல்லாம் போன இடம் எங்கே? வாழும் இடம் எங்கே? வைக்கிங்கே, வைக்கிங்கே! அமெரிக்கா அனுப்பிய வைக்கிங்கே!! எங்கேயாவது, எப்படியாவது எங்கள் கடவுள்களை தேடிப் பிடித்து, அவர்களின் முகவெட்டை இங்கே பூமிக்கு அனுப்பி, இங்கே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் நாத்திக பிண்டங்களின் நாவை அடக்க மாட்டாயா? வாயைப் பிளந்து வைகுண்டத்தைக் காட்டிய வனின் காலடி பிடித்துக் கிடக்கும் காருண்ய சீடர்கள் நாங்கள்! கடைசியில் எங்கள் வாயிலும் வைக்கிங்கே, நீ எடுத்து வரும் மண்தான் விழப் போகிறதா? அந்தோ, வைக்கிங்கே! அய்யகோ விஞ்ஞானமே! அழுது புலம்புகிறோம்; எங்களை ஆற்றுவாரில்லையா? தேற்றுவாரில்லையா? பூமியை ஆட்டி வைக்கும் எங்கள் புண்ணிய தெய்வங்களே, நீங்கள் உண்மையிலேயே எங்கேதான் இருக்கிறீர்கள்? சொல்லித் தொலையுங்களேன்! அங்கேயாவது அமெரிக்காவைப் பிடித்து ஒரு விண்வெளிக் கோளை அனுப்பி வைக்க முயற்சி செய்கிறோம்.- ரா விடுதலை, 22.7.1976 (சென்சாரால் வெட்டப்பட்ட கட்டுரைகளில் இதுவும் ஒன்று)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...