Friday, June 24, 2011

உலகில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுதலை வாசிக்கப்படுகிறது

தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் சேலம் மண்டல கலந்துரையாடலில் பெருமித உரை

சேலம், ஜூன் 24- சேலம் மண்டலத்தின் தருமபுரி-கிருட்டிகிரி மாவட்டங்கள் பங் கேற்ற கழக கலந்துரை யாடல் கூட்டம் கிட்டி னகிரி பீட்டர்ஸ் பார்க் கில் 22.6.2011 புதன் கிழமை காலை 10.30 மணிக்கும் நடைபெற்றது.

மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்திற்கு மண்டல தலைவர் பழனி.புள்ளை யண்ணன் தலைமை வகித்து பேசினார். நிகழ்ச்சிக்கு கிருட்டின கிரி மாவட்ட தலைவர் தா.திருப்பதி, தருமபுரி மாவட்ட தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் கள் கிருட்டினகிரி கோ. திராவிடமணி, தருமபுரி வீ.சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

மண்ல திராவிடர் கழகச் செயலாளர் காவேரிப்பட்டணம் மு.தியாகராசன் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.

தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்பு ராஜ் விடுதலை சந்தித்த பல்வேறு வரலாற்று தகவல்களை ஒலிப்பட காட்சி (சிலைடு) மூலம் போட்டு காண்பித்து கழக தலைவரின் எண் ணங்களை பிரதிபலிக் கும் வகையில் பல்வேறு செய்திகளை எடுத்துக் கூறி கழகத்தின் அனைத்து பொறுப்பாளர்களும், தோழர்களும் விடுதலை சந்தா சேர்ப்புப் பணி யினை விரைந்து முடித்து அளிக்க வேண்டும் என்று சிறப்புரையாற் றினார். மேலும் இயக் கத்தின் பல்வேறு பணி களை எடுத்துக் கூறி னார்.

நிகழ்ச்சியில் கழக துணைப்பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில இளைஞரணி செயலாளர் இரா. ஜெயக்குமார், மாநில மாணவரணி துணைச் செயலாளர் மு.சென்னி யப்பன், மாநில பகுத்த றிவாளர் கழக துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி, அண்ணாசர வணன், வேலூர் மண் டல தி.க. செயலாளர் பழ.வெங்கடாசலம், ஆகியோர் கருத்துரை யாற்றினர்.

கூட்டத்தில் தரும புரி மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலை வர் ஊமை.ஜெயராமன், செயலாளர் கிருட்டின மூர்த்தி, மாவட்ட தி.க மேனாள் செயலாளர் கரு.பாலன் மாவட்ட துணைச் செயலாளர் சிசுபாலன், மாவட்ட அமைப்பாளர் பீம.தமிழ்பிரபாகரன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழில ரசன், செயலாளர் வி.ஜி. இளங்கோ, கிருட்டின கிரி மாவட்ட அமைப் பாளர் தா.சுப்பிரமணி யம், பொதுக்குழு உறுப் பினர் ஓசூர் தா.சுப்பிர மணியம், பொதுக்குழு உறுப்பினர் ஓசூர் மு. துக்காராம், கிருட்டி னகிரி மாவட்ட இளை ஞரணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட ப.க. அமைப்பாளர் மு. வேடியப்பன், கிருட்டி னகிரி ஒன்றியத் தலை வர் மோ.செந்தில்குமார், செயலாளர் உண்மை த.மாது, அமைப்பாளர் சி.பத்மநாபன், காவேரிப் பட்டணம் ஒன்றிய தலை வர் த.அறிவரசன், செய லாளர் சி.சீனிவாசன், கிருட்டினகிரி நகர இளைஞரணி தலைவர் தந்தை பெரியார் ஆட்டோ அ.கோ. இராசா, தருமபுரி வாசகர் வட்டத் தலைவர் பரிமளம், தருமபுரி மாவட்ட துணைத் தலைவர் க.கதிர், நகர தலைவர் துரை.சித் தார்த்தன், செயலாளர் உண்மை சரவணன், இளைஞரணி காரல் மாக்ஸ், பருகூர் மேனாள் ஒன்றிய செயலாளர் கோ.அன்பழகன், உள் பட கழக நிருவாகிகள் பேசினர்.

நிகழ்ச்சியில் நகர கழக அமைப்பாளர் கிருட்டினகிரி கா. மாணிக்கம், தேவ.சமுத்தி ரம், கி.வேலன், சரவணன், மத்தூர் ஒன்றிய தலைவர் கி.முருகேசன், மேனாள் மாவட்ட செயலாளர் கலை புகைப்பட நிலைய அரங்க ரவி, கிரு. கிருட்டினன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் திராவிட எழில், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அகரம் நா.சதீஷ்குமார், பையூர் ப.பெரியசாமி, பெ.செல்வேந்திரன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் செ.ப.மூர்த்தி, சூளக்கரை பொன்முடி, பொ.பிரபாகரன், மைக் கேல், புருசோத்தமன், ரெ.பிரபாகரன், கு.தமிழ் குடிமகன், கந்திலி வையா புரி, கோ.திருப்பதி, செ. சிவராசு உள்பட நூற்றும் மேற்பட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கிருட்டினகிரி மாவட்ட தி.க அமைப்பாளர் தா. சுப்பிரமணியம் நன்றி கூறினார்.

இரண்டாம் நிகழ்வு

சேலம் மண்டலத்தின் சேலம், மேட்டூர், ஆத் தூர், கழக மாவட்டங் களின் கலந்துரையாடல் கூட்டம்: 22.6.2011 புதன் கிழமை மாலை 4 மணிக்கு, சேலம் தாத காப்பட்டி டாக்டர் மரகதம் மாரியப்பன் மருத்துவமனை வளா கத்தில் நடைபெற்றது.

சேலம் மண்டல தலைவர் பழனி.புள்ளை யண்ணன் தலைமை தாங்கினார். சேலம் மாவட்ட தலைவர் மு. செல்வராஜ், மேட்டூர் மாவட்ட தலைவர் சி.சுப் ரமணியம், சேலம் மாவட்ட செயலாளர் அரங்க.இளரவசன், ஆத் தூர் மாவட்ட செய லாளர் விடுதலை சந்தி ரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சேலம் மண்டல செயலாளர் மு.தியாகராஜன் வர வேற்புரையாற்றினார். திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்பு ரையாற்றினார்.

அவர் தமதுரையில்:

உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற கட்சிகளெல்லாம் தேர் தலில் வெற்றி-தோல் வியைப் பற்றி கவலைப் படுகிறார்கள். ஆனால் நாம் அடுத்த தலை முறையின் நலனைப் பற்றி கவலைப்படு கிறோம். நம்மால்தான், நமது இயக்கத்தினால் தான் இன்று தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ் கிறார்கள். அண்மை யில் அமெரிக்கா சென் றிருந்தபோது இளைய தலைமுறையை சார்ந்த இளைஞர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. அப் போது அவர்களுக்கு நமது இயக்கத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறும் வாய்ப்பு கிடைத் தது. அதன் பிறகு தற் போதும் அவர்கள் தொடர்ந்து இணைய தளத்தின் மூலம் விடு தலை ஏட்டினைப் படித்து வருகிறார்கள்.

ஏனெனில் இவ்வாறு உலகின் பல்வேறு நாடு களில் அதாவது 90-க்கும் மேற்பட்ட நாடு களில் விடுதலை இணையதளத்தின் வாயிலாக வாசிக்கப் படுகிறது. தமிழில் முதலில் ஈ-பேப்பர் எனும் இணையதளத் தின் வாயிலாக வெளி வந்த முதல் நாளேடு விடுதலைதான். இதைப் போலவே நமது விடு தலை தான் இணைய தளத்தின் அதிநவீன வசதிகளைப் பயன் படுத்தி சுடச்சுட செய்தி களை விடுதலை குழுமம் வெளியிடுகிறது.

இணையதளத்தில் பாணியாற்றுவதற்கென்றே பெரியார் திடலில் தனியாகக் ஒரு குழு இயங்கிக்கொண்டு வருகிறது. எதிர்காலத் தில் மிக விரைவில் உங்கள் செல்பேசியில் விடுதலையை வாசிக் கும் நிலை உருவாக இருக்கிறது. எனவே விடுதலைதான் நமது மூச்சுக்காற்று. அதற்கு நீங்கள் அதிக அளவில் சந்தாக்களை திரட்டித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். அய்.நா. அலுவலகம் முன்பாக ஈழத்தமிழர் களுக்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டி லிருந்து பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதன்மூலம் திராவிடர் கழகம் என் றென்றும் ஈழத்தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து பணியாற்றி வருவதும் உலகம் முழு வதும் வாழும் தமிழர் களிடம் மிகுந்த தாக்கத் தினை ஏற்படுத்தி இருக் கிறது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 25 முதல் ஜூலை 2ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த ராஜ பக்சேவை கைது செய்யக் கோரி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.-இவ்வாறு தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் பேசினார்.

கழக துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், மாநில இளை ஞரணி செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில மாணவரணி துணை செயலாளர் நம்பியூர் மு.சென்னியப் பன் மற்றும் சி.இராமன், எடப்பாடி எம்.எஸ். அழகரசு இளவழகன், பூ.வடிவேல், சீ.பூபதி, மொட்டையன், தி.இ.தமிழர் தலைவர், பெரியார் பற்றாளர் டி.ஏ.சாமி, சுப்ரமணியன், கே.வி.அன்பு நகர செயலாளர், எடப்பாடி, ஆ.ஜெயபால் தலைவர் காடையாப்பட்டி, பெ.சவுந்தர்ராஜன், கவிஞர் எஸ்.முனுசாமி, ப.கலைவாணன், அண்ணாதுரை ஆத்தூர் நகர தலைவர், கடவுள் இல்லை சிவக்குமார், த.வானவில் ஆத்தூர் மற்றும் மூன்று மாவட்ட தோழர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. அறிவுலக பேராசான் தத்துவத் தலைவர் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மை யார், தமிழர் தலைவர் ஆகியோர் ஆசிரியர் களாக இருந்து தமிழர் களின் கேடயமாக விளங்கி வரும் விடுதலை தமிழ்நாளேட்டினை நூலகங்களில் இருந்து தடைசெய்த தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக் கிறது.

2. அனைவருக்கும் சம மான கல்வி கிடைக்க வழி செய்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட சமச்சீர் கல்வியாணையை தடுக் கும் வகையில் செயல் பட்டு, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி நலனை கருத்தில் கொள்ளாமல் விரோத மாய் செயல்படும் தமிழ் நாடு அரசினை இக் கூட்டம் கண்டிக்கிறது.

3. தமிழர்களின் கேடய மாய், அறிவுமாய் திகழ்ந்து வரும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளே டான விடுதலைக்கு சேலம் மாநகர், ஆத்தூர், மேட்டூர் ஆகிய கழக மாவட்டங்களின் சார்பில் 500 சந்தாக்கள் திரட்டி வழங்குவது என தீர்மா னிக்கப்படுகிறது.

4. ஆகஸ்ட் 13இல் நாகப்பட்டினத்தில் நடைபெறும் திராவி டர் மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு தனிப்பேருந்தில் மாணவர்களைப் பங்கேற்க செய்வது என இக்கூட்டம் தீர் மானிக்கிறது.

5.கிருட்டினகிரி, தருமபுரி மாவட்டக் கழகங்களின் சார்பில் 400 .விடுதலை சந்தாக் களை திரட்டி தமிழர் தலை வரிடம் வழங் குவது என தீர்மானிக் கப்படுகிறது

6. காவேரிப்பட் டணத்தில் அமைக்கப் பட உள்ள உலகத் தலைவர் தந்தை பெரி யார் சிலை திறப்பு விழாவினை மிகுந்த மகிழ்ச்சியுடன் நடத் துவது எனவும், திறப்பு விழாவிற்கு தமிழர் தலைவர் அவர்களை தேதி தந்துதவுமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட தீர்மா னங்களை சேலம் மாவட்ட செயலாளர் அரங்க. இளவரசன் வாசிக்க, கூட்டத்திற்கு வந்தவர்கள் கைதட்டி தீர்மானங்களை வர வேற்றனர்.

மேலும் இக்கூட்டத் தில் சேலம் மாவட்ட துணைச் செயலாளர் கமலம் மாதேஸ்வரன் நன்றி கூற கலந்துரை யாடல் இனிதே முடி வுற்றது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...