Thursday, February 7, 2008

எந்த எல்லைக்கும் சென்று கலவரம் விளைவிக்கத் திட்டம்

தென்காசி ஆர்.எஸ்.எஸ்., அலுவலக குண்டுவெடிப்பு
இந்து முன்னணியினர் கைது - எதைக் காட்டுகிறது?



எந்த எல்லைக்கும் சென்று கலவரம் விளைவிக்கத் திட்டம்

உளவுத்துறை தீவிரமாக விசாரணை நடத்தட்டும்!




தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை



தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை இந்து முன்னணியினரே குண்டு வைத்துத் தகர்த்துள்ள பின்னணி குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் கடந்த 24 ஆம் தேதி இரவு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பேருந்து நிலைய குண்டுவெடிப்பில் வெற்றிலை வியாபாரி உள்பட 2 பேர் காய மடைந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்து முன்னணிப் பிரமுகர் குமார் பாண்டியனின் (வயது 40) அண்ணன் உள்பட 3 பேரை குண்டுவெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடிக் காத குண்டு மற்றும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து தென்மண்டல அய்.ஜி. சஞ்சீவ்குமார், டி.அய்.ஜி. கண்ணப்பன், எஸ்.பி. சிறீதர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தொடர்பாக, தென்காசி மலையான் தெருவைச் சேர்ந்த சமீபத்தில் கொலையுண்ட இந்து முன்னணி தென்காசி நகர பிரமுகர் குமார் பாண்டியனின் அண்ணன் ரவி பாண்டியன் (வயது 42), குமார் என்ற கேடிசி குமார் (வயது 28), நாராயண சர்மா (வயது 26) ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளோம்.ரவிபாண்டியனிடம் நடத்தப் பட்ட விசாரணையில், தனது வீட்டில் 4 பேர் பலியான போதும் இந்துக்களிடம் பெரிய அளவில் எழுச்சி ஏற்படவில்லை. போதிய ஆதாரம் கிடைக்கவில்லை. இப்படி ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தால், அவர்கள் ஒன்றாக சேர்வார்கள் என்ற நோக்கத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தார்.

அவருக்குச் சொந்தமான கேபிள் டி.வி., அறையில் வைத்து குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 14 குண்டுகளை தயாரித்து, அவற்றை இரண்டு இரண்டாக சேர்த்து 7 குண்டுகளாக மாற்றி உள்ளனர். கடந்த ஜூலை மாதத்திலிருந்தே குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு தான் 6 பேர் கொலை நடந்துள்ளது. இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிந்துள்ளது. 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் பலர் கைதாவார்கள்.ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிகுண்டு வைப்பதற்கு முன்பாக, மின்சார ப்யூஸ் கேரியரை உருவி மின் தடையை ஏற் படுத்தியுள்ளனர். சுவிட்ச் ஆன் செய்த 20 அல்லது 30 செகண் டுக்குள் வெடிக்கும் வகையில் குண்டுகளை வடிவமைத்துள்ளனர். - இவ்வாறு அவர்கள் கூறினர்.(தினகரன், 5.2.2008, பக்கம் 6)
இந்தச் செய்திகள் தெரிவிப்பது என்ன?
இந்தச் செய்திகள் தெரிவிக்கும் பாடம் என்ன? இந்து முன்னணி வகையறாக்கள் திட்டமிட்டு மதக் கலவரத்தை உண்டாக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது வெளிப்படை. மண்டைக் காடு கலவரம்பற்றிய ஜஸ்டிஸ் திரு. பெ. வேணுகோபால் அவர்களின் அறிக்கையில்கூட ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள் எப்படியெல்லாம் மதக்கலவரங்களைத் தூண்டி வருகிறார்கள் என்பது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
சதுமுகையில் செருப்பு மாலை போட்டவர்கள் யார்?
ஈரோடு - சத்தியமங்கலம் அருகில் சதுமுகை என்ற ஊரில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலைக்குச் செருப்பு மாலை போட்டும், முனீஸ்வரன் சிலையைச் சிதைத்தும் மதக் கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டு அது தொடர்பாக இரண்டு இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்ட செய்தியை இந்து ஏடே வெளிப்படுத்தியதையும் இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்வது பொருத்தமானது. (தி இந்து, 18.2.2002).கலவரம் விளைவிப்பதற்காக அவர்கள் அலுவலகத்தை அவர்களே குண்டு வைத்துத் தகர்க்கின்றனர் என்றால், இவர்கள் வேறு எதைத்தான் செய்யமாட்டார்கள்?சதி வேலைநாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஒரு பக்கத்தில் பிரச்சாரம் செய்துகொண்டே இன்னொரு பக்கத்தில் அப்படி சொல்பவர்களே மதக் கலவரங் களை விளைவிக்கக் கத்தி தீட்டு வதும் எத்தகைய சதி வேலை!உளவுத் துறை தீவிரமாக விசாரிக்கட்டும்!காவல்துறை - உளவுத் துறை இந்த இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கண்காணித்துக் கொண்டே இருக்கவேண்டும். கண்மூடி கண் திறப்பதற்குள் ளாகவே விஷ விதைகளை ஊன்றிடக் கூடிய பயிற்சி பெற்ற ஆபத்தானவர்கள் இவர்கள்.தென்காசி குண்டுவெடிப்புத் தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்றைய ஏடுகள் கூறுகின்றன.இவர்களைத் தீவிரமாக விசாரித்தால், இவர்களின் பின்னணி யில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் - இந்தக் கும்பலின் தொடர்ச்சி எங்கெங்கெல்லாம் செல்லுகிறது என்பதைக் கண்டு பிடித்துவிட முடியும்.இந்தத் திசையில் புலனாய்வு தீவிரமாகட்டும்!







தலைவர், திராவிடர் கழகம்.

2 comments:

யாழ் Yazh said...

matha kalavarathai thoondum RSS veriyargalai thookiledavenum.

Unknown said...

இந்த தினமலத்தின் தலைப்பை பாருங்கையா - '4 இளைஞர்கள் கைது'. '4 இந்துத்வ வியாதி தீவிரவாதிகள் கைது' என்றல்லவா போட்டிருக்கணும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...