Monday, February 4, 2008

தினமணி கக்கும் நஞ்சு


நாட்டு நடப்பு
தமிழர் பண்பாட்டைப்பற்றி தினமணிகள் பேசலாமா? தமிழர் பண்பாடு என்றால் என்ன? என்று எழுத்தாளர் சிவசங்கரி ஒருமுறை தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களைப் பார்த்து ஒரு பேட்டியில் வினா எழுப்பினார்.அதுவா? - அம்மாவை வாடி என்றும், அக்காவை போடி என்றும் சொல்லாததுதான் தமிழர் பண்பாடு என்று கூறினார்.தினமணி (3-2-2008)யின் முதல் பக்கம் கார்ட்டூனை பார்க்கும்பொழுது, தமிழர்களை கொச்சைப்படுத்துவதில் அவர்கள் காட்டும் வெறி இன்னும் அடங்கவில்லை என்பதைதான் வெளிப்படுத்துகிறது. கணவன் பேசுவதை மனைவி ஒட்டுக் கேட்பதும், மருமகள் பேசுவதை மாமியார் ஒட்டுக் கேட்பதும், பிள்ளைகள் பேசுவதை பெற்றோர்கள் ஒட்டுக் கேட்பதும் தமிழர் பண்பாடுதானே என்று கருத்துப் படம் வெளியிட்டிருக்கிறது தினமணி.டெலிபோனில் ஒட்டுக் கேட்பது பற்றிய பிரச்சினையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தமிழர்களை இழுத்துக் கொச்சைப்படுத்த வேண்டுமா? டெலிபோனில் ஒட்டுக் கேட்கப்படுவதற்கும் இதற்கும் என்ன தொடர்பு.பிரச்சினை எதுவாயிருந்தாலும் தமிழர்களை இழிவுபடுத்த வேண்டும் என்கிற திமிரும், ஆணவமும்தானே இதன் பின்னணியில் இருக்கிறது.ஒட்டுக் கேட்பது இயல்புதானே என்று பொதுவாகச் சொன்னால்கூட அதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த ஒட்டுக் கேட்பது என்பது தமிழர் பண்பாடுதான் என்று தினமணிகள் எழுதுவது - தமிழினத்தின் மீது பார்ப்பனர்களுக்கு இருக்கும் அடக்க முடியாத திமிர் பிடித்த துவேஷம் என்பது அல்லாமல் வேறு என்ன?ஒட்டுக் கேட்பது, போட்டுக் கொடுப் பது, உயர் பதவிகள் பெறுவதற்காக மேலதிகாரிகளை அந்தரங்கத்தில் சந்திப்பது என்பதெல்லாம் பார்ப்பன வட்டாரத்துக்குக் கைவந்த கலை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!பண்பாட்டைப் பற்றியெல்லாம் பார்ப்பனர்கள் பேச ஆரம்பித்தால் அது எங்கே கொண்டு போய்விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண் டும், கண்ணாடி வீட்டிலிருந்தா கல் எறிவது?பெற்ற மகளையே பெண்டாண் டான் படைப்புக் கடவுள் பிர்மா - என்று புராணம் எழுதி வைத்துக் கொண்டுள்ள கூட்டமா பண்பாடு களைப் பற்றிப் பேசுவது? கோள் சொல்லுவதற்கும், சண்டை மூட்டி விடுவதற்கும், ஒட்டுக் கேட்பதற் கும் என்றே நாரதன் என்ற கடவுளை கற்பித்துள்ள கூட்டத்திற்கு இதுமாதிரி பிரச்சினைகளைப்பற்றி பேசவோ, எழுதவோ அருகதை உண்டா?தமிழைப் பேசிக் கொண்டு, தமிழால் பிழைத்துக் கொண்டு, தமிழிலேயே பத்திரிகைகளை நடத்தி, தமிழர்களின் பணத்தால் வயிறு நிரப்பிக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் - தமிழர்களைக் கொச்சைப்படுத்துவது என்பதையே தம் ரத்த ஓட்டமாகக் கொண்டு திரிகிறது என்பதைத் தமிழர்கள் கருத்தூன்றிக் கவனிக்க வேண்டாமா?தமிழ் செம்மொழியானால், நாலு பிளேட் பிரியாணி கிடைக்குமா? என்று தினமலர் கேள்வி கேட்கிறது. தைத் திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று கலைஞர் அறிவித்தால் - கிடந்தது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மணை யிலே வை என்ற கதைதான் என்கிறது கல்கி.வேறு எது எதற்கெல்லாமோ கச்சை கட்டிக் கொண்டு கிளப்பும் நம் தமிழர்களும், தமிழர் அமைப்புகளும் - இந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களைச் சீண்டுவதையே, கொச்சைப்படுத்துவதையே பிழைப்பாகக் கொண்டு செயல்படுகிறார்களே, இவர்களின் பக்கம் கவனத்தைத் திருப்ப வேண்டாமா?தினமணி மீண்டும் ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் கையிலே தஞ்சம் புகுந்துவிட்டது. திருவாளர் சோ வின் பினாமியாக இருக் கக் கூடிய ஒருவர், தினமணியை ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ ஏடாக அறிவிக்கும் வரை ஓயமாட்டார் என்று தெரிகிறது.
- மயிலாடன்


3 comments:

Thamizhan said...

தமிழால் தமிழ்நாட்டில் தமிழர்களிடம்
உஞ்ச விருத்தி செய்து கொண்டு
தமிழை,தமிழினத்தைத்,தமிழினத் தலைவர்களைக் கிண்டலும் கொச்சையும்
படுத்தும் தினமல்ர்,தினமணி,துக்ளக்
அசிங்கங்களைத் தொடக்கூடாது என்று அனைத்துத் தமிழர்களும்
அவர்களது உறவினர்களையும்
நண்பர்களையும் வேண்டுகோள்
விடும் நேரம் வந்து விட்டது.
தயை செய்து உடனே செய்யுங்கள்.

Thamizhan said...

பெரியார் நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் பெரியார் மணியம்மை அறக்கட்டளைகள் நடத்துபவை.பெரியார் தொண்டர்களும்,பற்றாளர்களும் தரும் நன்கொடைகள் தான் அவ்ற்றின் அடிப்படை.நிறுவனங்கள் நடத்துவது அவ்வளவு எளிதல்ல.பெரும் பணக்காரர்கள் யாரும் கருப்புப் பணத்தைக் குவிப்பதும் கிடையாது.நன்கொடைகள் விடுதலையில் அறிவிக்கப் படுகின்றன.

பெரும்பாலும் ஏழை மாணவியர்தான்.இதில் எந்த ஏழை மாணவிக்கு விலக்கு அளிக்க முடியும்?

கி.வீரமணியை,அவரது எளிமையை,கடும் உழைப்பை அருகிலே சென்று பார்க்கவும்.அவர் எழுதி நன்றாக விற்கும் புத்தகங்களின் வரவு கூட அறக்கட்டளைக்குத்தான் போகிறது.அவருடைய சொத்து மிகவும் அதிகந்தான்,ஆனால் நீங்கள் சொல்லும்
பணம் அல்ல,அது வெறும் புரளி.

அவருடை உண்மையான சொத்து அவரை அருகே இருந்து அறிந்தோரின்
நல்லெண்ணம்,நம்பிக்கை.
கூட உழைக்கும் நன்றி எதிர் பார்க்காதத் தொண்டர்களின் அன்பும்,அரவணைப்பும்.
கோடிகள் சம்பாதித்திருக்கக் கூடிய படிப்பும்,திறமையும் நன்றி எதிர் பார்க்காதத் தொண்டில, அதில் வரும் மன நிறைவிற்கு முன் தூசி என்ற மனத்தின்மையும்.

அவரிடம் கெட்ட பழக்கங்களோ,மன்ச் சலனங்களோ இல்லையே என்பதுதான் எதிரிகளின் பெருங்குறை.கேட்டுப் பாருங்கள்,அல்லது நேரே சென்று பாருங்கள்.

Erottan said...

யாருடனமும் பழகி பின் அவர்களை தெரிந்து கொள்ளும் சூழ்நிலையில் நான் இல்லை. உங்கள் மனசாட்சியிடம், நீங்கள் கூறியது உண்மையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பி.கு: அரசியலில் நேர்மை, கொள்கை, மக்கள் சேவை... இந்த மூன்றும் இருக்கும் ஒரு தலைவன் இருந்தால்.. என் நாடு எப்பொழுதோ முன்னேறி இருக்கும். மாறாக அரசியல் வாதிகள் தங்களை வளர்த்துக்கொள்ள செய்யும் லாபகரமான தொழில் அரசியல்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...