Saturday, March 14, 2020

டில்லி வன்முறையில் 60 பேரைக் காப்பாற்றிய டில்லி நாயகன்

டில்லி கோகுல்பூரியில், 53 வயதான மோகிந்தர் சிங், அவரது 28 வயது மகன் இந்தர்ஜீத்துடன்  60 க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட பல முஸ்லீம் குடும்பங்களுக்கு அவர்கள்  தங்குவதற்கு பாதுகாப்பான இடங் களைக் கொடுத் தும், பாதுகாப்பான இடங்களுக்கு வழிகாட்டியும் உதவியுள்ளார்கள்.
டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் சம்பந்தமாக நடந்த கலவரத்தில் 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி யுள்ளன. இந்த சம்பவங்கள் உள்ளூர் மக்களின் நினைவில் நீண்ட காலமாகப் பதிந் திருக்கும். ஆனால் தைரியம், உயிர் வாழ்வு மற்றும் சகோதரத்துவம் பற்றிய கதைகளும் அவர்கள் நினைவில் நீங்காமல் நிறைந்திருக்கும்.
"1984 ஆம் ஆண்டில், நான் 16 வயதில் இருந்தேன், கொடூரமான நினைவுகள் கொண்ட நிகழ்வு அது. வன்முறை இங்குப் பரவியபோது, முப்பது ஆண்டுகளுக்கு  முன்னர் நடந்த கலவ ரங்களை அது எனக்கு நினைவூட்டியது. இது மனித வாழ்க்கையின் முக்கியத் துவத்தை எனக்கு நினைவூட்டியது" என்று மொஹிந்தர் சிங்  தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில் தெரிவித்தார்.
பிப்ரவரி 24 அன்று, மொகிந்தர் சிங் தனது வீட்டிற்கு அருகிலுள்ள தனது கடையில் இருந்தபோது, ஒரு கும்பல் அக்கம்பக்கத்துக்குள் நுழைந்தது.
மொகிந்தர், அவரது மகன் இந்தர்ஜீத்துடன் சேர்ந்து, அவர்களின் இரு சக்கர வாகனங்களை வெளியே எடுக்க முடிவு செய்தார் - ஒரு ஸ்கூட்டி மற்றும் ஒரு பைக். அவர்கள் சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்தாம்பூரிக்கு, கலவரத்தில் சிக்கிய 60 பேரை ஏற்றிச் சென்றனர்.
"முஸ்லிம்கள் கூடி, அவர்கள் அக்கம் பக்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்தனர், ஆனால் அவர்கள், கும்பல்களில் சிக்கினர். அப்பாவி குழந்தைகளின் முகங்களில் அச்சத்தைக் காண என்னால் தாங்க முடியவில்லை" என்று மொகிந்தர் சிங் நினைவு கூர்ந்தார்.
"எங்களிடம் அதிக வாகனங்கள் இல்லை, ஆனால் நாங்கள் எங்கள் இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு மக்களை அழைத்துச் செல்லத் தொடங்கினோம். 1984 கல வரத்தின்போது, இந்து குடும்பங்களே எங்களைக் காப்பாற்றின, ஆனால் இந்த கலவரங்களின் போது எந்தெந்த சமூகத்தின் மக்களை நாங்கள் பாது காத்துக்கொண்டிருக்கின்றோம் என்று நாங்கள் சிந்தித்துக் கொண் டிருக்கவில்லை. பாதிக்கப்பட்ட அனைவரையும் நாங்கள் காப்பாற்ற முயன்றுகொண்டிருந்தோம். மனிதர்களை அவர்கள் எந்த மதம் என்பதனைப் பொருட்படுத்தாமல் காப்பாற்ற விரும்பினோம், "என்று அவர் கூறினார்.
அவரது மகன் இந்தர்ஜீத்தும் இதேபோன்ற கருத்தினை கூறினார். "நான் மக்களைக் கொண்டு செல்லும் போது பயப்படவில்லை. அந்த நேரத் தில் நான் நினைத்துக் கொண்டிருந்தது எல்லாம் சிக்கலில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பது மட்டும்தான்" என்று கூறினார். இந்தர்ஜீத்தின் பக்கத்து வீட்டுக்காரர் - 30 வயதான முகமது நயீம் - அவர் தனது தந்தையுடன் உதவி பெற்றவர்களில் ஒருவராவார். நயீமின் வீடு சூறை யாடப்பட்டது. அவரது கடை அழிக் கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கும்பலால் வீடு ஒன்று குறி வைக்கப்பட்டபோது அந்த வீட்டில் 10  சமையல் எரிவாரு உரு ளைகள் இருந்தன.
தீ மிகவும் பெரியதாக இருந்தி ருக்கலாம், ஆனால் அந்த எரிவாயு உருளைகளில் பலவற்றை வெளியே எடுத்து, அருகிலுள்ள குழாயிலிருந்து தண்ணீரைக் கொண்டு தீயை அணைத்தவர் இந்தர்ஜீத் தான்.
கும்பல் தாக்குதலின் கொடூரத்தை நினைவு கூர்ந்த நயீம் கூறினார்: " எங்கள் வீடு மற்றும் கடை மீது தாக்குதல் நடத்திய கும்பலில் குறைந்தது 1,000 பேர் இருந்தனர். அவர்கள் முழக்கங் களை எழுப்பினர், அவர்களில் பலர் கைகளில் வாள்களைக் கூட ஏந்தியி ருந்தனர். வீட்டிலுள்ள நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப் பட்டன."
"குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக பின் பாதை வழியே ஓடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். நாங்கள் பயந்தோம். ஆனால் மொகிந்தர் சிங்தான் எங்களை தங்கள் ஸ்கூட்டியில் உட்கார வைத்துப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று விட்டார்கள்," என்று அவர்கூறினார்.
"அவர்கள் சமையல் எரிவாயு உருளைகளை வெளியே எடுக்கா விட்டால், முழுப் பகுதியும் அருகி லுள்ள வீடுகள் மற்றும் கடைகள் அனைத்தும் தீப்பிழம்பாகப் போயி ருக்கும். இது அனைத்தும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்று நயீம் கூறினார்.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மோதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் நான்கு நாட்களில் வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் வன்முறை உருவாக்கப்பட்டது.
இதில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அனு மதிக்கப்பட்டதற்கு பெரிய அளவிலான  எதிர்ப்புக்கள் தேசம் முழுவதும் நடந்து வருகின்றன.
நாட்டில் முதன்முறையாகக் குடியுரிமைக்கு மதத்தைச் சோதிக்கும் சட்டத்தின் மூலமாக, மூன்று முஸ்லீம் பெரும்பான்மையான அண்டை நாடுகளின் சிறுபான்மையினருக்குக் குடியுரிமையை வழங்கும் என்று அரசாங்கம் கூறினாலும், விமர்சகர்கள் இச்சட்டத்தினை "முஸ்லிம் எதிர்ப்பு" என்றே கூறுகின்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...