டெல் நிறுவனத்தின் லேட்டிடியூட் 9000 சீரிஸ் புதிய மடிகணினி லேட்டிடியூட் 9510 பெயரில் பன்னாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 15 இன்ச் மடிகணினி 15 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக் கிறது. இது லேப்டாப் மற்றும் 2 இன் 1 என இருவிதங்களில் கிடைக்கிறது.
டெல் லேட்டிடியூட் 9510 மாடலில் 15-இன்ச்
இன்ஃபி னிட்டி எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது 14 இன்ச் நோட்புக்
அளவிலும் கிடைக்கிறது. இதன் 2 இன் 1 வேரியண்ட்டிலும் தொடு திரை வசதி
வழங்கப்பட்டுள் ளது. புதிய மடிகணினியில் இன்டெல் கோர் அய்7 பிரா சசர்
வழங்கப்பட்டுள்ளது.
இதில் இன்டெல் வைபை 6 மற்றும் 5ஜி மொபைல்
பிராட்பேண்ட் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 5ஜி ஆன்டெனாக்கள்
முன்புற ஸ்பீக்கர்களில் பொருத்தப்பட்டுள்ளது. இது லேப்டாப் அதிக தடிம னாக
இல்லாமல், மெல்லிய தாக இருக்க வழி செய்திருக் கிறது. இத்துடன் கார்பன்
பிளேடு ஃபேன்களும் டூயல் ஹீட் பைப்களும் வழங்கப் பட்டுள்ளது.
மேலும் புதிய மடிகணினி யில் ஆம்ப் மற்றும்
நான்கு வாய்ஸ் கேன்சலிங் மைக்ரோ போன்களை கொண்டிருக்கி றது. இதுதவிர
இன்டெலி ஜண்ட் ஆடியோ தொழில் நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கான்ஃபெரன்ஸ்
அழைப் புகளின் போது ஆடியோ தரத்தை மேம்படுத்தும்.
டெல் லேட்டிடியூட் 9510 மாடலில்
எக்ஸ்பிரஸ்சார்ஜ் பூஸ்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது மடிகணினியை
35 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
மேலும் இதில் மெஷின்டு அலுமினியம் ஃபினிஷ் மற்றும் டைமண்ட் கட் எட்ஜ்கள்
வழங்கப்பட்டுள் ளன.
பன்னாட்டு சந்தையில் டெல் லேட்டிடியூட்
9510 விற்பனை மார்ச் 26ஆம் தேதி துவங்கும் என்றும் இதன் விலை 1799 டாலர்கள்
(இந் திய மதிப்பில் ரூ. 1,29,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது என்பது
குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
No comments:
Post a Comment