(28-11-2019 நாளிட்ட 'டெக்கான் கிரானிகிள்' ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)
ஏற்பட முடியாது என்று எண்ணிய தேசியவாத
காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள
சிவசேனா தலைமையிலான அமைச்சரவை 28-11-2019 அன்று பதவி ஏற்கும்
நிகழ்ச்சியுடன், கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியன்று மகாராட்டிர மாநில
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் கடந்த அய்ந்து வாரங்களாக
நடந்து வந்த - மிகவும் ஆர்வம் அளித்து வந்த- அரசி யல் நாடகத்தின்
பின்னணியில், எதிர்பார்த்ததை விட குறைந்த அளவு தொகுதிகளிலேயே
பா.ஜ.கட்சியினால் வெற்றி பெற முடிந்திருக்கிறது என்ற கண்ணுக்கு முன்
தெரியும் உண்மை நிலை நிலவுகிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய
மாநிலமும், பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமுமான இந்த
மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பேராசை இறுதியில்
முறியடிக்கப்பட்டதும், அதே காரணத்துக் காக அரியானா சட்டமன்றத் தேர்தலில்
ஏறக்குறைய தோல்வி அடையும் நிலைக்கு வந்ததும், தற்போதுள்ள காவியுடைத்
தலைமைக்குப் பொதுமக்களின் ஆதரவு குறைந்து வரும் நிலை நிலவுவதையே
காட்டுகிறது.
பாரம்பரிய பழக்க வழக்கங்களை உடைப்பது,
தேர்தல் வெற்றிகளை முறியடிப்பது, கட்சிகளை உடைத்து கட்சித் தாவலுக்கு
ஊக்கம் அளிப்பது ஆகிய செயல்களில் பா.ஜ.க. கொண்டிருக்கும் திறமை நன்கு
ஆவணப்படுத்தப்பட்டுள்ளதை கடந்த ஆறு ஆண்டு காலமாக அடிக்கடி நாம் பார்த்து
வருகிறோம். இந்த திறமை பா.ஜ.கட்சிக்கு, குறிப்பாக அதன் தலைமைப் பொறுப்பில்
உள்ள நரேந்திரமோடிக்கு பொதுமக்களின் பலமான ஆதரவு இருக்கிறது என்ற
கண்ணோட்டத்தில் உருவானதுதான் இந்தக் கருத்து. பொதுமக்களின் ஆதரவு குறைந்து
வரும் நிலையில், இத்தகைய தேர் தல் தந்திரங்களை மேற்கொள்ள இயன்ற
பா.ஜ.க.வின் ஆற்றல் பலவீனமடைந்து வருகிறது.
மேலும், நாட்டின் பொருளாதார நிலையில் எப்
போதும் இல்லாத மிகப் பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்திய மத்திய அரசின்
தலைமையில் உள்ள ஒரு கட்சியாக பா.ஜ.க. விளங்குவது மட்டுமன்றி, ஒரே
தந்திரக் குதிரையாக தன்னைத் தானே பா.ஜ.க. காட்டிக் கொண்டது.
தனக்குப் பிரியமான காஷ்மீர், அயோத்தியா
பிரச் சினை, தேசிய குடியுரிமைப் பதிவேடு போன்ற நட வடிக்கைகள் மூலம்
சிறுபான்மை மதத்தவர்களை சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவுக்குள் ஊடுருவி
யவர்கள் என்பதைக் காட்டுவது போன்ற பெரும்பான்மை மக்களான இந்து மத மக்கள்
மத உணர்வு சம்பந்தமாக மட்டுமே பா.ஜ.க.வினால் விளையாட முடிந்து - எதிர்க்
கட்சிகளை தீயவர்களாக சித்தரித்ததான இவை அரியானா - மகாராட்டிர
மாநிலங்களில் அக்கட்சி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து மிகத்
தெளிவாகத் தோன்றுகிறது.
மக்களின் அன்றாட வாழ்வுடன் உடனடியான
நேரடித் தொடர்புடைய மாநிலப் பிரச்சினைகள் பற்றி அரியானா, மகாராட்டிர மாநில
தேர்தல் பிரச் சாரத்தில் பேசுவதற்கு பா.ஜ.க. தவறிவிட்டது. நிலைமை மேலும்
மோசமாவதற்கு ஏற்ற வகையில், அரசாட்சி செய்யும் தகுதி தனக்கு இருக்கிறது
என்பதைக் காட்டுவதற்கு சிறிதளவு ஆதாரத்தையும் கூட பா.ஜ.க. இதுவரை
காட்டவில்லை. முழக்கங்கள் மூலமாகவும், எதிர்க்கட்சி களை அச்சுறுத்திக்
கொண்டிருப்பதாலும் மட்டுமே அரசாட்சி செய்துவிட முடியும் என்று அது நினைக்
கிறது.
மகாராட்டிராவில் பா.ஜ.கட்சியின் மிக
நீண்ட கால கூட்டணிக் கட்சியான மதவாத சிவசேனா கட்சிக்கு பா.ஜ.கட்சி மீது
மனநிறைவின்மை ஏற்படுவதற்கு இது வழி வகுத்தது. மற்றொரு பிராந்தியக்
கட்சியான, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு
அளிப்பதற்கு முன் வந்திருக்கும் நிலையில், மாநில அரசுக்கு தலைமையேற்று
நடத்துவதற்கான வாய்ப்பு சிவசேனா கட்சிக்கு ஒளிமிகுந்ததாக ஆனது. சில
சிரமங்களுக்குப் பிறகு இந்த பிராந்திய கட்சிகள், தேசிய காங்கிரஸ்
கட்சியின் ஆதரவைப் பெற்றிருப்ப தாகத் தெரிகிறது. தங்களது கோட்பாட்டுக்கு
எதிரான சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் ,
ஆதரவளிக்க விரும்பவில்லை என்று தோன்றியது. ஆனால் தற்போது நாட்டில் நிலவும்
மிகப் பெரிய அரசியல் உண்மை நிலை காரணமாக, காங்கிரஸ் தனது ஆதரவை
சிவசேனாவுக்கு அளிக்க முன் வந்துள்ளது.
மகாராட்டிராவில் பா.ஜ.க.
தோற்கடிக்கப்பட்டது மற்ற மாநிலங்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாக இருக்கும்
என்றும் கூட வாதாட முடியும். பொது வாழ்வில் புதிய ஆதிக்கத்தைப்
பெற்றிருக்கும் பா.ஜ.கட்சியைத் தோற் கடிப்பது என்பதே பெரும் பாலான
எதிர்க்கட்சிகளின், குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் நோக்கம். இதன் காரணம்
பா.ஜ.க. ஒரே பரிமாணக் கோட்பாட்டைக் கொண்ட கட்சி என்பதுதான். பா.ஜ.க.வின்
பேராதிக்கம் அரசியலை மட்டுமல்லாமல், பொது மக்களது வாழ்க் கையின் இதர
அம்சங்களையும் கூட மோசமாக பாதித் திருக்கிறது.
பா.ஜ.கட்சியின் மிகப் பழைய கூட்டணி
கட்சியான சிவசேனா பிரிந்து சென்ற பிறகு, பா.ஜ.க. மிகுந்த எதேச்சதிகார
முறையில் நடந்து கொண்ட மற்ற மாநில பிராந்திய கட்சிகளும், பா.ஜ.கட்சியிடம்
கூடுதலான கேள்விகள் கேட்பதற்கான வாய்ப்புகள் தோன்றி யுள்ளன. விரைவில்
சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதற்கான
முதல் அறிகுறிகள் தோன்றியுள்ளன. பா.ஜ.கட்சிக்கு எதிரான சவால் வளர்ந்து
வருகிறது என்பதை மகாராட்டிர, அரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
எடுத்துக் காட்டியுள்ளன. ஆளுங்கட்சிக்கு ஏற்படக் கூடிய பின் னடைவுகள்
வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், இதை வைத்துக் கொண்டு மிகப் பெரிய
அளவில் எந்த ஒரு முடிவுக்கும் வருவதற்கான நேரம் இதுவல்ல.
நன்றி: 'டெக்கான் கிரானிகிள்', 28-11-2019
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment