விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்)
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் 92,700 க்கும் மேற்பட்ட
ஊழியர்கள் தேர்வு செய் துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்
ஊழியர்கள் விருப்ப ஓய்வு முடிவை (வி.ஆர்.எஸ்.) தேர்வு செய்ய டிசம்பர் 3 ஆம்
தேதியை இறுதி தேதியாக அறிவிப்புச் செய்து மத்திய அரசு கொடுத்த
நெருக்கடியால் ஒரு லட்சத்திற்கும் குறைவான பணியாளர்கள் வேலையை துறக்க முன்
வந்துள்ளனர்.
இவ்வாறு விருப்ப ஓய்வு பெறுபவர்களால்
கடனில் சிக்கித்தவிக்கும் தொலைப்பேசி நிறுவனத் தின் ஊதியத் தொகையில்
ஆண்டிற்கு ரூ.8,800 கோடி சேமிக்க முடியும் என்று அரசு கூறுகிறது.
இது குறித்து பி.எஸ்.என்.எல். நிர்வாக இயக்குநர் பி.கே. பூர்வார் கூறும் போது:
"இந்தத் திட்டம் முடிவடையும் வரை அனைத்து
வட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட தரவுகளின்படி சுமார் 78,300 ஊழியர்கள்
விருப்ப ஓய்வு பெற முன்வந்துள்ளனர். இருப்பினும் அரசின் இலக்கான ஒரு
லட்சத்திற்குக் குறைவாக இருப்பதால் மீதமுள்ள வர்களையும் கட்டாயம் விருப்ப
ஓய்விற்கு விண்ணப் பிக்க அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
மேலும் "வி.ஆர்.எஸ் விண்ணப்பதாரர்களைத் தவிர, சுமார் 6,000 ஊழியர்களும் ஓய்வு பெற்றனர்" என்றும் கூறினார்.
எம்.டி.என்.எல். தலைவரும், நிர்வாக
இயக்குந ருமான சுனில் குமார் கூறுகையில், "இது எங்கள் ஆண்டு சம்பள மசோதாவை
ரூ .2,272 கோடியிலிருந்து ரூ.500 கோடியாகக் குறைக்கும். இப்போது
எங்களுக்கு 4,430 ஊழியர்கள் உள்ளனர். இது எங்கள் தொழிலை நடத்துவதற்கு
போதுமானது" என்று சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல்.
நிறுவனம் ஊழியர்களை கட்டாயமாக வெளியே அனுப்பக் கடும் அழுத்தம்
கொடுப்பதால் இரண்டையும் இயக்கப் போதுமான ஊழியர்கள் இல்லாது அரசின்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் நெருக் கடியைச் சந்திக்கும். இதன்
விளைவாக விரைவில் பி.எஸ்.என்.எல். தனியார் மயத்தை நோக்கி தள்ளப் படும்
என்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மத்தியில் 2014 முதல் பிஜேபி தலைமையிலான
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனை இது என்று விரல் நீட்டி சொல்லும்
நிலையில் இல்லை. வேதனையின் குடைச்சலில் மக்கள் கிடக்கிறார்கள். ஆண்டுக்கு
இரண்டு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று உறுதி
அளித்தார் மோடி.
இப்பொழுது உள்ள நிலைமை என்னவென்றால்,
"உடும்பு வேண்டாம் கை வந்தால் போதும்" என்னும் நிலையில், ஏற்கெனவே
பணியாற்றுவோரையும் வெளியேற்றும் அவலம் தான் தொடர்கிறது.
இதுகுறித்து தி.மு.க. மக்களவை உறுப்பினர்
திரு.டி.ஆர். பாலு அவர்களும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
காக்னிசன்ட் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து 13 ஆயிரம் பேர்களும், இன்
போசிஸ் நிறுவனத்திலிருந்து 12 ஆயிரம் பேர்களும் வெளியேற்றப்படும் நிலையை
மிகுந்த கவலையுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவற்றையெல்லாம் திசை திருப்பும் யுக்திதான் இந்து மதவாத சமாச்சாரங்கள் - எச்சரிக்கை!
No comments:
Post a Comment