உலக மஞ்சள் உற்பத்தியில் இந்தியாவின்
பங்களிப்பு 91%. இந்தியாவில் இருந்து ஆண் டுக்கு 80,000 டன் மஞ்சள்
ஏற்றுமதியாகிறது. உள்ளூர் சந்தையில் ரூ. 6,000 முதல் ரூ. 8,000 வரை
விற்பனையாகும் மஞ்சள், உலக சந்தையில் ரூ.10,000 முதல் ரூ. 12,000 வரையிலும்
விற்பனை செய் யப்படுகிறது. தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள்
பயிரிடப்படுகிறது. அதில் 30 சதவீதத்துக்கு மேல் ஈரோடு மாவட்டத்தில்
பயிரிடப்படு கிறது. நாட்டில் மொத்த மஞ்சள் உற்பத்தி சுமார் 35-40 லட்சம்
மூட்டைகள் (ஒரு மூட்டை 65 கிலோ). இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 7
லட்சம் மூட்டைகள் உற் பத்தியாகின்றன. இதில் சுமார் 2 லட்சம் மூட்டைகள்
ஈரோடு சுற்று வட்டாரங் களில் உற்பத்தி செய்யப்படு பவை.
நாட்டிலேயே, ஆந்தி ரத்தை அடுத்து, மஞ்சள்
விளைச்சலிலும் ஏலத்திலும் ஈரோடு இரண்டாம் இடத்தை வகித்து வந்தது. நீர்ப்
பற்றாக் குறை, விளைச்சல் குறைவு, விலை வீழ்ச்சி போன்ற கார ணங்களால்
தமிழகத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 2015-இல் 8,912
எக்டேராக இருந்த மஞ்சள் சாகுபடி, 2016-இல் 2,966 எக்டேராக குறைந்தது,
2017-இல் 8,988 எக்டேராக அதிகரித்த மஞ்சள் சாகுபடி, 2018-இல் 5,625
எக்டேர், 2019-இல் 4,319 எக் டேர் என குறைந்துவிட்டது.
நடப்பு ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையில்
ஜூலை மாதம் நல்ல மழை பெய்து, பவானிசாகர் அணை நிரம்பி ஆகஸ்ட் மாதம் அணையில்
இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட போதிலும், ஈரோடு மாவட்டத்தில் விவ சாயிகள்
மஞ்சள் பயிரிட ஆர் வம் காட்டவில்லை. இதற்கு முக்கிய காரணம் விலை வீழ்ச்சி.
கடந்த 5 ஆண்டுகளாக மஞ்சள் சராசரியாக குவிண் டால் ரூ. 5,000 முதல் ரூ. 6,000
வரைதான் விலை போகிறது. இதனால் விவசாயிகள் சாகு படி செலவைக் கூட திரும்ப
எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப் போது மஞ்சள் விவசாயிக
ளில் பெரும்பாலானவர்கள் மரவள்ளிக் கிழங்கு சாகு படிக்கு மாறிவிட்டனர்.
No comments:
Post a Comment