Monday, December 16, 2019

காசநோய், தொழுநோய், மலேரியா மாத்திரைகள் விலை 50 சதவீதம் உயர்வு

பொதுமக் களுக்கு  அவசியம் பயன்படும் முக்கிய மருந்துகளின் விலை உச்சரவரம்பை 50 சதவீதம் உயர்த்தி, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை யம் அறிவித்துள்ளது.
மருந்து மூலப்பொருட்கள் விலை உயர்ந்ததால், பெரும் பாலான மருந்து நிறுவனங் கள் சில மருந்துகளின் தயா ரிப்பை முற்றிலுமாக நிறுத்தி விட்டன. ஏற்கெனவே அத்தி யாவசிய மருந்து விலை கட் டுப்பாட்டு பட்டியலில் சேர்க் கப்பட்ட இவை சந்தையில் கிடைக்காததால் மக்கள் வேறு மருந்துகளை நாட வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்களுக்கு இந்த மருந்துகள் தடையின்றி கிடைக்கவும், மருந்து நிறுவ னங்களின் இழப்பை ஈடுகட் டவும் இந்த விலை உயர்வுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஒருமுறை அனுமதியாக, தற் போதுள்ள உச்ச விலை வரம் பில் 50 சதவீதம் உயர்த்திக் கொள்ளலாம் என, என்பிபிஏ கடந்த 13ஆம் தேதி வெளி யிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.
மொத்தம் 12 மருந்துக ளுக்கு விலை உயர்வு அனுமதி அளிக்கப்படுகிறது. இவை 21 வகையாக பல்வேறு கலவை களில் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, மலேரியா, காச நோய், தொழுநோய், இதய நோய், கல்லீரல், சிறுநீரக நோய், யானைக்கால் நோய் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்து, வைட்டமின் சி மருந்து ஆகி யவையும் அடங்கும். மலிவு விலையில் மக்களுக்கு மருந்து கிடைக்க வேண்டும் என்ப தற்காகவே இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், மருந்து நிறுவனங் கள் இழப்பு கருதி அத்தியா வசிய மருந்துகளின் விலையை உயர்த்த இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மக்க ளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...