ஈக்வடார் அரசு நித்தி யானந்தாவின்
சமீபத்திய அனைத்து பேச்சுக்களையும் முற்றிலுமாக மறுத்துள் ளது. இது
குறித்து 6.12.2019 அன்று ஈக்வடார் அரசின் ஆணைக்கு இணங்க இந் தியாவில் உள்ள
ஈக் வடார் தூதகரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தன்னை கடவுள் என்று
இந்தியா வில் கூறிக் கொள்ளும் நித்தியா னந்தா என்பவர் எங்கள் நாட்டில் அகதி
யாக புகலிடம் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
அவர் எங்கள் நாட்டிற்குச் சொந்தமான எந்த
ஒரு தீவையும் விலைக்கு வாங்கவில்லை. நாங்கள் அவரது புகலிடக் கோரிக்கை
விண்ணப்பத்தை உடனடியாக நிராகரித்துவிட்டோம். ‘‘கைலாசா டாட் ஆர்க்” என்னும்
இணையதளத்தில் எங்கள் நாட்டுத்தீவை கைலாசா நாடாக மாற்றிவிட்டோம் என்று
பல்வேறு போலி ஆவணங்களுடன் அதில் பதிவேற்றி உள்ளனர்.
நித்தியானந்தாவின் மேற்பார்வையில் அவரிடம்
பணிபுரிபவர் கள் இந்த இணையதளத்தை நடத்திவருகின்றனர். அதில் உள்ளவை
அனைத்தும் பொய் மற்றும் தவறான தகவல்கள் ஆகும். எங்கள் நாட்டின் தீவை கைலாசா
என்ற நாடாக மாற்றிவிட்டார் என்று இணையதள செய்தி மற்றும் நாளிதழ்களில்
வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யான தகவல்கள் ஆகும்.”
இவ்வாறு ஈக்வடார் குடியரசின் மக்கள்
தொடர்பு அமைச் சரகத்தின் உத்தரவின் பெயரில் புதுடில்லி ஈக்வடார் தூதரகம்
மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment