கச்சா எண்ணெய்யுடன் அட்லாண்டிக் கடலில்
சென்று கொண்டிருந்த இந்த கப்பலை திடீரென கடற் கொள்ளையர்கள் வழிமறித் தனர்.
பின்னர் அவர்கள் தங் கள் கட்டுப்பாட்டில் இருக் கும் பகுதிக்கு அந்த கப்பலை
கடத்தி சென்றனர்.
இந்த கப்பல் கடத்தப் பட்ட சம்பவத்தை
பன்னாட்டு கடல் பாதுகாப்பு நிறுவன மான ஏ.ஆர்.எக்ஸ். வெளி யிட்டு உள்ளது.
இந்த கப்ப லில் 18 இந்தியர்கள் உள்பட 19 பேர் இருந்தனர். அவர்க ளது கதி
என்ன என்று தெரிய வில்லை.
கப்பல் கடத்தப்பட்ட தகவலை அறிந்ததும்,
நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்த நாட்டு அரசை தொடர்பு
கொண்டு கப்பலில் இருந்த இந்தியர்களின் விவரங்களை அறியவும், அவர்களை மீட்க
வும் உதவுமாறும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் நைஜீரியா கடற் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடத்தப்பட்ட இந்தியர் களை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருவ தாக மத்திய அரசு கூறியுள்ளது.
No comments:
Post a Comment