நாட்டில் பெண் களுக்கு எதிரான பாலியல்
குற் றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் 18 மிகப்பெரிய நகரங்
களில் பெண்கள் மற்றும் குழந்தை களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி
முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதில் பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய
பிர தேச மாநிலங்களின் நக ரங்களில் அதிக குற்றங்கள் நடப்பது
தெரியவந்துள்ளது. அதேநேரம் சென்னை மற்றும் கோவையை பொறுத்தவரை கொலை, சொத்து
தொடர்பான குற்றங்கள், தாழ்த்தப் பட்ட பிரிவினர் மீதான வன்முறை போன்ற
சம்பவங்கள் குறைவாகவே உள்ளன. இதைப்போல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும்
பாதுகாப் பான நகரங்களாக விளங்குகின்றன.
டில்லியை பொறுத்தவரை 1 லட்சம் பேருக்கு
1,050 குற்றங்கள் வீதம் கணக்கிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கையை பாட்னா
நகரம் மிஞ்சி விடுகிறது.
அங்கு 1,712 குற்றங்கள் கணக் கிடப்பட்டு
இருக்கிறது. டில்லியை போல பெங்களூரு நகரமும் பெண்களுக்கு பாதுகாப் பற்றதாக
கண்டறியப்பட்டு உள் ளது. இந்தூர் நகரம் குழந் தைகளுக்கு பெரும்
அச்சுறுத்தல் நிறைந்த பகுதி யாக கண்டறியப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment