Thursday, November 21, 2019

சமையல் கழிவில் சமையல் எரிவாயு

வீட்டு சமையலறையில் வீணாகும் உணவுக் கழிவுகளை வைத்து, சமையல் எரிவாயுவை தயாரிக்க முடியும். இதற்கான கருவியை உருவாக்கியிருக்கிறது இஸ்ரேலைச் சேர்ந்த, 'ஹோம் பயோ காஸ்!' சில ஆண்டுகளுக்கு முன், 15 உதிரி பாகங்களைக் கொண்டு இயங்கும் ஹோம் பயோ காஸ் கருவியை இஸ்ரேலிய விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தி இருந்தனர்.
அதற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வரவேற்பு கிடைக்கவே, மேலும் ஆராய்ச்சிகள் செய்து, தற்போது ஹோம் பயோ காஸ் 3.0 மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
மூன்றாம் தலைமுறை கருவிக்கு, நான்கு உதிரி பாகங்கள் மட்டுமே. எனவே, இதை எவரும் எளிதில் சேர்த்து, வீட்டின் காலி இடத்தில் நிறுவிவிட முடியும்.
உணவுக் கழிவுகள், காய்கறி மற்றும் இறைச்சி மிச்சங்களை ஒருபுறம் போட்டு, பாக்டீரியா கிருமி துகள்களையும் கொட்டிவிட வேண்டும்.
கிடைத்தால், மாடு, ஆடு போன்ற விலங்கு கழிவுகளையும் இதில் சேர்க்கலாம்.
இந்தக் கருவியின் ஜீரணப் பகுதியில் பாக்டீரியாக்கள், உணவுக் கழிவுகளை சிதைத்து, எரிவாயு வையும், திரவ வடிவில் வீட்டுத் தோட்டத் திற்கான உரத்தையும் உற்பத்தி செய்கின்றன.
தினமும் 2 கிலோ உணவுக் கழிவைப் போட்டால், இரண்டு மணி நேர சமையலுக்குத் தேவையான எரிவாயு கிடைக்கும்.
தற்போது, புதுமைகளுக்கான இணைய சந்தையான, 'கிக்ஸ்டார்ட்டர்' தளத்தில் அறிமுகமாகி யுள்ள, 'ஹோம் பயோ காஸ் 3.0' மாடல் 2020இல் சந்தைக்கு வரும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...