உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு தமிழ்மலர்
என்னும் வழக்குரைஞர் மனு ஒன்றை அளித் திருந்தார். அந்தமனுவில், மதுரையைச்
சேர்ந்த பல் மருத்துவம் படித்த 27 வயதுப் பெண் ஒருவருக்கு இசுலாம் மதத்தின்
மீது பற்று ஏற்பட்டுள்ளது.
அதையொட்டி அவர் தமிழ்நாடு தவுகித் ஜமாத் அமைப்பை அணுகி இசுலாம் மதத்துக்கு மாற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.
அந்தப் பெண் அங்கிருந்து தப்பி வந்து
ஜம்மியாத்துல் அகிலில் குரான் வால் கழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அந்த
கழகத்தில் தன்னை பெற்றோர்கள் கொன்று விடுவார்கள் என பயந்துள்ளதாகத்
தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அளித்த
புகாரை காவல்துறையினர் பதியாமல் இருந்துள் ளனர். அந்தப் பெண் தல்லாக்குளம்
காவல்துறையிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் அந்தப்
பெண்ணை வலுக்கட்டாயமாகப் பெற்றோருடன் அனுப்பி உள்ளனர். இந்த மனுவை அளித்த
வழக்குரை ஞராகிய நானும் எனது சக வழக்குரைஞர்களும் அந்தப் பெண்ணின்
வீட்டுக்குச் சென்று அவருக்குச் சட்ட உதவி அளிக்க முயன்றோம். ஆனால்
காவல்துறை அதிகாரி அதற்கு எங்களை அனுமதிக்கவில்லை.
அந்தப் பெண்ணையும் சந்திக்க அனுமதி அளிக்க
வில்லை. அந்தப் பெண் தல்லாக் குளம் காவல்நிலைய உத்தரவுப்படி சட்ட விரோதமாக
ஒரு பெண்கள் விடுதியில் அடைக்கப்பட்டிருந்தார். எனத் தெரிவிக்கப்
பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்
சத்யநாராயணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவில்
கூறப்பட்ட பெண் ஒரு மேஜர். அவருக்கு அவர் விரும்பிய மார்க்கத்தைத் தொடர
சட்டப்படி உரிமை உண்டு. எனவே அவரை சட்ட விரோதமாகப் பெண்கள் விடுதியில்
வைக்கக் கூடாது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கி
உள்ளனர்.
No comments:
Post a Comment