ஆந்திர மாநிலத்தில் முந்தைய தெலுங்கு
தேசம் கட்சி அரசு கோதாவரில் நதிக்கு இடையே போலவரம் அணை கட்டும் பணிகளை
தொடங்கியது. இதன் மூலம் ராயல சீமா பகுதியில் தண்ணீர் தட்டுப் பாட்டை
முழுமையாக தீர்த்து விடலாம் என சந்திரபாபு நாயுடு கருதினார். ஆனால்,
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த தும், போலவரம் அணை கட்டும்
பணிகளை நிறுத்தியது. மறு ஒப்பந்தம் கோர முடிவு செய்தது. இதை எதிர்த்து
தற்போது ஒப்பந்தம் எடுத்துள்ள நவயுகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை நாடியது.
இந்நிலையில் இந்த விவகாரத் தில் மறு
ஒப்பந்த நடை முறைகளை நிறுத்தி வைத்து நீதிமன்றம் நேற்று முன் தினம்
தீர்ப்பு வழங்கியது. போலவரம் அணை கட்டும் பணியை நிறுத்தக் கூடாது. நவயுகா
நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தம் மூலமே அதனை அமல்படுத்த வேண்டும் என
உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு ஜெகன்மோகன் அரசுக்கு
ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த அரசு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து
செய்து, தனது கட்சியை சேர்ந்தவர் களுக்கு அந்த ஒப்பந்தத்தை வழங்கலாம் என
ஜெகன் திட்டமிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயர் நீதிமன்றம் இவ்வாறு
தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய அரசியலில் அரசியல் காழ்ப்புணர்ச்சி
என்பது அதிகரித்துகொண்டே வருகிறது, தமிழகத்தில் கலைஞர் ஆட்சிகாலத்தில்
கொண்டுவந்த அனைத்து திட்டத்தையும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு
நிறுத்திவிட்டார். இதில் துறைமுக விரைவுச்சாலைத்திட்டம், புதிய சட்டமன்றம்
உள்ளிட்ட பல திட்டங்கள் அடங்கும்.
2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த
பிறகு புதிய சட்டமன்றத்தை மருத்துவமனையாக மாற்றினார் நீதிமன்றம் தலையிட்டு
ம் இந்த விவகாரத்தில் ஜெயலலிதா பிடிவாதமாக இருந்தார்.
முழுக்க முழுக்க நவீன முறையில்
சட்டமன்றத்திற்கு என்றே வடிவமைக்கப்பட்டு கட்டபப்ட்ட புதிய சட்டமன்றம்
மருத்துவமனையாக மாற்றப்பட்டதால் மக்களின் பணம் முற்றிலும் விரயமானது,
மருத்துவ மனையாக மாறியிருப்பினும் அங்கு மருத்துவப் பணிகளை மேற்கொள்ள
பெரும் சிரமம் ஏற்படுகிறது, சட்டப் பேரவை மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற
வரும் நோயாளிகள் அனைவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கே திருப்பி
அனுப்பப் படுகின்றனர்.
அதே போல் துறைமுகம் - மதுரவாயில்
நெடுஞ்சாலைப் பணி 70 விழுக்காடு பணிகள் முடிந்த நிலையில் ஜெயலலிதா பதவி
ஏற்ற உடன் அந்த பணியை நிறுத்தினார். பல நூறு கோடிகள் விரயமானது. அதே போல்
நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் உழவர் சந்தை
உள்ளிட்ட பல மக்கள் விரும்பி பாராட்டிய திட்டங்களை ஆட்சி மாறியதும்,
நிறுத்திவைத்தன் மூலமாக பெருத்த பணவிரயம் மற்றும் பணி முடக்கம் ஆகியவை
ஏற்பட்டன.
இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றம்
தலையிட்டும் ஆட்சியாளர்கள் தங்களது சுயநலம் மற்றும் அதிகார இறுமாப்பு
காரணமாக மாநிலத்தின் வளர்ச்சியையே பின்னோக்கி செல்லவைத்துவிட்டனர்.
No comments:
Post a Comment