Monday, August 5, 2019

பசு மாட்டிற்கும் இறப்பு சான்றாம்

பசுமாடுகள் இறந்தால் அதற்கு இறப்பு சான்று கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு பசு மாடுகளை கடத்துபவர்களை அடித்து கொலை செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து வருகிறது. பசு மாடுகளை ஏதாவது வாகனத் தில் ஏற்றிச் சென்றாலே பசு பாதுகாவலர்கள் வந்து விடுகின் றனர். எதற்காக வண்டியில் கொண்டு செல்கின்றனர் என்று கேட்காமல் வாகன டிரைவரை அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைக்கின்றனர். பசு மாடுகள் வைத்திருப்பவர்கள் இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பசு மாடுகள் சிலநேரங்களில் நோய் காரணமாக இறந்து விட்டால் கூட அதனை வண்டியில் எடுத்து சென்று புதைக்க முடியாத நிலை இருக்கிறது. இறந்த மாட்டின் உடலை வண்டியில் எடுத்து சென்றால் காவல்துறையினர் மற்றும் பசு பாதுகாவலர்களின் இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதையடுத்து இப்பிரச்சி னைக்கு தீர்வு காண பசு மாடுகள் இயற்கையாக இறந்து விட்டால் அதற்கு பரேலில் உள்ள விலங்குகள் மருத்துவமனை இறப்பு சான்று கொடுக்கும். அந்த சான்றுடன் இறந்த மாடுகளை எடுத்து சென்றால் புதைப்பதில் சிக்கல் ஏற்படாது.
மாடுகள் இறந்து போனால் பரேல் விலங்குகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்குவார்கள். மராட்டிய மாநிலத்தில் பசு வதைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பசுமாடுகளை இறைச்சிக்காக கொண்டு சென்றால் அவர்களுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள்  தாக்கி கடந்த 3 ஆண்டுகளில் 280 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...