Monday, August 5, 2019

சந்திரயான்-2 விண்கலம் முதன் முதலாக பூமியை படம் எடுத்து அனுப்பியது


சந்திரனை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தற்போது சந்திரயான்-2 விண்கலம் பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.
விண்கலத்தின் செயல்பாட்டை பெங்களூ ருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறை யில் இருந்தபடி விஞ்ஞானிகள் கண்காணித்து வருவதுடன், அதன் சுற்றுவட்ட பாதையின் உயரத்தையும் அவ்வப்போது உயர்த்தி வருகி றார்கள். சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையின் உயரம் நேற்றுமுன்தினம் 4ஆ-வது தடவையாக உயர்த்தப்பட்டது.
பூமிக்கு அருகே குறைந்த பட்சமாக 277 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 89 ஆயிரத்து 472 கி.மீ. தொலைவிலும் சுற்றி வரும் சந்திரயான்-2 விண் கலத்தில் உள்ள எல்-14 என்ற நவீன கேமரா முதன் முதலாக பூமியை புகைப்படம் எடுத்து தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பி இருக்கிறது.
அதாவது வெள்ளிக்கிழமை மாலை 5.28 மணி முதல் 5.37 மணி வரை எடுக்கப்பட்ட 5 புகைப் படங்களை விண்கலம் அனுப்பி உள்ளது. சந்திர யான்-2 பூமியில் இருந்து 2,450 கி.மீ., 3,200 கி.மீ., 4,100 கி.மீ., ,4,700 கி.மீ. மற்றும் 5,000 கி.மீ. உயரத்தில் பயணித்த போது இந்த படங்கள் எடுக்கப்பட்டன. இந்த புகைப்படங்களை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.
பூமியை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையை அடுத்த கட்டமாக இன்றும் (திங்கட்கிழமை), மறுபடி வருகிற 16-ஆம் தேதியும் உயர்த்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு விண்கலம் பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் செல்லும். அதன்பிறகு நீள்வட்ட பாதையில் நிலவை சுற்றி வரும் விண்கலம் ஆகஸ்டு 20-ஆம் தேதி சந்திரனை நெருங்கி அதன் அருகாமையில் சுற்றிவரும்.
நிலவின் அருகாமையில் சந்திரயான்-2 விண் கலம் தொடர்ந்து சுற்றி வர, அதில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென்துருவ பகுதியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ஆம் தேதி தரை இறங்கும். அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் என்ற சிறிய வாகனம் வெளியே வந்து நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும். அதுபற்றிய தகவல்களை சந்திரயான்-2 விண்கலம் பூமிக்கு அனுப்பி வைக்கும்.
சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7-ந் தேதி நிலவில் தரை இறங்கும் காட்சியை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பிரதமர் மோடி பார்வையிட இருக்கிறார்.
அந்த காட்சியை பார்வையிடுவதற் காக ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து தலா 2 மாணவர்கள் தேர்ந்து எடுக்கப் படுகிறார்கள். இதற் காக இஸ்ரோ, 8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு வருகிற 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் வினாடி வினா போட்டி நடத்துகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாண வர்கள்  சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரை இறங்கும் காட்சியை காணும்  வாய்ப்பை பெறுவார்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...