14.8.2019 தேதியிட்டு இன்று (6.8.2019) வெளிவந்துள்ள துக்ளக்' வார ஏட்டில்,
'காஷ்மீரில் என்ன நடக்கிறது?' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள துணைத் தலையங்கத்தின் ஒரு பகுதி இதோ:
"இந்தக் கடுமையான நடவடிக்கைகளால்
நிலைகுலைந்து போன எதிர்க்கட்சிகள், காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும்
அரசியல் சாசன பிரிவுகள் 370, பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்கு வந்த 1.5
லட்சம் ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமை கிடையாது என்று கூறும் 35-ஏ ஆகிய
இரண்டையும் ரத்து செய்யவும், காஷ்மீரை மூன்றாகப் பிரிக்கவும் சதி
நடக்கிறது என்று கிளப்பிய பெரும் புரளியை காஷ்மீர் ஆளுநர்
மறுத்திருக்கிறார்.
அரசியல் சாசனப் பிரிவு 370-அய் ரத்து
செய்வதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டும் போதாது. நாடாளுமன்றத்தின்
ஒப்புதல் இல்லாமல், அரசு ஆணை மூலமாக 1954
இல் பிரிவு 35 -ஏ அரசியல் சாசனத்தில் முறையற்று நுழைக்கப்பட்டது. அதை
நீக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு
நிலுவையில் இருக்கிறது. காஷ்மீரை மூன்றாகப் பிரிக்க நாடாளுமன்றத்தின்
ஒப்புதல் தேவை. எனவே, அரசியல் கட்சிகள் அந்தப் பிரச்சினைகளை எழுப்புவது
முறையல்ல. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளில் அரசியலைக் கலக்காதீர்கள் என்று
வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஆளுநர். காஷ்மீர் போன்ற சிக்கலான பிரச்சினைகளில், அனைத்துக் கட்சிகளும் பொறுப்புடனும், பொறுமையுடனும் இருப்பது நாட்டுக்கு நல்லது.''
யார் சொன்னது உண்மை?
யாருடைய சந்தேகம் உறுதியாயிற்று?
புரிந்துகொள்வீர்!
No comments:
Post a Comment