Monday, July 22, 2019

ஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம்

ஒடிசாவின் மன்சேஸ்வரில் தபால் துறை அச்சகம் அமைந்துள்ள பகுதியில் மாநிலத்தின் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்கு கடிதங்கள், சரக்குகள் அனுப்புவதில் ஏற்படும் கால தாமதத்தை கருத்தில் கொண்டு தபால் மற்றும் சுங்க துறையின் கூட்டு ஒத்துழைப்புடன் தபால் துறை இதனை நிறுவி உள்ளது.  இது தொடர்பாக தபால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முன்பு ஒடிசாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப பதிவு செய் யப்படும் சரக்குகள், பொருட்கள் கொல்கத் தாவில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. இதனால், சுங்க அனுமதி பெறுவதற்கு கால தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த தாமதம் தடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...