கடந்த சில ஆண்டாக, மத்தியில் ஆளும் பாஜ
கட்சியின் தேர்தல் நன்கொடை நிதி கணிசமாக அதி கரித்து வருகிறது. இந்தாண்டு
புள்ளி விவரத்தின்படி, 2017-&2018இல் 6 தேசிய கட்சிகள் பெற்ற
ஒட்டுமொத்த தேர்தல் நிதியை போல், பாஜ.வுக்கு 13 மடங்கு அதி கமாக நன்கொடை
கிடைத்துள் ளது. இந்த காலக்கட்டத்தில், பிரதான கட்சிகள் பெற்ற மொத்த
தேர்தல் நிதி ரூ.469.89 கோடி. இதில், காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்
ஆகிய தேசிய தகுதி பெற்ற 6 கட்சிகள் பெற்ற மொத்த தேர்தல் நிதி ரூ.3.83 கோடி
மட்டுமே. ஆனால், பாஜ. வுக்கு மட்டும் ரூ.437.04 கோடி நிதி
வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதி பத்திரம் அறிமுகத்தால் அதிக பலனை
அடைந்திருப்பது பாஜ மட் டுமே. பெரிய நிறுவனங்கள் அரசி யல் கட்சிகளுக்கு
அளித்த ரூ.985.1 கோடி நிதியில், பாஜ.வுக்கு மட்டுமே ரூ.915.5 கோடி
கிடைத்துள்ளது. காங்கிரஸ் ரூ.55.3 கோடியை மட் டுமே பெற்றுள்ளது. இது பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், டில்லியில் நேற்று நடந்த,
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய
அமைச்சருமான இந்திரஜித் குப்தாவின் நூற்றாண்டு பிறந்தநாள் கூட்டத்தில்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘இன்று ஒரே ஒரு கட்சிக்கே 90
சதவீத தேர்தல் நன்கொடை குவிகிறது. எனவே, தேசிய தேர்தல் நிதி குறித்த
ஆலோசனைகளை முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது,’’ என்றார்.
கடந்த மார்ச் 2018 முதல் 2019 மே வரையிலான
காலகட்டத்தில் நாடு முழுவதும் ரூ.5,851 கோடிக் கான தேர்தல் நிதி
பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. இதில் 80.6 சதவீதம், தலைநகர் டில்லியிலேயே
பணமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு, பல்வேறு கட்சிகளின் தலைமையகம் டில்லியில்
இருப் பதே காரணம். டில்லியில் 10 கட்டமாக ரூ.874.50 கோடிக்கான தேர்தல்
நிதி பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. இதை விட 5 மடங்கு, அதாவது ரூ.4,715.58
கோடிக்கான பத்திரங்கள் டில்லி வங்கியில் வைப்புச் செய்யப்பட் டுள்ளன.
மும்பையில் ரூ.1,78.36 கோடிக்கான பத்திரங்கள் விற்கப் பட்டு, ரூ.11.13
கோடிக்கான பத்தி ரங்கள் வைப்புச் செய்யப்பட்டுள் ளன. சென்னையில், ரூ.184.0
கோடிக் கான பத்திரங்கள் விற்கப்பட்டு, ரூ.51.55 கோடிக்கான பத்திரங்கள்
வைப்புச் செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment