மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகையான
பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த ஜூன் 25ஆம் தேதி
உத்தரவு பிறப்பித்தது. இந்த அர சாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள்
உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என பல்வேறு அமைப்புகள் உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள்
எம்.எம்.சுந்த ரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசா
ரணைக்கு வந்தது. அப்போது, சுற் றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்
பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதி காரம்
உள்ளதாகவும், மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும் பிளாஸ்டிக்
உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,
வழக்கில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையை யும், மத்திய ரசாயன துறையையும்
எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். மேலும், பிளாஸ் டிக் தடை
உத்தரவு குறித்து இரு துறைகளும் பதிலளிக்கவும் உத்தர விட்டனர். இந்த
வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ரமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில்
மீண்டும் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு
வருமாறு:
அரசின் உத்தரவு மூலம் மக் களின் அடிப்படை
உரிமை பாதிக் கப்பட்டுள்ளது எனக்கூறுவ தையோ அல்லது ஆயிரக்கணக்கான
தொழிலாளர்கள் மற்றும் வியா பாரிகளின் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது
எனக்கூறுவ தையோ ஏற்க முடியாது. அரசு திட்டங்களுக்காக நில ஆர்ஜிதம்
செய்யும்போது நிலஉரிமையாளர் கள் தங்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது
எனக் கூறினால் தேசத்தின் வளர்ச்சியை எப்படி எட்ட முடியும். பொது மக்களின்
அடிப்படை உரிமையும் அவர்களின் பாதுகாப்பும் முக்கியம். அவர்களின்
சுகாதாரமான குடிநீர், மாசில்லாத காற்று ஆகியவை வழங்கப்பட வேண்டும். பொது
மக்களின் நலன் கருதியே அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை மற்றும்
கட்டுப்பாடுகளை விதித் துள்ளது.
கூடுதல் அரசு தலைமை வழக் குரைஞர் தனது
வாதத்தில், பால் பொருட்கள் அத்தியாவசியமா னவை. அதனடிப்படையில் தான் ஆவின்
பால் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். ஆவின்
பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை
பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்வது போன்ற மாற்று ஏற்பாடுகளை செய்ய
அரசுக்கு உத்தரவிடுகிறோம், மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக்
பொருட்களுக்கும் தடை விதித்தால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு
விதிக்கப்பட்ட தடையின் நோக்கம் நிறைவேறும்.
ஒரு முறை மட்டுமே பயன் படுத்தக்கூடிய
அனைத்து பிளாஸ் டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படவில்லை என்றால் இந்த
தடை உத்தரவு வெற்று காகித உத்தரவாக கருதப்படும். பிளாஸ் டிக் பைகளுக்கு
மாற்றாக துணி மற்றும் சணல் பைகளை தயாரித்து பயன்படுத்த வேண்டும். அறிவியல்
ஆய்வின் அடிப்படையில் பிளாஸ் டிக் பொருட்கள் நிலத்தில் மக்க 100 ஆண்டுகள்
ஆகும் என தெரிய வந்துள்ளது. விலங்கினங்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவறு தலாக
சாப்பிடுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட் கள் அன்றாட
வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி சுற்றுச் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை
ஏற்படுத்தி வருகிறது.
நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை
பெருக்கத்தால் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிக ரித்து வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டில் இருந்து மக்கள் தங்களை விடுவித்
துக்கொள்ள வேண்டும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு களை
ஏற்படுத்தி வருவது பாராட் டுக்குரியது. எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை
உத் தரவை கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும், இது தொடர்பாக தமிழக
அரசு பிறப் பித்துள்ள உத்தரவு சரியானது தான் என்பதால் இதுதொடர்பாக
மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து மனுக்களையும் தள் ளுபடி
செய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
* ஆவின் பாலை பாக்கெட் டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை பாட்டில்கள் மூலமாக விற்பனை செய்ய வேண்டும்.
* மறுசுழற்சி செய்ய முடியாத அனைத்து பிளாஸ்டிக் பொருட் களுக்கும் தடை விதித்தால்தான் தடையின் நோக்கம் நிறைவேறும்.
* பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் பைகளை தயாரித்து பயன்படுத்த வேண்டும்.
* பிளாஸ்டிக் பொருட்கள் அன்றாட வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி சுற்றுச் சூழ லுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற் படுத்தி வருகிறது.
No comments:
Post a Comment