புரதச் சத்து கிடைக்காமல் 48 விழுக்காடு
இந்திய குழந்தைகள் வளர்ச்சி குறைவினால் பாதிக்கப்பட் டுள்ளனர் _- தடை
செய்யப்படும் மாட்டு இறைச்சி _- ஓர் அறிவியல் பார்வை:
ஒரு குழந்தை வயதுக்கு உரிய எடை இல்லாமை (underweight), வயதுக்கு உரிய உயரம் இல்லாமை (stunning),
உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமை (wasting) ஆகிய மூன்றும் புரதச் சத்து குறைபாட்டின் தீய விளைவுகளாகும்.
உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமை (wasting) ஆகிய மூன்றும் புரதச் சத்து குறைபாட்டின் தீய விளைவுகளாகும்.
யுனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவனம்
ஆகியவற்றின் அறிக்கைப் படி இந்தியாவில் 'வயதுக்கு உரிய எடை' இல்லாத
குழந்தைகள் 48 விழுக்காடும், 'வயதுக்கு உரிய உயரம்' இல்லாத குழந்தைகள் 19.8
விழுக் காடும், 'உயரத்துக்கு உரிய எடை' இல்லாத குழந்தைகள் 42.5 விழுக்
காடும் உள்ளனர். இவ்வாறு புரத சத்து கிடைக்காமையினால் விளை யும் வளர்ச்சி
குறைவு என்பது குழந்தைகள் சிறுவயதில் இறந்து போவதற்கும், மோசமான காச நோய்
உள்ளிட்ட கிருமி தொற்றுகள் ஏற்பட காரணமாகவும், எதிர்காலத் தில் நலமற்ற உடல்
அமைவு ஏற்பட காரணமாகவும் அமைகிறது.
உலக வங்கியின் கூற்றுப்படி இவ்வாறான புரத
சத்து குறைபாடு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) நோய்கள்
காரணமாக 1.4 விழுக்காடு குறைக் கிறது. இவ்வாறு 48 விழுக்காடு இந்திய
குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் வளர்ச்சி குறைவினால் அவதியுறுகின்றனர் என்பது
உலக சராசரிகளின் படி மிக மிக மோச மான சூழல் ஆகும். அதாவது ஏறக் குறைய பாதி
இந்திய குழந்தைகள் புரதச் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் நிலை இவ்வாறு இருக்க, நாட்டில்
புதிய உச்சம் பெற்று இருக்கும் வலதுசாரி காவி பாசிச அமைப்புகள் மாமிச
உணவுகளுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மத அடிப்படையில்
ஏதோ ஒரு வகையில் மாமிசம் உண்போர் கீழானவர்கள் என்று நிறுவும் உள்நோக்கம்
அதில் இருக் கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே சமயத்தில் மாமிச
உணவுகள் உடலுக்கு தீயவை என்று விஞ்ஞானத்தின் துணை கொண்டும் நிறுவ அவர்கள்
முயல்கின்றனர் என்பதையும் நாம் அறிய வேண்டும்.
ஆனால் உண்மையில் அளவுக்கு உரிய மாமிச
உணவுகள் உடலுக்கு தீயவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் புரதச்
சத்துக்கள் மிக குறைவாக இருக்கும் சைவ உணவு பழக்கம் உடல்பருமன், இரத்த
அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், விட்டமின் பி12 குறைபாடு, புரத
சத்து குறைபாடுகள் ஆகியவற்றை ஏற்படுத்தவல்லவை என்பதற்கு ஏராளமான சான்றுகள்
உள்ளன. சமீபத்தில் பரவலாக அறி யப்பட்ட போலியோ உணவுமுறை ஓர் நல்ல
எடுத்துக்காட்டு ஆகும். ஆக இவ்வாறு நம் நாட்டின் 48 விழுக்காடு குழந்தைகள்
புரத சத்து குறைபாட்டினால் அவதியுறும் போது இறைச்சிமீது களங்கம்
விளைவிப்பது, இறைச்சி உண்ணு வோரை கீழானவர் என்று கற்பிதம் உருவாக்குவது,
மாட்டிறைச்சி உண் ணுவோர் கொலை செய்யப்படும் அளவு மோசமானோர் என்று
கதையளப்பது, ஆட்டு இறைச்சியை நாய் கறி என்று புரளி பரப்பிவிடுவது என்று ஒரு
சாராரர் தொடர்ந்து சமுக விரோதமாக இயங்கி வரு கின்றனர்.
சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்கும் இந்த
காலகட்டத்தில் நீங்கள் இறைச்சி உண்ணுவதே நீர் பற்றாக்குறைக்கு காரணம்
என்று மனிதர்களை பற்றி கவலைப்படாத மிருக 'பீட்டா' அமைப்பு விளம்பரத் தட்டி
வைத்திருப்பது இங்கே நினைவுகூர தக்கது. அவர்கள் இந்த விளம்பரத் தட்டியின்
மூலம் இறைச்சி உண்ணுவோரை குற்றவு ணர்வுக்கு ஆளாக்க முனைகின்றனர். தண்ணீர்
எல்லாம் கோழி வளர்க் கவே பயன்பட்டுவிடுகிறது என்று நீலிக்கண்ணீர்
வடிக்கின்றனர். ஆனால் உண்மையில் சைவ உணவு விவசாயத்திற்கே எல்லா தண்ணீரும்
செலவிடப்படுகிறது என்பதை அவாள் மறந்துவிட்டனர். ஏன் சைவ உணவுகளின் மூலம்
புரத சத்தினை பெற இயலாதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின் றனர்.
அதற்கான பதில் 'அது சாத் தியமே இல்லை' என்பதே ஆகும். சைவ உணவுகளின் மூலம்
நாம் அதிக பட்சமாக 28 விழுக்காடு புரதத்தினை மட்டுமே பெற இய லும். அதுவும்
அவ்வகை புரதங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. எடுத்துக் காட்டாக பாதாம்,
முந்திரி ஆகிய வற்றை குறிக்கலாம். பருப்பு வகைகள் தோராயமாக 20 விழுக் காடு
புரதத்தை மட்டுமே தரவல் லவை. ஒரு குழந்தை புரத உணவுக் காக வெறும் பருப்பை
மட்டுமே உண்டு கொண்டு இருக்க இயலாது. சைவ உணவில் உள்ள குறை-புரதம் மற்றும்
அதிக விலை ஆகிய கார ணங்களினால் சைவ வழி புரத உணவு வெகுமக்களுக்கு சாத்திய
மற்ற ஒன்றாக உள்ளது
அப்படி எனில் வழி தான் என்ன? என்றால் அது
இறைச்சி, மீன், முட்டை உள்ளிட்ட மிருக வழி புரதங்களை பரவலாக்குவது ஒன்றே
ஆகும். முட்டையின் வெள்ளை கரு 99 விழுக்காடு புரதத்தை தரவல்லது. மீன்
மற்றும் மாட்டு இறைச்சி ஆகியவை 60-_80 விழுக்காடு புரத சத்தினை தரவல்லது.
இவை அதிக புரத சத்தினை தருவதோடு மட்டு மல்லாது விலையும் குறைவான தாகும்.
குறிப்பாக முட்டை மற்றும் மாட்டு இறைச்சி விலை குறைந்த சிறப்பான புரதங்கள்
ஆகும்.
பாசிச அமைப்புகள் வாதிடுவது போல யாரும்
பால் தரும் விலங்குகளை கொன்று உண்ணப் போவதில்லை. மாறாக பால் தரும்
வாய்ப்பில்லாத மாடுகளைத் தான் இறைச்சிக்காக உலகம் முழுவதும்
பயன்படுத்துகின்றனர். அந்த விலங் குகள் பால் தர இயலாத வயதான சூழலில் அந்த
விலங்குகளுக்கு யார் உணவு தருவது?
இவ்வாறு பசு இறைச்சி தடையில் உள்ள
ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக் கணக்கான மாடுகள் உணவு கிடைக் காமல்
சாலையில் இறந்து கிடப் பதை நாம் செய்தித் தாள்களில் படித்து அறிந்து கொள்ள
முடிகிறது எனவே இந்தியாவின் புரதச் சத்து குறைபாட்டினை கருத்தில் கொண்டு
நாம் மத அடிப்படைவாதத்தின் பக்கம் நில்லாமல் விஞ்ஞானத்தின் பக்கம் நின்று
இறைச்சி உணவுகளை ஊக்கப்படுத்த வேண்டும். பாசிச அமைப்புகளை தமிழ் மக்கள்
புறக் கணிக்க வேண்டும்.
(டாக்டர் சத்வா முகநூலில் இருந்து...)
No comments:
Post a Comment