இதுகுறித்து சீன அரசு திங்கள்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித் துள்ளதாவது:
நடப்பு 2019-ஆம் ஆண் டின் ஜனவரி முதல்
மார்ச் வரையிலான முதல் காலாண் டில் சீனப் பொருளாதாரம் 6.4 சதவீத
வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இந்த நிலை யில், ஏப்ரல் -ஜூன் வரையி லான
இரண்டாவது காலாண் டில் பொருளாதார வளர்ச்சி கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத
அளவில் 6.2 சத வீதமாக சரிந்துள்ளது.
நடப்பாண்டின் முதல் அரையாண்டில் சீன பொரு
ளாதாரம் 6.3 சதவீத வளர்ச் சியை பெற்று 6.56 லட்சம் கோடி டாலரைத் தொட்டுள்
ளது என அந்தப் புள்ளிவிவ ரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடி காணப்பட்ட 2009-ஆம் ஆண்டில் கூட சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதத்துக்கும் குறையாமல் இருந்தது.
இந்த நிலையில்தான் தற் போதுதான் சீனாவின் பொரு ளாதாரம் இந்த அளவுக்கு குறைந்துள்ளது.
பன்னாட்டு தேவையில் ஏற்பட்ட மந்த நிலை
மற்றும் அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக போர் ஆகியவையே இந்த பின்னடைவுக்கு
முக் கிய காரணமாக பார்க்கப்படு கிறது.
கடந்த 2018-இல் பொரு ளாதார வளர்ச்சியானது
6.6 சதவீதமாக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அதன் வளர்ச்சி 6.0-6.5 சத
வீதம் அளவுக்கே இருக்கும் என சீன அரசு பல்வேறு சூழல் களை கருத்தில் கொண்டு
குறைத்து இலக்கு நிர்ணயித் துள்ளது.
No comments:
Post a Comment