இது சார்ந்து பலர் கல்விநிறுவனத்திடமும், சமுக ஊடகங்களிலும் தமது கண்டனத்தை தெரிவித் திருந்தனர்.
இதனை பொருட் படுத்தாத அக்கல்விநிறுவனம்,
தொடர்ந்து இப்போது அக்கல்வி நிறுவனத்தின் வாயிலில் புதிதாக பிரம்மாண்ட
நுழைவாயில் கட்டப் பட்டுக்கொண்டு இருக்கின்றது.
அதன் ஒரு முன்னெடுப்பாய், அக்கல்வி
நிறுவனத்தின் வாயிலில் இரண்டு பெரும் பதாகைகள் கல்வி நிறுவனத் தின் முக்கிய
பெயர் பதாகையாக வைக்கப்பட்டிருக்கிறது.
அப்பதாகைகளில் தமிழ் மொழிக்கு இடம் முழுவதுமாக மறுக்கப்பட்டி ருக்கிறது.
இந்த செயல் கட்டாயமாக அக் கல்வி நிறுவனம்
கட்டிக்கொண்டிருக் கும் நுழைவாயில் மாடத்தில் பொறிக்கப்படவிருக்கிற கல்வி
நிறுவனத்தின் முகப்பு பெயரின் முன் மாதிரியாகவே இருக்கலாம். அதன்
முன்னோட்டமாகவே தமிழை புறம் தள்ளி
இந்தியில் (மற்றும் ஆங்கிலத்திலே) பதாகை
வைத்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தமிழை தனது நுழைவாயிலி லிருந்து
முழுவதுமாக நிராகரிக்க வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே இதன் அருகாமையிலிருக்கும்
திருச்சிராப்பள்ளி படைக் கலத் தொழிற்சாலை (ளிதிஜி) நுழைவு வாயிலில்
தொடர்ந்து தமிழ் மறைக் கப்பட்டு மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment