குஜராத் மாநிலங்களவைக்கான தேர்தலில் பலத்த போராட்டத்திற்குப் பின்பு காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவின் நரித்தந்திரத்திற்கு முதல் அடி கிடைத்துள்ளது.
குஜராத் மாநிலங்களவைக்கான 3
உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த மாதம் தேர்தல் ஆணையத் தால்
அறிவிக்கப்பட்டது. இதில் வாக்கு எண்ணிக்கையின் படி காங்கிரசுக்கு ஒரு
உறுப்பினர், பாஜகவிற்கு இரண்டு உறுப்பினர்களைத் தேர்தெடுக்கும் சூழ்நிலை
இருந்தது. ஆனால் அமித்ஷா அந்த மூன்று இடங்களையும் பாஜகவே கைப்பற்ற வேண்டும்
என்ற நினைப்பில் காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையில் ஈடுபட்டார்.
ஏற்கெனவே காங்கிரஸ் தலைமை மீது புகைச்
சலில் இருந்த சங்கர் சிங் வகேலாவை அமித்ஷா பயன் படுத்திக் கொண்டார்.
சங்கர்சிங் வகேலா உறவினர் ஒருவர் திருமணத் திற்கு நேரில் சென்ற அமித்ஷா
அவரையும், அவரது ஆதரவு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துப்
பேசியுள்ளார். அப்போது காங்கிரஸ் கட்சி சங்கர் சிங்வ கேலாவை ஓரம் கட்ட
ஆரம்பித்துவிட்டது. இதனை அடுத்து சங்கர் சிங் வகேலா காங்கிரஸ் கட்சியில்
இருந்து விலகினார். அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு பாஜக விற்கு
கிடைப்பது உறுதியாகிவிட்டது.
அடுத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்
44 பேருக் கும் பாஜக குறிவைத்தது. இதனைப் புரிந்துகொண்ட காங் கிரஸ் தனது
44 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெங்களூரு அழைத்துச்சென்று தங்கவைத்தது.
இதனையும் தனக்குச் சாதகமாக மாற்ற முயன்ற அமித்ஷா ஏற்பாட்டில் குஜராத்
முழுவதும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை அடிமை களாகச் சித்தரித்து
பதாகைகள் வைக்கப்பட்டன. மேலும் பெங்களூருவில் அவர்கள் தங்கியிருந்த
விடுதிக்கு எப்போது மில்லாத முறையில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கப்
பிரிவு சோதனைகளை அதிரடியாக நடத்தி, அங்கிருந்த குஜராத் சட்டமன்ற
உறுப்பினர்களை மிரட்டிப் பார்த்தனர். இருப்பினும் ஒன்றும் நடக்கவில்லை.
வாக்குப்பதிவுக்கு முதல் நாள் 44 சட்டமன்ற உறுப்பினர்களும் குஜராத்திற்கு
அழைத்து வரப்பட்டனர். இவ்வளவு நடந்தும் 2 காங்கிரஸ் சட்டமன்ற
உறுப்பினர்களுக்கு பணத்தாசை காட்டி சில மணிநேரங்களில் தங்கள் பக்கம்
இழுத்துவிட்டனர். இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாங்கள்
பாஜகவுக்குதான் வாக் களித்தோம் எனத் திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக்
காட்சி போல் தாங்கள் வாக்களித்த சீட்டை பாஜகவின் தேர் தல் முகவரிடம்
காண்பித்தனர்.
இதனை அடுத்து குஜராத் மாநிலங்களவை
உறுப்பினர் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மனு
அளிக்கப்பட்டது. அதில், பாஜகவிற்கு அளித்தவாக்குச்சீட்டை பாஜக தேர்தல்
முகவரிடம் காண்பித்த இரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்குகளைச் செல்லாது என
அறிவித்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால்
வாக்கு எண்ணிக்கை தாமதமாகியது.
இதில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம்
தேர்தல் ஆணை யத்திடம் இருந்தது. எனவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த
விவகாரம் குறித்து ஆலோசித்து வந்தனர். இதற்கு நடுவே காங்கிரஸ் கட்சியின்
மூத்த தலைவர்கள் டில்லியில், இப்பிரச்சினை குறித்து அவசரமாக ஆலோசித்து
வந்தனர்
இதன்பிறகு, காங்கிரஸ் குழு தேர்தல்
ஆணையத்திற்குச் சென்று 2 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களது வாக்குகளும்
செல்லாது என அறிவிக்கக் கோரியது. ஆனால் பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி உள்ளிட்ட
மூத்த அமைச்சர்கள் தேர்தல் ஆணையத்திடம் 2 எம்எல்ஏக்கள் வாக்குகளும்
செல்லும் என அறிவிக்கக் கோரினர். நேற்று நள்ளிரவில் இருமுறை மூத்த
அமைச்சர்கள் அய்ந்துபேர் தேர்தல் ஆணையத்திடம் நேரில் சென்று
வலியுறுத்தியுள்ளனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
நள்ளிரவு வரை ஆலோசனை தொடர்ந்தது. இரவே அமித்ஷா அகமதா பாத்தில் இருந்து
தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு சென்றுவிட்டுமீண்டும் அகமதாபாத்
திரும்பினார். இதனால் அகமதுபடேல் தோல்வி உறுதி என்ற நிலை உருவானதாகக்
கருதப்பட்டது.
இதனை அடுத்து இரவு 11.30 மணியளவில்
தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்தது. கட்சி மாறி வாக்களித்து, அதை பாஜக
தேர்தல் முகவரிடம் காட்டிய இரண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின்
வாக்குகள் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ரகசிய வாக்கெடுப்பு
முறைக்கு எதிராக அவர்கள் நடந்துகொண்டதை காரணமாகக் கூறி அந்த வாக்குகளைச்
செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது
இதனை அடுத்து மாநிலங்களவைத் தேர்தலில்
காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர்
5ஆவது முறையாக மாநிலங்களவைக்குச் செல்கிறார்.
உண்மையில் இது பாஜகவின் பண பலத்திற்கு
எதிராக கிடைத்த வெற்றி, இந்திய அரசியலில் பல்வேறு ராஜதந்திர நிகழ்வுகளை
பார்த்ததுண்டு, அந்த ராஜதந்திர நிகழ்வுகள் வெற்றி பெறுவதும்,
முறியடிப்பதுமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது, ஆனால் அமித்ஷா தன்னுடைய
பணபலத்தை வைத்து நரித்தந்திரத்தை அரங்கேற்றியும் தோல்வியை முழுவதுமாகச்
சுமந்துள்ளார்.
இது பாஜவிற்கு மட்டும் கிடைத்த தோல்வி
அல்ல, பணபலத்தால் எதையும் வாங்கிவிடலாம் என்று நினைத்த அமித்ஷா-மோடி
கூட்டணிக்குக் கிடைத்த தோல்வி ஆகும். பாஜக சார்பில் போட்டியிட்டு
தோல்வியுற்ற பல்வந்த் சிங் சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில்
இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தார்மீகத்தைப் பற்றிப் பேசும் பாஜக -
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் முகத்தில் தார்பூசப்பட்டு விட்டது. இது பிஜேபிக்கு
மிகப் பெரிய சரிவாகும்.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment