Monday, July 10, 2017

செம்மொழித் தமிழ் உயராய்வு மய்யத்தை மூடும் மத்திய அரசு: தமுஎகச கண்டனம்

சென்னை, ஜூலை 10- தமுஎகச மாநிலத் தலைவர் ச.தமிழ்ச் செல்வன், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் அமைப்பான செம்மொழித் தமிழ் உயராய்வு மய்யத்தை மூடிவிட்டு அதை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதே போல இந்தியாவின் பல மொழிகளுக்காக அமைக் கப்பட்டுள்ள 76 மொழி உய ராய்வு நிறுவனங்களை மூடி ஆங்காங்கு உள்ள பல்கலைக் கழகங்களுடன் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளுக்கான உயராய்வு நிறுவனங்கள் மட்டும் இப்போதிருக்கும் தன்னாட்சி உரிமையுடன் தொடர்ந்து இயங்கும். மத்திய அரசின் இந்த முடிவு இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு என்கிற ஆர்.எஸ். எஸ்ஸின் நிகழ்ச்சி நிரலை அம லாக்கும் செயல் என்று தமுஎகச கருதுகிறது.

அனைத்து மொழிகளின் சமத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு திட்டமிட்ட முறையில் எடுத்து வைத்திருக்கும் ஜன நாயக விரோத நடவடிக்கை யாகும். சமஸ்கிருதத்தோடு எந் தத் தொடர்பு மற்றுத் தனித் தியங்கும் செம்மொழியான தமிழுக்கான உயராய்வு மய்யம் மூடப்பட்டு அதை ஒரு பல் கலைக்கழகத்தின் ஓரமான ஒரு துறையாக மாற்றுவதற்கான முதல் படியே இது என்று தமுஎகச கருதுகிறது. மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் பகுதி யாக இயங்கி வந்த தமிழுக்கான ஆய்வு மய்யத்தை சென்னைக் குக் கொண்டு வந்தபோது தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ந்தன.சங்கத்தமிழ் இலக்கியத்தை மக் களிடம் கொண்டு சேர்க்க 300க் கும் மேற்பட்ட இடங்களில் கருத்தரங்குகள், பொது நிகழ்ச் சிகள் நடத்திட செம்மொழி உயராய்வு மய்யம் உதவியது. பத்துநாட்கள் தமுஎகச படைப் பாளிகளுக்கு சங்க இலக்கிய பயிலரங்கு நடத்திடவும் இம் மய்யம் உதவியது.

பல மொழிசார் ஆய்வுக ளுக்கு பரிசும் விருதுகளும் உத வித்தொகையும் வழங்கப்பட்டு வந்தது. படிப்படியாக இம்மய் யத்துக்கான நிதியை குறைத்தும் நிறுத்தியும் இயக்குநர் பத வியை நிரப்பாமல் காலியாகவே வைத்தும் சீரழித்த மத்திய அரசு இப்போது நிரந்தரமாகவே மூடும்முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் கூறு நல்லுலகில் வாழும் மக்கள் அனைவரும் கொதித்தெ ழுந்து எதிர்க்க வேண்டிய முடிவு இது. இம்முடிவுக்கு எதிராக உறுதியுடன் போராட முன் வருமாறு எழுத்தாளர்கள், அறி ஞர்கள், அரசியல் இயக்கங்கள், தமிழ் அமைப்புகளை தமுஎகச அறைகூவி அழைக்கிறது.

முதற் கட்டமாக, தமுஎகச மாவட்டக் குழுக்கள் செம்மொழித் தமிழ் உயராய்வு மய்யத்தை மூடாதே. செம்மொழித்தமிழை அவமதிக் காதே என்கிற வாசகங்களுடன் தட்டிகள், சுவரொட்டிகள் போன் றவற்றை வெளியிடுமாறு கேட் டுக்கொள்கிறோம். இப்பகுதி யினரையும் இணைத்துக் கொண்டு எதிர்ப்புக்கூட்டங்கள் நடத்துமாறும் வேண்டுகிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...