Thursday, June 22, 2017

சி.பி.எஸ்.இ.யின் யோக்கியதை இதுதான்!

இந்தியா  முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ.  தேர்வை எழுதினார்கள். இந்தத் தேர்வு முடிவுகள், கடந்த மாதம் 28  ஆம் தேதி வெளியானது.   கடந்த வருடத்தைவிட இம் முறை  மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந் திருந்தது. தேர்வு முடிவுகள் வெளியானதும், சில மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதையடுத்துத்தான் மதிப்பெண் கூட்டலில் பெரும் தவறுகள் நடந்திருப்பது தெரியவந்தது.
மும்பையைச் சேர்ந்த ஒரு மாணவர் மற்ற பாடங் களில் 80 சதவிகித மதிப்பெண் எடுத்தார். ஆனால், கணிதப் பாடத்தில் மட்டும் 50 மதிப்பெண் எடுத்தார். மறு கூட்டல் முடிவில், அவர் கணிதத்தில் 90 மதிப்பெண் எடுத்தது தெரிய வந்துள்ளது. இது போல, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த பலருக்கும், குறைந்த மதிப்பெண்  அளிக்கப்பட்டது தெரியவந்தது.  அதே போல் சிபிஎஸ்இ நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் இதுவரை இல்லாத  அளவுக்கு, மதிப்பெண் கூட்டு தலில் பிழை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உதாரண மாக, ஒரு மாணவர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக, 68 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், மறுகூட்டலின் முடிவாக, 95 மதிப்பெண் பெற்றுள்ளார்.  விடைத்தாள் திருத்துதலில் குளறுபடி நடந்துள்ளதா அல்லது மறுகூட்டலின்போது குளறுபடி நடந்துள்ளதா என்ற குழப்பத்தைத்தான் இது ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தலைவர் அசோக் கங்குலி கூறுகையில், “இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் பழைய விடைத்தாள் திருத்தும் முறையை நாங்கள் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்,’’ என்கிறார். ஆனால், சி.பி.எஸ்.இ. விடைத்தாள் திருத்தும் முறையில் இவ்வளவு  நாள்களாக முறைகேடு நடந்துள்ளதாகவே, மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
இதுகுறித்து, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் பிரதமரிடம் முறையிட பெற்றோர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அசோக் கங்குலியின் இந்த பேச்சு மாணவர்களின் எதிர்காலத்தையே சிதைக்கும்வகையில் உள்ளது, நல்ல மதிப்பெண்கள் வாங்கவும், எதிர்காலத்தை தீர்மானிக்கவும் உழைத்து எழுதும் தேர்வில் சர்வ சாதாரணமாக திருத்துபவர்கள் செய்த தவற்றை மறைத்து பழைய முறைப்படி மாற்றுவேன் என்று கூறுவது பொறுப்பான பதில்தானா? நன்கு தேர்வெழுதிய மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாதா?
சி.பி.எஸ்.இ. என்றால் கல்வியில் ஏதோ முகத்தில் பிறந்த ஒன்று என்று தூக்கி வைத்துப் பேசப்படுகிறது.
அதன் தகுதி - திறமை எப்படி இருக்கிறது என்ப தற்கு இந்தத் தேர்வு குளறுபடிகள் போதுமானதாகும்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு மதிப்பெண்களும் வெளியான பிறகு, இதே சி.பி.எஸ்.இ. நிர்வாகம், அந்தக் கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்குக் கூடுதல் மதிப் பெண்கள் போட்டு தமிழ்நாட்டில் தொழிற்கல்லூரிகளில் அதிக இடங்களை அள்ளிச் சென்ற பழைய வரலாறுகள் எல்லாம் உண்டே!
பொதுவாக சி.பி.எஸ்.இ. என்பது மேல்தட்டு மக்களுக்கானது என்பதில் அய்யமில்லை.
அதன் நிர்வாகம் எவ்வளவு சீர்கெட்டுப் போயிருக் கிறது என்பது வெளிப்படை.
இந்தக் குளறுபடிகளுக்கு உண்மையான கார ணத்தை அறிய உரிய வகையில் விசாரணை தேவை!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...