Thursday, June 22, 2017

முகநூலில் பழங்குடிப் பெண்ணை அவமதித்த உ.பி. முதல்வர் கொடும்பாவி எரிப்பு!

கவுகாத்தி, ஜூன் 21 பழங்குடியினத்தவர்கள் ஒன்றிணைந்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் சாமியார் ஆதித்யநாத் உருவ பொம்மையைத் தீயிட்டுக் கொளுத்தி தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு வெளி யான நிர்வாணப்படுத்தப்பட்டு தாக் கப்படுகின்ற பழங்குடிப் பெண்ணின் படத்தை தற்போது முகநூலில் பதிவேற்றிய உத்தரப்பிரதேச முதல் வர் ஆதித்யநாத்தைக்கண்டித்து பழங்குடியினத்தவர்களுக்கான அமைப்பினர் அசாம் மாநிலத்தில் போராட்டத்தை நடத்தியதுடன், காவல்நிலையத்திலும் ஆதித்யநாத்மீது புகார் கொடுத்துள்ளனர்.
13.6.2017 அன்று உத்தரப்பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் பெயரில் செயல்பட்டுவருகின்ற முகநூலில் பழங்குடியினப் பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட படத்தை வெளியிட்டு, மேற்கு வங்கத்தில் இந்துப் பெண்ணை குறிவைத்து காங்கிரசார் தாக்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டில் நவம்பரில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் போராட்டத்தின்போது   ஏற்பட்ட வன்முறையின்போது, கவுகாத்தியைச் சேர்ந்தவர்களில் சிலர் பழங்குடிப் பெண்ணை துரத்தி துரத்தி கடுமையாகத் தாக்கினார்கள்.
பழங்குடியினப்பெண் நிர்வாணப் படுத்தப்பட்டு தாக்கப்படும் படத் தில் அப்பெண்ணின் முகத்தை மறைக்காமல் உத்தரப்பிரதேச மாநிலத் தின் முதல்வர் ஆதித்யநாத் பெயரில் இயங்கும் முகநூலில் அப்படியே பதிவேற்றப்பட்டுள்ளது. அப்பதிவை தேஸ்பூர் பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் ஆர்.பி.சர்மா அப்படியே அவருடைய முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
சாமியார் ஆதித்யநாத் உருவ பொம்மை தீவைத்து எரிப்பு
இதனையடுத்து, அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அசாம் பழங்குடி அமைப்பினர் ஒன்றிணைந்து உத்தரப்பிரதேச மாநில முதல்வர் சாமியார் ஆதித்யநாத்தைக் கண்டித்து அவருடைய உருவப்பொம்மையைக் கொளுத்தினார்கள்.
அசாம் மாநில அனைத்து ஆதிவாசி மாணவர்கள் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் திபென் ஓரங் கூறும்போது, “அசாம் மாநிலத்தில் நடைபெற்ற பழைய நிகழ்வின் படத்தை மேற்கு வங்கத்தில் இப்போது நடந் துள்ளதாக உத்தரப்பிரதேச மாநில முதல்வர்பதிவேற்றியிருப்பது மிகவும் வெட்ககரமானது. பெண்களின் பெரு மையை சீர்குலைக்கின்ற வகையில் பெண்களுக்கு மதிப்பளிக்காத வகை யில் வகுப்புவாத வெறியுடன் அப் படத்தை பதிவேற்றியுள்ளார்’’ என்றார்.
உ.பி. முதல்வர்மீது காவல்நிலையத்தில் புகார்
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக அசாம் மாநில அனைத்து ஆதிவாசி மாணவர்கள் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் திபென் ஓரங் முகநூல் பதிவின்மூலமாக பழங்குடிப்பெண்ணை இழிபடுத்தியது குறித்து சராய்தியோ மாவட்டத்தில் மொரான்ஹட் காவல்நிலையத்தில்  புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின்பேரில் ஆதித்யநாத்மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் நிலையில் உள்ளது.
மொரான்ஹட் காவல்நிலைய பொறுப்பு அலுவலர்  எம்.என்.பாரிக் கூறும்போது, “உத்தரப்பிரதேச மாநில முதல்வர்மீது புகார் பெற்று முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டுள்ளது. ஆனால், உணர்வுபூர்வமான இப் பிரச்சினையில் முதலமைச்சர் பெயர் தொடர்புள்ளதால், வழக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்காக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரி விக்கப்பட்டு, அவர்களின் அறிவுறுத் தலுக்காக காத்திருக்கிறோம்’’ என்றார்.
ஆதித்யநாத்துக்கு எதிராக மான நட்ட வழக்கு தொடரப்படும்!
தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் பழங்குடிப்பெண் அவ மதிக்கப்பட்ட படத்தை 10 ஆண்டுகள் கழித்து தற்போது, முகநூலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் ஆதித்யநாத், அப்பதிவை பகிர்ந்த தேஸ்பூர் பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் சர்மா ஆகியோர்மீது பிஸ்வநாத் சாரியாலி மாவட்ட நீதிமன்றத்தில் மானநட்ட வழக்கு தொடர உள்ளதாக பழங்குடி பெண் அறிவித்துள்ளார்.
அசாம் மாநில காவல்துறை தலை வர் முகேஷ் சகாய் கூறும்போது, புலனாய்வு நடைபெற்று வருகிறது என்றார்.
ஆதித்யநாத் முகநூல் பதிவில், இந்துப் பெண் ஒருவர்  பாஜக மற்றும் மோடியை ஆதரித்து முழக்கமிட்டார் என்பதால், காங்கிரசாரால் நிர் வாணப்படுத்தப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காங்கிரசின் உண்மையான முகத்தை உலகுக்கு காட்ட வேண்டும் என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படுகின்ற நிகழ்வு எப்போது நடைபெற்றது என்று குறிப்பிடப்படவில்லை.
சோம்நாத் சக்ரபோர்த்தி என்ப வர் ஆதித்யநாத் பதிவுக்கு பதில் கூறும்போது, நீண்ட காலத்துக்கு முன் பாக பழங்குடிப் பெண் தாக்கப்பட்ட நிகழ்வு நடந்தது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குத் தெரிந்து, தயான் என்பவர் கடுமையாகத் தாக்கி, ஆடைகளைக் களைந்த அதன் காட்சிப்பதிவு வெளியானது. அப்போது அசாம் உயர்நீதிமன்றம் தண்டனையும் தண்டத்தொகையையும் விதித்து, அவனை சிறையில் தள்ளியது என்று குறிப்பிட்டுள்ளார். அவரைப்போல் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். உத்தரப்பிரதேச முதல்வர் பெயரில் இயங்கும் முகநூல் பக்கத்தை 95ஆயிரம் பேர் தொடர்கின்றனர்.
போராட்டங்கள் நடைபெற்றபோதிலும் பதிவு நீக்கப்படவில்லை
13.6.2017 அன்றுமாலை பதிவேற்றப்பட்ட பதிவின்மூல மாக கடும் எதிர்ப்பு, பழங்குடி யினத்தவரிடையே பெரும் கொந் தளிப்பு ஏற்பட்ட போதிலும், இன்னமும் ஆதித்யநாத் முகநூல் பக்கத்திலிருந்து பழங்குடி பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப் படுகின்ற படம் நீக்கப்படவும் இல்லை, அப்பதிவுக்காக உத்தரப்பிர தேச முதல்வர் ஆதித்யநாத் வருத்தம் தெரிவிக்கவும் இல்லை.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...