Total Pageviews

Tuesday, May 23, 2017

சபாஷ்; சரியான தண்டனை!


சாமியார்களின் திருவிளையாடல்கள் குறித்து திரா விடர் கழகம் தொடர்ந்து தன் பிரச்சாரத்தைச் செய்து வந்துள்ளது. சாமியார்களின் திருவிளையாடல்கள் குறித்து தனி நூலே கூட திராவிடர் கழகத்தின் வெளியீடாக வந்துள்ளது. பல பதிப்புகள் போடப்பட்டு, மக்கள் மத்தியிலும் சென்றடைந்துள்ளது.

ஆனாலும், அவ்வப்போது சாமியார்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்; காரணம், அது ஒரு முதல் தேவைப்படாத தொழில்.

மக்கள் மத்தியில் பதிந்து கிடக்கும் மூடநம்பிக்கை களை வேண்டுமானால் சாமியார்களின் முதலீடாகக் கொள்ளலாம். நமது சமுதாயத்தில் வறுமை, பிணிகள், குழந்தை இல்லாமை என்பது போன்ற பிரச்சினைகள் இருக் கின்றன. இவற்றின் அடிப்படையில் பலகீனப்பட்ட மக்களை வெகு எளிதில் தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ளும் ஒரு யுக்தியைத்தான் இந்த சாமியார்கள் கைக்கொள்கின்றனர்.

புட்டபர்த்தி சாய்பாபாவிலிருந்து, கேரளாவில் ஆண் குறி அறுக்கப்பட்ட சாமியார்கள்வரை - அவர் களின் பின்னணியில் உள்ள சமாச்சாரம் இத்தியாதி... இத்தியாதி...

ஒரு பெண் திருமணமாகி சிறிது காலத்திற்குள் கருத்தரிக்கவில்லை என்றால், அது பெரிய பிரச்சி னையாகக் கருதப்படும் கீழிறக்கச் சிந்தனை - இந்துச் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினை!

ஒரு பெண் கருத்தரிக்காமைக்குக் காரணம் பல உண்டு; கணவனும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால், ஜான் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்ற மமதை - ஆண் என்றால் ஆண்மைக்குச் சொந்தக்காரன் என்ற அகந்தையில், அவனிடம் குறையிருப்பதாகச் சொல்லக்கூடாது; ஏன் அந்த வகையில் எண்ணவும்கூடக் கூடாது என்கிற திமிர்ப் பிடித்த ஆண் எஜமானத்தனம் நம் நாட்டில் இருக்கிறது என்பது  நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

அறிவியல் வளர்ந்த இந்தக் காலகட்டத்தில்கூட, சோதனைக் குழாய் (டெஸ்ட் டியூப் பேபி) மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி விண்ணை முட்டும் இந்தக் காலகட்டத்தில்கூட குழந்தைப் பேற்றிற்காக சாமி யார்களைத் தேடிச் செல்லும் அவலத்தை என்னென்று சொல்ல!

இந்த சந்தர்ப்பத்தை சாமியார்கள் என்னும் ஆண் பொலிக் காளைகள் பயன்படுத்திக் கொள்கின்றன - இந்தச் செய்தியை வெளியில் சொல்ல முடியாத நிலைக்குப் பெண்களும் தள்ளப்படும் பரிதாப நிலை!

கோவில் நகரம் என்று சொல்லப்பட்ட காஞ்சீபுரத்தில் மச்சேந்திர நாதர் கோவில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் என்ற கயவன் கோவிலுக்கு வரும் பக்தைகளை எப்படியெல்லாம் பாலியல் வேட்டையாடினான் என்பது ஊர் சிரிக்கவில்லையா? எந்த அளவுக்கு கயமைத்தனத்தின் உச்சிக்குச் சென்றான் என்பதற்கு அடையாளம் - பக்தைகளிடம் தான் உறவு கொண்ட நிலையில், அதைக் கைப்பேசி மூலமாகப் படம் எடுத்து, அந்தப் பெண்களிடம் போட்டுக் காட்டி அச்சுறுத்தி (பிளாக்மெயில்) மீண்டும் மீண்டும் அந்தப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்துவதை வழமையாக்கிக் கொண்டான் என்பதைக் கண்டித்து ஏடுகள் எழுதிய துண்டா? ஊடகங்கள் விமர்சித்ததுண்டா?

ஏன் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி யின் யோக்கியதைதான் என்ன?

எழுத்தாளர் அனுராதா ரமணன் தொலைக்காட்சி யில் கண்ணீரும், கம்பலையுமாகக் குமுறவில்லையா? காஞ்சி மடத்துக்குச் சென்றபோது தன் கையைப் பிடித்து ஜெயேந்திரர் இழுத்ததாகப் பட்டாங்கமாகப் போட்டு உடைத்தாரே!

யோக்கிய சிகாமணி குருமூர்த்தி அய்யர்கள், ‘சோ’ போன்றவர்கள் அந்த நேரத்திலும்கூட அந்தக் காமுகன் சங்கராச்சாரியார் பக்கத்தில் நின்றுதானே சாமரம் வீசினார்கள். இவ்வளவுக்கும் அனுராதா ரமணன் என்னும் அந்தப் பேர் பெற்ற எழுத்தாளர் அக்கிரகாரத்துப் பெண்மணிதான்!

ஏடுகளில் நேற்று வந்த ஒரு தகவல்தான் சிறப்பானது: காமக் கொடூரர்களுக்கான அபாய எச்சரிக்கையும்கூட!

திருவனந்தபுரத்தில் இளம்பெண் ஒருவரை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்த - கொல் லத்தைச் சேர்ந்த சட்டம்பு சுவாமி ஆசிரமத்தைச் சேர்ந்த ஆசாமியின் ஆண் உறுப்பை - பாதிக்கப்பட்டு வந்த அந்தப் பெண் அறுத்தார் என்பதுதான் அந்தச் செய்தி!

அந்த சாமியார் இப்பொழுது மருத்துவமனையில்! பல பிரிவுகளின்கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டு விட்டது. அந்தப் பெண்ணின் வீர தீரத்தை கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் பாராட்டியுள்ளார்.
 பல தளங்களிலிருந்தும் பாராட்டுகள் குவிவது வர வேற்கத்தக்கது. திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவரும் வரவேற்றார்.
பக்தியின் ஒழுக்கம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை பக்தர்கள் சிந்திப்பார்களாக!

0 comments: