Total Pageviews

Wednesday, May 24, 2017

உற்சாகம், உறக்கம், வாழ்க்கை அளவீடு என்ன?


வாழ்க்கையில் பலபேருக்குப் பிடிப்பில்லாமல், ஏனோதானோ என்ற அலட்சியமும் சலிப்பும் சங்கடமும் கலந்த விரக்தி நிலையிலேயே காலந் தள்ளும் தன்மை பல வெகு பேரிடம் உண்டு.
இதற்கு மூல காரணம் என்ன?
உடலும், உள்ளமும் சரியான ஒருங்கிணைப்போடு இயங்காமல் இருப்பதேயாகும்.
உடல்நலக்குறைவு, அல்லது உடல்நோய் உபாதைகள் மனதில் சலிப்பினை ஏற்படுத்தும்.
சிலர் நல்ல உடலைப் பெற்றிருந்தும், ஏனோ நல்ல உள்ளத்தைப் பெறாமல், தங்களுக்குள் உள்ள ஆற்றலை வெளிப் படுத்தி, வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற முடியாமல் வேதனையை அனுபவிக்கின்றனர்!
மனக்குழப்பம், ஒரு வகை தாழ்வு மனப்பான்மை; Ôஹூம்... நமக்கெங்கு இது கிடைக்கப்போகிறது? நம்மால் இது முடியாத காரியம்Õ இப்படிப்பட்ட சிலந்திவலைக்குள் மாட்டிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தே வாழ்க்கையின் பயனை துய்க்கத் தவறிவிடுகிறார்கள்!
ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்த டேவிட் ஸ்டார் ஜோர்டன் கூறுகிறார்: “நீங்கள் எதைச் செய்தாலும் சரி, உற்சாகத்துடனும், துடிப்புடனும் செய்யுங்கள்”!
- எளிய இந்த அறிவுரையைப் பின்பற்றுங்கள்.
பிரபல வரலாற்றுப் பேராசிரியரான ஆர்னால்டு டாயன்பி (இவர் பெரிய தத்துவ சிந்தனையாளரும்கூட) எழுதுகிறார்: (ஒரு நூலைப்படித்தேன் - உங்களுடன் பகிர்ந்து கொள்ளு கிறேன்)
“சுவாரசியமற்ற ஒரு நிலையை உற்சாகத்தால் மட்டுமே உடைத்தெறிய முடியும். உற்சாகத்தை இரண்டு வழிகளில் தூண்டிவிடமுடியும்.”
“முதலாவது, எல்லை யற்ற கற்பனையைத் தூண்டி விடக்கூடிய உயர்ந்த சிந்தனை.”
“இரண்டாவது, அந்த உயர்ந்த சிந்தனையை நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய ஒரு சிறந்த புத்திசாலித்தனமான திட்டம்’’
எதிலும் உற்சாகத்துடன் இருப்பதால் தனிச் சிறப்பே சிறப்பு
எவரும் எதிலும் தூசியாக இருப் பதைவிட சாம்பலாக இருப்பதே மேலானது.
துடிப்பு மக்கி மடிவதைக்காட்டிலும் சுடர் விட்டு எரிந்து சாம்பலாகி விடுவதில் எவ்வளவு சிறப்பு - எண்ணிப்பாருங்கள்!
உற்சாகத்தோடு எதையும் செய்யுங்கள் துடிப்போடு இயங்குங்கள்.
துடிப்புகளை மிகைப்படுத் தாமலும், அதேநேரத்தில் குறைத்துக் கொள்ளாமலும் வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கு வேறு ஆசானைத் தேடி அலையவேண்டியதில்லை. நமது இதய ஒலியைக் கேளுங்கள் - அந்த‘over-enthusiasm’எவ்வளவு சீராக அதன் பணியை அலுப்பு சலிப்பின்றி செய்துவருகிறது!
அதைப்பார்த்து, நாம் நமது கடமையைச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டாமா?
உற்சாகம் என்பதுகூட, கட்டுக்குள் இருந்தால் - விழுமிய பயன், நாம் விரும்பிய வண்ணம் கிட்டக்கூடும்!
அடுப்பெரிக்க நெருப்பு தேவை தான்! அதனைப் பயன் படுத்தும்போது நாம் எவ்வளவு விழிப்புடன் உள்ளோம்; அதே போன்று உற்சாகத்தைக்கூட அளவுக்கு மீறி வழிந்தோட விடக்கூடாது!
இதை ஆங்கிலத்தில் enthusiasm உற்சாகம் என்று குறிப்பிட்டாலும், அதிலும் சற்று வேகமானப் பாய்ச்சல் என்றால், அது ‘over-enthusiasm’ வரம்பு தாண்டியது. அதன் விளைவு நாம் எதிர்பார்க்கும் இலக்கையும் அடையாமல் தடுத்து தோல்விப் படுகுழியில் நம்மைத்  தள்ளிவிடும். எனவே, கட்டுப்படுத்தப்படாத உற்சாகம் பொங்கவேண்டாம்!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

0 comments: