Friday, May 26, 2017

மின்னணுப் புரட்சி தரும் ‘மிரட்சி' இதோ! (2)

கைப்பேசிகளை (செல்போன்களை) தேவையானபோது மட்டுமே பயன் படுத்துவது, விபத்துக்களின்போது அவற்றைப் பயன்படுத்தி உடனே  ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ உதவிகளைப் பெறுதல், தீப்பிடித்துக் கொண்டிருக்கும்போது தீயணைப்புத் துறையினரை அவசரமாக அழைக்கப் பயன்படுத்துவதோ அல்லது குழந்தைகளோ, மகளிரோ, வயதானவர்களோ அல்லது நாமோ, ‘திடீரென்று’ சற்றும் எதிர்பாராத துன்பத்திற்கோ, சிக்கலிலோ மாட்டிக் கொண்டால் ‘கைப்பேசி’ மிகப்பெரிய அவசர உதவியாளன்தான்; அதில் அய்யமில்லை.
தேவையில்லாதபோது, ‘அரட்டைக் கச்சேரிகளை’ நடத்திட தனி ஆவர்த் தனம் செய்யும் பலருக்கு இது ஒரு நல்ல கருவியாக மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான்!
கைப்பேசிகளில் - வியாபாரப் போட்டிகள் காரணமாக - செல்பி (Selfie) எடுக்க - இதுவே சிறந்தது என்று விளம்பரப்படுத்தப்படும் நிலையில், ‘செல்பி’ எடுக்கும் தொற்றுநோய், பிரதமர் மோடியில் தொடங்கி நம்மூர் குழந்தைச் செல்வங்கள்வரை பரவி யுள்ளது! எதிர்வரும் ரயிலைக் கண்டுகொள்ளாது மாளுபவர்கள், ரயில் தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுத்து மரணமடைந்தவர்கள், கார்- வாகனங் களில் அடிபட்டு உயிரை விட்டவர்கள் என்ற விரும்பத்தகாத மரணச் செய்திகளும் தொடருகின்றனவே!
எதற்குமே இரண்டு பக்கங்கள் உண்டு என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக் கொண்டு நன்மைகளை பற்றிக்கொண்டு, தீமை களை - தீய விளைவுகள் தருபவைகளை அறிவுபூர்வமாக தவிர்த்து விடல் அவசர அவசியமாகும்!
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாக சாகி நகரங்களில் வீசப்பட்ட அணு குண்டின் நாசமும், விளைவுகளும் ஜப்பானை இன்றுவரை பாதிக்கின் றனவே! கட்டடங்கள் மீண்டும் எழுப்பிவிட்டார்கள் - மனித உயிர்களை மீட்க முடிந்ததா? அதனால் பாரம் பரியமானவர்கள் குழந்தைகள்கூட இன்றுவரை பாதிப்புக்கு ஆளாவதைத் தவிர்க்க இயலவில்லையே!
பிறகு அதை அய்.நா. போன்ற உலக நாடுகள் உணர்ந்த காரணத்தால்தான் அணுசக்தியை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வ (சமாதான) அணுசக்தி பயன் ‘Atom for Peace’ என்று கண்டறிந்து மின்சாரத் தயாரிப்பு மற்றும் நலவாழ்வுக்கு - அணுசக்தியைப் பயன்படுத்திட்ட மருந்து- சிகிச்சை முறை Nuclear Medicine என்பதைக் கண்டறிந்து மாற்று ஏற்பாடாகப் பயன் படுத்தி வருகின்றனர்!
இதிலும் ஆபத்து உள்ளடக்கமாக இருக்கிறது என்பதற்காக, பழைய அனுபவப் பாடங்களைக் காண்பவருள் அணுசக்தி மின் நிலையங்களே எங்கள் உயிர்களையும், சுற்றுச்சூழலையும் பாதித்தது; வாழ்வாதாரத்தையும், ஆய ளையும் கேள்விக்குறியாக்கி விடுமே என்ற அச்சத்தோடு ஒரு எதிர்ப்பியக் கத்தையே கட்டி நடத்தி வருகிறார்களே!
அறிவியலின் வேகம்  பல துறை களில் மனித குலத்திற்கு முன்னேற் றத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது; எல்லாவற்றையும் புறந்தள்ளி பழைய கால தீவட்டி, அகல் விளக்கு யுகத்திற்குச் செல்ல முடியாது என்பது உண்மையே. ஆனாலும், எதையும் கையாளுமுன் அளவறிந்து வாழ்தல் அவசியமானது!
நவீன சாதனங்களை குழந்தைகள் குறைக்க வேண்டுமென்றால், முதலில் பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு அதிகநேரம் அவற்றைப் பயன்படுத்து தலைத் தவிர்ப்பது அவசியமாகும்! காரணம், பெற்றோர்களைப் பார்த்துத் தான் குழந்தைகள் கற்றுக் கொள்ளு கிறார்கள் பல விஷயங்களை - பல பழக்க வழக்கங்களை. அவர்கள்தான் குழந்தைகளுக்கு முக்கிய முதன் மையான ஆரம்ப கால வழிகாட்டிகள்;  முன்னோடி ஆசிரியர்கள்.
எனவே, அவர்கள் எப்படி குழந் தைகள் நடந்துகொள்ள வேண்டுமென நாம், குறிப்பாக பெற்றோர்கள், விரும் புகிறார்களோ அப்படியே அவர்களும் நடந்துகொள்ளுவதே அறிவுடைமை; அனுபவப் பாடம்!
அவர்கள் முன்னால் கைப்பேசி, தொலைக்காட்சி முதலியவைகளை அளவோடு பயன்படுத்தி, உடனடியாக அணைத்து வைத்துவிட்டு, அடுத்த கடமைகளைப் பார்ப்பதில் ஈடுபாடு கொண்டால், பிள்ளைகளும் புரிந்து கொள்வர்.
எதையும் எவருக்கும் போதிக்கும் முன்பு, நாம் அவ்வாறு நடந்துகொள் ளுவதுதான் அருமையான- வெற்றி கரமான கற்றுக் கொடுக்கும் கலையாகும்!
ஒன்றரை வயதுக்குட்பட்ட குழந்தை களிடம் ‘செல்போன்’ உள்ளிட்ட எலக்ட் ரானிக் சாதனங்களைக் கொடுக்கவே கூடாது. அந்த காலகட்டத்தில் குழந்தை யின் மண்டை ஓடு மிருதுவாக இருக்கும் என்பதால், எலக்ட்ரானிக் மின்காந்த அலைகள் மூளையைப் பாதிக்கும் அபாயம் உண்டு என்பதால், எச்சரிக்கை தேவை என்கிறார், மின்னணு வல்லுநர் ஒருவர். நினைவில் வைத்து இதை நடைமுறைப்படுத்துங்கள்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...