Wednesday, November 9, 2016

‘‘மாசு நிறைந்த’’ சிந்தனை!

கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தலைநகர் டில்லி மாசடைந்த நகரத்தின் வரிசையில் உலகத்திலேயே முதலிடம் பிடித்து வருகிறது, உலக சுகாதார நிறுவனம் அதிக நச்சுத்தன்மை கொண்ட நுண்ணிய துகள்களை சுவாசிக்கும் மக்கள் அதிகம் வாழும் நகரம் டில்லி என்று அறிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு மிகவும் அதிக மாசடைந்த நகர பட்டியலில் 7 ஆம் இடத்தில்  இருந்த பீஜிங் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் ஒத்துழைப்புடன் தற்போது 78 ஆம் வரிசைக்குச் சென்றுவிட்டது, ஆனால், இந்தியத் தலைநகர் டில்லி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரு கிறது,
மக்கள் நெருக்கம், வாகனப் புகை, தொழிற்சாலைப் புகை என பல வழிகளில் அங்கு காற்று மாசடைந்து வருகிறது. அங்குள்ள காற்றை அளவீடு செய்து பார்த்ததில், அந்த மாசடைந்த காற்றை சுவாசிப்பது தினமும் 40 சிகரெட்டுகள் புகைத்ததற்கு சமம் என்ற அதிர்ச்சியான செய்தி தெரியவந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து தீபாவளி முடிந்த பிறகு காற்று மாசு அதிகரித்துள்ளது, முக்கியமாக பட்டாசு வெடிப்பதினால் உருவாகும் வேதிப்புகை, அக் டோபர் மாதத்தில் இருந்து குளிர்காலம் ஆரம்பிக்கும் காரணத்தால் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும், இந்த நேரத்தில் ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைப் புகை, மக்கள் நெருக்கத்தால் ஏற்படும் கார்பன் டை ஆக்ஸைடு பட்டாசின் வேதிப்புகையும் கலப்பதனால் நச்சு நிறைந்த காற்றுக் கலவை உருவாகி விடுகிறது,
சாதாரண நிலையில் 1.0 என்ற அளவில் காற்றில் கரியமில வாயுவின் அளவு இருக்கவேண்டும் ஆனால், டில்லியில் 30+ என்ற ஆபத்தான அளவையும் தாண்டியுள்ளது; இது மிகவும் ஆபத்தான நிலையே!
தீபாவளிக்கு முன்பு 20% என்ற அளவில் இருந்த கார்பன் அளவு பட்டாசுகள் வெடித்ததன் காரணமாக 14% கூடி 34% என்ற ஆபத்தான எல்லையைத் தாவிப் பிடித்துள்ளது.  காற்றில் இந்த அளவு கார்பன்  அதிகரிப்பதால் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் நபர்களுக்குக்கூட மூச்சு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு, மேலும் நுரையீரல், இருதய நோய் உடையோர்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக ஒரே நாளில் தலைநகரில் உள்ள அய்ந்து அரசு மருத்துவமனைகளில் கண் எரிச்சல், தொண்டை வறட்சி, சுவாசக் கோளாறு மற்றும் தோல் அரிப்பு போன்ற நோய் அறிகுறிகளுடன் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை 12 ஆயிரமாக  அதிகரித்துள்ளது. தீபா வளிக்குப் பிறகு தொடர்ந்து  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது,
ஆரம்பம் முதலே பட்டாசுகளை வெடிக்கவேண்டாம் என்று தொடர்ந்து பல்வேறு சமூக நல அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.  ஈரப்பதம் அதிகமுள்ள குளிர் மாதத்தில் பட்டாசுப் புகைகள் சுற்றுப்புறச்சூழலை கெடுத்துவிடும் என்று அறிக்கை விட்டும் அக்கறையில்லாத மக்கள் பட்டாசுகளைக் கொளுத்தி கொண்டாடியதால் தாங்களே அதன்  நச்சு புகைவலையில் சிக்கிக்கொண்டனர்.
இந்த நிலையில் தலைநகர் டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த காற்று மாசு குறித்து கவலை தெரிவித்துள்ளது, தலைநகர் டில்லிக்கு சுற்றுலா வரும் அமெரிக்கர்கள் காற்றுமாசுவிலிருந்து பாதுகாக்க உப கரணங்களை கையோடு கொண்டு வரவேண்டும் என்று சுற்றுலா கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
தலைநகர் டில்லியில் அளவிற்கு அதிகமாக காற்று மாசடைந்துள்ளதால்,  மாசு கட்டுப்பாட்டு வாரியம்  சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தலைநகர் டில்லியில் காற்றுமாசு ஏற்படுவதை கண்காணிக்கவும் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் உத்தரவை முழுமையாக அமல்படுத்தவும் ஆணையிடவேண்டும் என்று அந்த மனுவில் குறிப் பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் மற்றும் நீதிபதிகள் டி ஒய் சந்திரசவுத், எல். நாகேஷ்வர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (8.11.2016) பிற்பகல் 3.30 மணியளவில் மனுவை விசாரிப்பதாகக் கூறியுள்ளது.
கடந்த ஆண்டும் இதே தீபாவளி அன்று காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியதை அடுத்து பல் வேறு ஆலோசனைகளை டில்லி அரசுக்கும் மாசுக்கட்டுப் பாட்டுப்பாடு வாரியத்திற்கும் உச்சநீதிமன்றம் பிறப்பித்தி ருந்த நிலையில், அந்த ஆலோசனைகளை சரிவர பின்பற்றாததாலும் இந்த ஆண்டு மிகவும் அதிக அளவு பட்டாசுகளை வெடித்தகாரணத்தினாலும் காற்று மாசு சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்துள்ளது.
தீபாவளி என்ற இந்துப் பண்டிகையால் புத்தி நாசம், பொருள் நாசம், பொழுது நாசம் என்பதோடு ஒட்டு மொத்தமான பொது நாசம் (காற்று மாசு) என்ற நிலையில் இருப்பதைக் கவனிக்கவேண்டும். அமெரிக்காவில் கூட குடியரசு நாளன்று (ஜூலை 7) அரசு தரப்பு மட்டும்தான் குறிப்பிட்ட இடத்தில் வெடி, மத்தாப்பு, வாணவேடிக்கைகள் நடத்தும்.  பல நாடுகளில் பட்டாசுகள் தடை. அந்த நிலை என்று வருமோ இந்தியாவில்? இந்துத்துவாதிகளுக்கு பொதுநலன்கள் முக்கியமல்ல - மதவெறிதான் அவர்களின் மாசு நிறைந்த சிந்தனைக் காற்றாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...