Total Pageviews

Saturday, June 4, 2016

ஓம் என்பது என்ன?தாந்திரிகம் என்ற வழிபாட்டு முறையில் ஆண்- பெண் பாலியல் ஆற்றல் ஏன் அவ்வளவு முக்கியத்துவமாய் இருக்கிறது?
தாந்திரீகர்கள் கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்திலும் பாலியல் புணர்ச்சி  வணக்கத்திற்குரியதாகி வந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். பிரம்மாவும், மாயாவும்போல, சிவனும் பார்வதியும் போலத் தெய்வங்களுங் கூடத் தங்களுக்கு இணைதுணைகளைப் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் உள்ளதைவிட வேறெந்த நாட்டிலும் ஆண் - பெண் கலப்பை சின்னமாகக் கொண்ட இயற்கைச் சக்தி வழிபாடு அதிக அளவில் நடைமுறைப்படுத்தப் பெறவில்லை.
இலிங்கமும் (ஆண்குறி) யோனியும் (பெண்குறி) என்னும் இவ்விரண்டின் இணைப்பு அடையாளங்களும் சிவசக்திக் கலாச்சாரமாக இலட்சக்கணக்கான இந்திய மக்களால் வணங்கப் பெறுகின்றன.
எனவே, இந்த வழிபாடு உண்மையில் சக்தி தேவதையின் வாயிலாக வெளிப்படும் இயற்கையின் பெண் சக்தியை அல்லது பார்வதியென்றும், தேவியென்றும், துர்க்கையென் றும், பவானியென்றும், மீனாட்சி என்றும், மகா காளியென்றும் அறியப்படுகின்ற சிவக்கடவுளின் இணைகளின் ஆற்றல் விசையை வணங்குதல் என்பதேயாகும்.
ஓம் என்னும் அடையாளமும் ஓம்காரமும் இவவுலகத்தில் இன்றுவரை வாழ முடிந்துள்ள வேறெந்த சின்னத்தைக் காட்டிலும் காலத்தால் முந்தியது என்பதைத் தாந்திரீகர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், இந்தியா, தென் கிழக்கு ஆசியா, நேபாளம், மங்கோலியா, சைனா, ஜப்பான் ஆகிய நாடு களையும் வட - தென் அமெரிக்கர்களின் பழைய நாகரிகங்களையும் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் ஓம் என்பதையோ ஓம்காரம் என்பதையோ, ஆண் - பெண் கூட்டினை வற்புறுத்தும் ஆழ்ந்த உட்பொருள் கொண்ட சின்னமாக நம்புகின்றனர் என உறுதிப்படுத்துகின்றனர்.
இந்தப் பொருள்பற்றிப் பல்வேறு புனைகருத்துகள் முன்னெடுத்து வைக்கப்பட்டாலும் ஓம் என்பது நிரந்தர சக்தி விசையின் அடையாளம். உயிரின் அடிவேர் - கண்ணுக்குத் தெரியாத அணுவிலிருந்து இந்த அண்டப் பரப்பு அல்லது ஆண்டவன் வரையிலுமான படைப்புகள் அத்தனைக்கும் அடிப்படை - இறந்த, நிகழ்வு, எதிர் காலங்களின் சின்னம் என்பதிலே ஹிந்துக்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், கீழை உலகின் குடிகள் ஆகியோரிடையே முழமையான கருத்தொற்றுமை நிலவுகிறது.
தாத்திரீகம் சுட்டிக்காட்டுவதைப் பாருங்கள்
1) கடவுளின் பெயர் அல்லது ஓம் - ஓம்கார் என்னும் தேவநாகரி எழுத்து புழக்கத்திற்கு வருவதற்கு முன் மென்மையான களிமண்ணில் தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு வந்தது. ஓம் அல்லது ஓம்கார்  என்ற அடையாளம் பனையோலைகளில் எழுதப் பெற்றதும் இன்றும் எழுதப்படுவதும் ஆகும்.
2) எனவே, ‘ஓம்’ என்னும் சொல் ஆண் - பெண் குறியின் சேர்க்கையின் மூலத்திலிருந்து தருவிக்கப்பட்டதே.
இந்தப் பிரபஞ்சம் எப்படிப்பட்டது எனும் கேள்விக்கு பண்டைய தீர்க்க தரிசிகளின் ‘ஓம்’ என்று விடையிறுத்தனர். இரு பாலரின் இணைப்பையே அவர்கள் ஓம் என அடை யாளப்படுத்தினர். இந்த இணைப்பினால்தான் உலகமே உண்டாயிற்று. இந்தியாவின் பழங்கால முனிவர்களும் வரும் பொருளுரைப்போரும். யோகிகளும் இந்த ஆண் - பெண் புணர்ச்சிக் குறியீடே ஓம் என்பதில் எந்த அய்யத்திற்கும் இடம் வைக்கவில்லை.
இலட்சக்கணக்கான மக்கள் பரந்த அளவில் நல்லறி குறியாகப் பயன்படுத்தி வரும் இந்திய ஸ்வஸ்திகா என்பது போகம் யோகம் ஆகிய இரண்டும் உருகிக் கலக்கும் உச்சக்கட்ட நிலையை அடையாளப்படுத்திக் காட்டுவதே யாகும் என்பதைத் தாந்திரீகர்கள் நிறுவுகின்றனர்.
ஒரு கருத்து நெறியினர் திபெத், நேபாளம், பூட்டான், சிக்கிம் இன்னும் பல இந்திய மாநிலங்கள் ஆகிய இடங்களில் மிகவும் சாதாரண மாய் பொதுவானதாய் ஆகிவிட்ட பல்கணவர் உடைமை எனும் மரபினை அடிப்படையாய்க் கொண்டதுதான் ஸ்வஸ்திகா என்று நம்புகின்றனர். தந்திரக் கலையானது ஸ்வஸ்திகாவை யோனியின் புனிதக் கோயில் என்றே அழைக்கிறது. தாந்திரீகர்கள் பாலியல் புணர்ச்சி தொடங்கு வதற்கு முன்னால் ‘ஸ்வஸ்திகா மங்களத்ரவ்யா’ என்ற சொற்றொடரை ஓதுகின்றனர். ஸ்வஸ்திகா அடையாளம் ஓம் அல்லத ஓம்காரின் விளைவான கிளை என்பது மறந்து விடாதவாறு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
இரண்டாவது மிகமிகச் சாதாரணமாய்ப் பயன்படுத்தப் பெறும் மந்திரம் ‘ஓம் மணி பத்மே ஹம்’ என்பதாகும். சுருக்க மாய்க் குறிப்பதென்றால் இது கலவியையும் பேரின்பத்தையும் பற்றிய மந்திரம். ஓம் என்பது தொடக்கத்திற்கும் முடிவிற்கு மானவோர் அசைச் சொல்லாகும். லிங்கத்தை (ஆண் குறி) சுட்டுவது மணி, பத்மே என்றால் புனித யோனியில் (பெண் குறி) எனப் பொருள்படும். ஹம் என்பது மிகவுயர்ந்த சக்தியின் ஆதாரமந்திரமாகும்.
“ஆண், பெண் பாலியல் சேர்க்கையே தலைமையான படைப்பாற்றலின் வாழ்க்கையின் விருப்பாற்றலின் அடிப்படை”
- தாந்திரீக மந்திரம்
(கோல்டன் எஃப்டி கொலாபவாலா எழுதிய தந்திரா - காமம் சார்ந்த வழிபாடு (Tantar the erotic cult) - எனும் Orient Paper Backs நூலிலிருந்து)

0 comments: