Saturday, June 4, 2016

ஜூன் 21 - எச்சரிக்கை!



- மின்சாரம்


அய்ந்து மாநிலத் தேர்தல் அறிவிக்கப் படும் சில மாதங்களில் இருந்தே தன் னுடைய காவிவெறியை மறைத்து மீண்டும் வளர்ச்சி என்ற முகமூடியை மாட்டிய மோடி தேர்தல் வாக்கெடுப்பு முடிந்த மறு நாளே தன்னுடைய சுய உருவத்தை காட்டிவிட்டார்.
 ஜூன் 21 ஆம் தேதி நடக்கும் உலக யோக தினத்தை முன்னிட்டு அன்றையதினம் இந்தியாவின் அனைத்து அரசு அலுவலகம் மற்றும் பள்ளிகளில் யோகா பயிற்சி நடக்க வேண்டும் என்றும்,
இந்த பயிற்சியின் போது ஓம் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் அவசியம் உச்சாடனம் செய்யப்பட வேண்டும் என்றும் ஆயூர்வேத அமைச்சகம் (ஆயூஸ்) சுற்ற றிக்கை விடுத்துள்ளது. இந்த மந்திர உச்சா டனைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
‘ஓம்’ சமஸ்கிருத மந்திரங்களுடன் பிரார்த்தனைகள் 
உலக யோகா நாளில் ஓம் என்ற சொல் லுடன் உச்சரிக்கவேண்டிய சமஸ்கிருத மந்திரங்களை ஆங்கிலம், இந்தி மற்றும் அனைத்து மாநில மொழிகளிடம் சமஸ் கிருத ஓசைவடிவில் அதன் விளக்கத்தை யும் அச்சடிக்கும் பணியில் ஈடுபட ஆரம் பித்து விட்டது.
மேலும் ஆயூஸ் அமைச்சகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் உலக யோகா தினம் காலையில் 45 நிமிடங்கள் அரசு அலுவலகம் பள்ளிக்கூடம் மற்றும் விருப்ப முள்ள தனியார் நிறுவனங்களில் நடை பெறும். இதில் மத்திய மாநில அரசு அலு வலகங்களில் பணியாற்றுபவர்கள்,
பள்ளி மற்றும் கல்லூரிகள் மேலும் அரசுடன் இணைந்து யோகா நாளைக் கொண்டாட விரும்பும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும், இந்த யோகா நாளில் சுமார் 22 கோடிக்கும் மேற்பட்டோர் கலந்து கொள் வார்கள், முதல் 6 நிமிடங்கள் சூரிய வணக்கத்துடன் கழுத்து மற்றும் தோள் தொடர்புடைய யோகாப் பயிற்சி, அதனை அடுத்து 2 நிமிடங்கள் சமஸ்கிருத மந்திரங் களுடன் பிரார்த்தனைகள், அதன் பிறகு 23 நிமிடங்கள் தொடர்ந்து யோகா பயிற்சி நடைபெறும்.
இந்த 23 நிமிட யோகா பயிற்சியின் போது ஓம் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் உச்சரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோல்கத்தாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தலைவர் சபீப் காஜி கூறியுள்ளதாவது: மத்திய அரசின் இந்த நடவடிக்கை மதச்சார்பற்ற கொள் கைக்கு எதிரானதாகும், இது அதிகாரத் தைக் கையில் வைத்துள்ளவர்களின் அதிகாரத் திமிரின் வெளிப்படாகும். இந்த நாட்டில் உள்ள பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களின் நம்பிக்கையை சீர் குலைக்கும் நடவடிக்கையாகும் என்று கூறியுள்ளார்.
2015-ஆம் ஆண்டு உலக யோகா  நாள் கொண்டாட்டத்திற்கு  முன்பு மோடி ஓம் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் கூறுவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.  நமது நாட்டில் நோயாளிக்கு மருந்து கொடுப் பதைக் கூட மதக்கண்ணோட்டத்தில் பார்க் கிறார்கள்.
ஓம் என்ற சொல் சிலருக்கு பிரச் சனைகளைக் கிளப்பி விடுகிறது என்று கூறியிருந்தார். ஆயூஸ் அமைச்சரகம் யோகா தினத்தன்று ஓம் என்ற மந்திரமும் சமஸ்கிருத உச்சரிப்பும் கூறவேண்டிய தேவையில்லை என்று 2015-ஆம் ஆண்டு சுற்ற்றிக்கை அனுப்பியிருந்ததாகக் கூறியிருந்தது.
இது குறித்து பாஜகவின் தீவிர ஆதர வாளரான அனுபம் கேர் விவாதத்திற்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். ஓம் மற்றும் சமஸ்கிருத மந்திரத்தை சொல்ல விருப்ப மில்லாதவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற விருப்பமில்லாதவர்கள் என்று கூறியுள்ளார். மேலும் சொல்கிறவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கட் டும்! சொல்லாதவர்கள் நோஞ்சான்களாக போகட்டும் என்றும் கூறினார்.
யோகா பற்றி சில தலைவர்களின் கருத்து
யோகா என்பது சனாதன மதம் (இன்று இந்துமதம் என்று மாறிவிட்டது) கொடுத்த வரமாகும். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்குவங்கிக்காக இதை எதிர்க் கின்றனர் என்றார் ராஜ்நாத் சிங். (2014)
யோகாவில் ஓம் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் இல்லையென்றால் அது நீர் இல்லாத நதி போல் விண்மீன் இல்லாத வானம் போல் இருக்கும் என்கிறார் ஸ்மிருதி இரானி.  யோகா என்பது முனிவர்கள் மற்றும் வேதத்தில் புலமைபெற்ற ரிஷி களால் உருவாக்கப்பட்டது, இந்து மதத்தில் இருந்து யோகாவைப் பிரிக்க முடியாது என்கிறார் இந்திய வரலாறு மற்றும் கலாச்சார மய்யத்தின் தலைவர் சுதர்ஷன் ராவ். (ஜூன் 2015).
இந்தப் போக்கைக் கவனிக்கும்போது ஒன்று மட்டும் உறுதியாகி விட்டது. பிஜேபி உள்ளிட்ட இந்துத்துவவாதிகள் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் நேரிடை யான பொருளாக ஏற்க முடியாது; அதற்குள் பூடகமாக இந்துத்துவா நஞ்சை வைத்திருப் பார்கள் என்பது மட்டும் உண்மை.
உடற்பயிற்சி தேவைதான் - இவர்கள் சொல்லுவது - அறிமுகப்படுத்துவது உடற் பயிற்சியல்ல- இந்துத்துவாவை உள்வாங்கும் மூளைக்கான பயிற்சி.
இதனை முற்றவிட்டால் பிற மதத்தி னரைக் கடிக்கும்; மதச் சார்பற்றவர்களை விழுந்து பிடுங்கும்; பகுத்தறிவாளர்களை விழுந்து பிராண்டும்.
முளையிலேயே இதனைக் கிள்ளி எறியாவிட்டால் பின்னர் அதிக விலை கொடுக்க நேரிடும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...