Thursday, March 24, 2016

கோமாதாக்களுக்கு (மறு)திருமணம் செய்யும் பாரதீய - கலாச்சாரம் பாரீர்!

-  ஊசி மிளகாய்


இன்றைய ‘தமிழ் ஹிந்து’  நாளேட்டில் வெளிவந்துள்ள ஒரு செய்தியை அப்படியே தருகிறோம்.
‘‘குஜராத்தில் மாடுகளுக்கு இந்து முறைப்படி திருமணம்: ரூ.18 லட்சம் செலவு; 700 பேருக்கு அழைப்பு”
குஜராத் மாநிலத்தில் இரு மாடுகளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. ரூ. 18 லட்சம் மதிப்பில் இந்து பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ள இத் திருமணத்துக்காக 700 குடும்பத்தினருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அகமதபாத்தைச் சேர்ந்த பூனம், பகடானா வைச் சேர்ந்த அர்ஜுனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட் டுள்ளது. இரண்டும் மாடுகள். இரண்டு மாடுகளின் உரிமையாளர்களும் நாளை (வியாழக்கிழமை) அவற் றுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
பர்சானா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திருமணத்துக்காக ரூ.18 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாடுகளின் மதிப்பு அளவிடமுடியாதது என்பதை இச்சமூகத்துக்கு வெளிப்படுத்தவே ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பர்சானா அறக்கட்டளை பொருளாளரும், பூனம் மாட்டின் உரிமையாளருமான விஜய்பாய் இது தொடர்பாகக் கூறும்போது,
கடந்த 30 ஆண்டுகளாக நான் மாடுகளுடன் வசித்து வருகிறேன். அதனால் அவை எவ்வளவு அன்புக் குரியவை என்பது தெரியும். எனது வாரிசுகளுக்கு இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்துவைப்பேனா எனத் தெரியாது. ஆனால், என் மகளான பூனத்துக்கு இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்து திருமணம் செய்து வைப்பேன். பூனத்துக்காக தங்க நகையும் வாங்கியுள்ளேன். பூனம் என் குடும்பத்தில் ஓர் உறுப் பினர். திருமண விருந்துக்காக எங்கள் தரப்பில் 300 பேர், மூன்று ஆர்க்கெஸ்ட்ரா குழுவினருடன் அழகான கோட்டியா பகுதிக்குச் செல்வோம் எனத் தெரிவித்தார்.
விஜய்பாயிடம் 9 மாத பூனம் தவரி, நான்கு மாடுகளும் வேறு சில செல்லப் பிராணிகளும் உள்ளன.
அர்ஜுன் மாட்டின் உரிமையாளர் தேகிரி கோஸ்வாமி. இவரும், விஜய்பாயும் கோட்டியா பகுதியை திருமணம் நடத்த தேர்வு செய்துள்ளனர். திருமணத்துக் காக ஆமதாபாத்திலிருந்து பிராமண புரோகிதர்கள் அழைத்து வரப்பட்டு, இந்து முறைப்படி மாடுகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. திருமணத்தை யொட்டி சிறப்பு யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத் திருமணத்தில் பங்கேற்கவுள்ள 700 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(தி தமிழ் ஹிந்து, 23.3.2016)
-படித்தீர்களா?
பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத் எவ்வளவு அறிவில் வளர்ச்சி - ‘விகாஸ், விகாஸ்’ பெற்றிருக்கிறது பார்த்தீர்களா?
விவேகானந்தரே கேட்டார், ‘நீங்கள் எல்லாம் மாட்டின் புத்திரர்கள்தானே, பின் அந்த கோமாதா செத்தால் தூக்குவதற்கு, அடக்கம் செய்வதற்கு வேறு ஜாதியினரை அழைக்கிறீர்களே - ஏன்?’ என்று கேட்டார். பதில் மவுனம்தான்!
பைத்தியக்காரர்களின் நாடு என்று ஒரு காலத்தில் பழைய மலையாள நாடு கேலி செய்யப்பட்டதுண்டு!
இன்று அவர்கள் எவ்வளவோ முன்னேறி விட்டனர்!
பிரதமர் மாநிலத்தில் மாட்டுக்கும், மாட்டுக்கும் கல்யாணமாம்! அதுவும் மிகவும் தொழில் வளர்ச்சியில் முன்னேறிய ‘அகமதாபாத்’ அருகில் உள்ள ஊரில்!
அகமதாபாத் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது ஓரளவு உண்மையாயினும், அறிவு வளர்ச்சியில் சுத்த பூஜ்ஜியம்தான்! ஒரு சந்தேகம் - ஏற்கெனவே பசு மாடுகள் - கோமாதாக்கள்தானே - மாதாக்களுக்கு இப்பொழுது கல்யாணம் என்றால், இது மறுமணமா? திருமணமா?
இந்தக் கோமாதாவுக்கு ஒரே ஒரு புருஷன்தானா? ஆஸ்திரேலியா காளைகளின் விந்து செயற்கை முறையில் உங்கள் கோமாதாவின் கருப்பையில் செலுத் தப்படுகிறதே- அப்பொழுது உங்கள் கோமாதாவின் ‘கற்பு’ என்னாயிற்று?
குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறுவதில் குஜராத் ஒரு குறிப்பிடத்தக்க மாநிலம் ஆகும்!
என்னா வினோதம் பாரு!
எவ்வளவு ஜோக்குப் பாரு!!
தமிழ்நாட்டில்கூட,  அம்மா ஆணைப்படி கொள்ளை யடித்தவர்கள் எல்லாம் இலவசத் திருமணங்களை மனிதர்களுக்குத்தான் செய்து வைத்து புண்ணியம் தேடுகிறார்கள்!
குஜராத் எவ்வளவோ முன்னேறியிருக்கிறதாம்! அது சரி, வெளிநாட்டவர் வந்தால் என்ன சொல்வார்களாம்?
இந்த லட்சணத்தில் விண்வெளி ராக்கெட் வெற்றிப் பெருமிதம் வேறு!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...