Monday, March 28, 2016

அதிக டெபாசிட் இழக்கப்போவது யார்? என்ற போட்டியில் அடிக்குது பாஜகவுக்கு முதல் பிரைஸ்

- நோக்காளன்
பெரியார் மண்ணாகவும், திராவிடர் இயக்க பூமியாகவும் உள்ள இப்பெரும் தமிழ்நாட்டில், எப்படியும் காலூன்றி, காவிக் கொடியைப் பறக்கவிடலாம் என்ற நோக்கத்தோடு, ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க. அதன் பிரிவுகளான ஹிந்து முன்னணி, விசுவஇந்து பரிஷத் போன்றவை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செய்யும் முயற்சிகள் வெற்றி பெறவே இல்லை!
மத்தியில் காங்கிரஸ் - அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி மீதிருந்த மக்கள் வெறுப்பைப் பயன்படுத்தி, மாற்றம் இதோ, என்று கூறி, நாங்கள் பதவிக்கு வந்த 60 நாட்களில் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்து ஒவ்வொரு கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போட்டு விடுவோம் என்றெல்லாம் ‘புருடா’ விட்டு புதிய இளம் வாக்காளர்களை ஏமாற்றினர். மாற்றத்திற்கு ஏங்கி, வாக்களித்து விட்டு, அவர்கள் உறுதி கூறியபடி எந்த புதிய வாய்ப்பும் இன்றி கார்ப்பரேட் ராஜ்யம், மனுதர்ம ராஜ்யம் என்ற பச்சை ஹிந்துத்துவா முறையில் நடைபெறுவதை கண்டு, படித்த இளைஞர்களும், மாணவர்களும் விழி பிதுங்கி விடியல் எப்போது வரும் என்று எதிர்பார்த்து உள்ளனர்!
தமிழ்நாட்டில் ஒன்றே ஒன்றே!
மற்ற மாநிலங்களில் பெரு வெற்றி பெற்ற பா.ஜ.க. மோடியால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதி அதுவும் வாக்குகள் பிரிந்த காரணத்தால் கன்னியா குமரி மாவட்டத்தில் வெற்றி பெற்றது! 37 இடங்களில் அ.தி.மு.க.தான் வென்றது. 2009இல் நாடாளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க. 39 தொகுதிகளிலும் நின்று 39 தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் “டெப்பாசிட்” இழந்து தனித்தன்மை பெற்றது.
அடுத்து 2014 நாடாளுமன்றத்தேர்தலில் சில தமிழக கட்சிகள் ம.தி.மு.க., பா.ம.க. மற்றும் சில கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தும்,  பிரதமர் வேட்பாளர் மோடி மூன்று அல்லது நான்கு முறை தமிழ்நாட்டிற்கு வந்து - திரட்டப்பட்ட கூட்டத்தினரிடையே தேர்தல் பிரச்சாரம் செய்தார்!
ஆறு இடங்களில் டெபாசிட் காலி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கே சென்று சந்தித்தார்; மற்றொரு சினிமா ஸ்டார் விஜய்யை சந்தித்தார். இப்படி பல வித்தைகள் செய்தும், எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லையே!
2014இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) போட்டியிட்ட  39 இடங்களில் பா.ஜ.க. நின்றது 7 இடங்களில், ஒரு இடத்தில்தான் டெப்பாசிட்டைக் காப்பாற்றிக் கொண்டது. அதற்கும் காரணம் ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகளின் கூட்டே!
இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, பா.ஜ.க வின் தேசிய ஜனநாயக முன்னணி கலைந்துவிட்டது; ம.தி.மு.க. வெளியேறியது; பா.ம.க. வெளியேறியது. சில சில்லரை கட்சிகள் தாமரை இலைத் தண்ணீராக தொடர்கின்றன!
இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்று பா.ஜ.க. தான் என்று மார்தட்டினர்!
அமித்ஷா அலாவுதீன் அற்புத விளக்கா?
அமித்ஷா ஒரு அலாவுதீன் அற்புத விளக்கைக் கொண்டு வருகிறார்; அப்படியே தலைகீழாக தமிழ்நாட்டை மாற்றி காவிமயமாக , கமண்டல ராஜ்யமாக்கிவிடுவார் என்று கதைத்தனர்.
“மிஸ்டுகால்” கட்சி என்ற பெயர் வாங்கும் வண்ணம் டெலிபோன் டைரக்டரியில் உள்ள பெயர்களையெல்லாம் திரட்டி “உறுப்பினர் பட்டியலில் சேர்த்து” 60 லட்ச உறுப்பினர் ரெடி ரெடி என்றனர். அவர்களில் தலைவர் வைத்த இலக்கோ 1 கோடி நபர்கள் ஆயிற்றே! ரூபாய் என்றால் எளிதில் கார்ப்பரேட் கட்சி சேர்த்திடும்.
வடக்கே இருந்து ஜவ்டேகர் வந்தார் - சென்றார் - பேசினார் - திரும்பினார் மீண்டும் வந்தார் - ரகசியமாக வந்தார் - அவர் கட்சித் தலைமைக்கு தெரியாமல் வந்து முச்சந்தியில் விஜயகாந்தையோ குடும்ப ஆலோசகர் களையோ சந்தித்தார் திரும்பினார்!
பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் பார்வையிலிருந்து தப்பியதே பெரிய விஷயம் என்று சொன்னார்.!
கமலாலயத்தில் விரிக்கப்பட்ட  சிகப்புக் கம்பளம்
தங்களுடன் வருவாரா என்று நம்பி எதிர்பார்த்த பா.ஜ.க தலைமை, திமுகவுடன் போகவில்லையே-அதைப் பாராட்டு கிறோம் என்று கூறி கமலாலயத்தில் சிவப்புக் கம்பளம் விரித்து காத்திருந்தனர்!
எங்களிடம் வருவது இனி உறுதியாகிவிட்டது, ஏனெனில் திமுக பக்கம் போகவில்லை என்று கூறி புளகாங்கிதம் அடைந்தது தாமரை
இதற்கிடையில் “கிங்” யார்?
இதற்கிடையில் கிங் யார்? கிங் மேக்கர் யார்? என்பது சில நாள் சஸ்பென்ஸ்; வெடித்த பலூன் மாதிரி பா.ஜ.க. எதிர் பார்ப்பில் மண்ணைப் போட்டு விட்டாரல்லவா! அதனால் பூஜ்யங்கள் சேர்ந்தால் என்ன என்று ஒப்பாரி வைத்தார் தமிழிசை அம்மையார்!. பி.ஜே.பி. பிளஸ் என்ற ஒரு கோஷம் தந்தார் வடக்கேயிருந்து வந்த  மகாராஷ்டிரா ஜவ்டேகர்.
உள்ளதும் போச்சே!
சில நாட்களுக்கு முன் அதிமுகவிலிருந்து வெளியேறி கறிவேப்பிலை சரத்குமார் என்ற ‘மிகப்பெரிய’ கட்சித் தலைவர் பிப்ரவரி 27இல் மத்திய அமைச்சரான இந்த ஜவ்டேகரை சந்தித்து, பிஜேபியோடு சேர்ந்து விட்டேன் என்றார், மதுரை விமான நிலையத்தில் - ஙியிறி றிறீus (திஷீக்ஷீனீuறீணீ) எப்படி விவரிக்கிறது பார்த்தீர்களா?
23-3-2016 அன்று அம்மாவை பார்த்து அந்த அணியில் சேர்ந்து விட்டு, பேட்டி கொடுத்தார்!
பா.ஜ.க. சந்தித்த பரிதாபம் பார்த்தீர்களா? உள்ளதும் போச்சே என்ற பேச்சு அங்கு! மகாராஷ்டிரத்தில் பேடேக்கர் ஊறுகாய் பிரபலம், ஜவ்டேக்கர், ஷா, மோடி - ஆகியவர்கள் தேர்தல் கூட்டணி ஷ்ணீஸீtமீபீ ஷ்ணீஸீtமீபீ  என்ற விளம்பரப் பதாகைகள் தொங்குகின்றன!
பெரியார் மண்ணை காவிமயமாக்கிட ‘கஜகர்ணம்’ போட்டாலும் நடக்காது!
டெபாசிட்டை அதிகம் இழக்கப்  போவது யார்?
ஆனால் 234லிலும் நிற்பார்கள், முன்பு போல அதிக டெப்பாசிட் இழக்கும் பெரிய தேசீய “பிரதான” கட்சி இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கும் பா.ஜ.க.வாகத்தான் இருக்கும் என்பது பல நோக்கர்கள் கருத்தாகும்!
பணபலம், ஊடகபலம், அரசு அதிகார பலம் எல்லாம் திராவிட மக்கள் பலத்துக்கு முன் ஒன்றுக்கும் பயனற்ற வையே!
மிஸ்டுகால் கட்சியின் பரிதாப நிலையைப் பார்த்தீர்களா? அவர்கள் மட்டுமா? சேர்ந்தவரும் டெப்பாசிட் வாங்கப் போவதில்லை. இதுதான் இன்றைய யதார்த்தம்! புரிந்து கொள்வீர்.

நல்லகண்ணு மறுக்கிறார்
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நல்ல கண்ணு, சட்டசபைத் தேர்தலில் ஆளும் அதிமுகவை எதிர்க்க வலுவான கூட்டணி அமைந்துள்ளது என்றார். அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்களின் முக்கிய வேலை என்றார். சட்டசபைத் தேர்தலில் அதிமுக விற்கும் மக்கள் நலக்கூட்டணிக்குமே போட்டி என்று கூறிய நல்லகண்ணு, தேமுதிகவும் இணைந்துள்ளதால் மக்கள் நலக்கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது என்றார். விஜயகாந்த் அணி என்று நாங்கள் கூறவில்லை, மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக இணைந்து பணி யாற்றுவோம் என்றார். கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர், கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்று சொல்லுகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரோ முரண் படுகிறார்! எது உண்மை?

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...