Total Pageviews

Tuesday, November 10, 2015

பிகார் தேர்தலில் சுருண்ட பார்ப்பனியம்எப்போதும் தங்களைப் புகழ்ந்து பேசினால் குளிர்ந்து போகும் பாஜக தங்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி னால் உடனே அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு அவர்கள் யார் எங்களைக் குறைசொல்ல என்று பதிலடி கொடுத் திருந்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ராஜன் சின்ஹா என்பவர் கூறும் போது இந்துக்களுக்கு எதிரான கிறிஸ்தவ அமைப்பினரை குளுமைப்படுத்த இப்படி எழுதியுள்ளனர் என்று கூறினார்.
இந்தியப் பத்திரிகை ஒன்று இப்படி எழுதியிருந்தால் உடனே மோடிக்கு எதிரான பத்திரிகை கம்யூனிச காங்கிரஸ் கைக்கூலி என்று புறந்தள்ளி இருப் பார்கள், ஆனால் உலக அரசியலை அலசும் நியூயார்க் டைமஸ் ஏன் பிகார் என்ற ஒரு மாநிலத்தேர்தல் அதன் முடிவுகள் குறித்து அலசவேண்டும்?
இதற்கான வேரைத் தேட நாம் 2002 குஜராத் கலவரத்தில் இருந்து பார்க்க வேண்டும். குஜராத் கலவரம் அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில் 11 விழுக்காடு வாக்குகளைக் கொண்டுள்ள இஸ்லாமிய சமூகத்தில் இருந்து ஒரு இஸ்லாமிய மக்கள் பிரதிநிதிகளாகச் செல்ல முடியவில்லை.
அங்கு மதவாத அரசியல் மிகவும் பலம்பெற்று விட்டது, இந்தக் காரணம் தான் மோடியை இந்துத்துவ அமைப் புகளின் தலைமையகமான ஆர். எஸ்.எஸ் தேசிய தலைமைக்கு தேர்ந் தெடுத்தது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு தனிநபரை முன்னிறுத்தி ஊடகங்கள், கார்பரேட் நிறுவன பண பலம், சமூக வலைதளம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ரகசிய திட் டங்கள் மூலம் மோடியை வெற்றிபெறச் செய்தனர்.
மோடியின் நாடாளுமன்றப் பிரச்சார வெற்றிக்கு ஒரு எடுத்துக் காட்டைக் கூறலாம். காலையில் போபாலில் பொதுகூட்டம், நண்பகல் அய்தராபாத், மாலை சண்டிகர் இரவு கவுஹாத்தி என ஒரே நாளில் நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பயணம் செய்த விமானம் அதானி குழுமத்திற்கு சொந்தமான சிறிய ரகவிமானமாகும்.
அதாவது ஒரு தனியார் நிறுவனம் பிரதமர் பதவிக்குப்போட்டியிடும் ஒரு வருக்கு தனது விமானங்களை பயணத் திற்காக வழங்க காரணம் எதுவாக இருக்கக் கூடும் என்பது அனைவருக் கும் தெரிந்த ஒன்றே!
10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் பொருளாதாரத் தோல்வி,தொடர் ஊழல் புகார்கள் போன்றவை ஏற்படுத்திய வெறுப்பைப் பயன்படுத்தி மோடி தலைமையில் அறுதிப்பெரும்பான்மை ஆட்சி அமைந்தது.
2014 மே மாதம்26-ஆம் தேதி மோடி பதவியேற்றார். 28-ஆம் தேதி மோடியின் நம்பிக்கைக்குரிய பாஜக தலைவர்  அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங், போன்ற முக்கியத் தலைவர்கள் டில்லியில் அதிகாரப் பூர்வமற்ற ஒரு கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினர், அந்தக் கூட்டம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான கிருஷ்ண குமார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர்களாக இருந்து பாஜகவில் அமைச்சர்களாக இருக்கும் ராம் மனோகர் போன்றோர் கலந்து கொண்டனர், அதில் முக்கியமாக மனிதவளத்துறையை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கையில் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. மனிதவளத்துறை அமைச்சகத்தின் அமைச் சர் ஸ்மிருதி இரானி அந்தப் பதவிக்கு தேவையான அனுபவமற்றவர் என்று அருண் ஜெட்லி முதல் சில முக்கிய பாஜக தலைவர்கள் கூறியும் அவரை அந்தப் பதவியில் அமர்த்தியதற்குப் பின்புலத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளது.
இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் 2014 ஜூன் 8 ஆம் தேதி ஸ்மிருதி இரானி மற்றும் மற்றும் மனிதவளத்துறை அமைச்சக அதிகாரிகள் டில்லியில் மோகன் பாக வத்தை சந்தித்தனர். அவர்கள் சந்தித்து வெளிவந்த சில நாட்களிலேயே சமஸ் கிருதம், அனைத்து பள்ளிகளிலும் முக்கியப் படமாக சேர்க்கப்படும் என்றும் ஆரம்பத் தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபி எஸ்இ பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப் படும் என்று அறிக்கை விடுத்தனர். ஜூலையில் நடைமுறைப்படுத்தப்பட்டது, ஆகஸ்ட் மாதம் சமஸ்கிருதவாரம் கட் டாயம் கொண்டாடப்படவேண்டும் என்று சுற்றறிக்கை விடப்பட்டது.
கல்வி ஒருபுறம் காவிமயமாகிக் கொண்டு இருக்கும் போது மற்றொரு புறம் இந்து அமைப்புகளின் தாக்குதல்கள் அதிகரிக்கத்துவங்கியது. டில்லி, அரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார் கண்ட் போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தளங்கள் தொடர்ந்து தாக்கப் பட்டன. ஸ்மிருதி இரானி படித்த கிறிஸ்தவப் பள்ளிக்கூடம் கூட இந்து மதவெறியர் களின் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
மோடி நாட்டில் நடக்கும் பிரச்சனை களில் இருந்து தப்பிக்க எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் வெளிநாடுகளுக்கு ஓடி தான் சுறுசுறுப்பாக இருப்பதாகக் காட்டிக் கொண் டார். இது குறித்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கூட எதிர்க்கட்சிகள் எழுப்பின. ஆனால் மோடி இது குறித்துக் கவலைப் படவில்லை.
ஒரு புறம்  இந்து மதவெறி அமைப்புகள் வெறித்தாக்குதல், மறுபுறம் கார்பரேட்டு களின் ஆதிக்கம் போன்றவை நாட்டை சின்னாபின்னப் படுத்திக்கொண்டு இருக் கின்றன. இடையில்  மகாராஷ்டிரா, ஜார் கண்ட் மற்றும் ஜம்முகாஷ்மீர் தேர்தல் நடைபெற்றது. அரியானாவில் முந்தைய காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத ஆட்சியின் விளைவு அங்கு பாஜக வெற்றி பெற்றது, முக்கிய காரணம் அரியானாவில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது, மற்ற  மாநிலங் களில் எதிரிகளுடனே கைகோர்த்து ஆட்சி அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் பாஜக விற்கு ஏற்பட்டது.
2015 ஆண்டு டில்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்விகுறித்து பாடம் கற்றுக் கொள்வ தற்குப் பதிலாக இந்து மதவெறி அமைப் புகளின் பின்புலத்தில் இருந்து தங்கள் நடவடிக்கையை மேலும் அதிகப்படுத்தியது.
இந்த நிலையில் பிகார் மாநிலம் நோக்கி மோடியின் பார்வை திரும்பியது. மோடி மக்களைவையில் பெரும்பான்மை பெற்றி ருந்தாலும் மாநிலங்களவையில் பெரும் பான்மை இன்மைதான்! கைக்கெட்டியது வாய்க்கெட்டாத குறையாக இருந்தது, பிகார் தேர்தல் குறைந்த பட்சம் 70 சட்ட மன்ற உறுப்பினர்களாவது பெற்றால் மாநிலங்களவையில் தங்கள் பக்கம் பலம் கூடும் இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் அஜண் டாவை நிறைவேற்ற முடியும் என்ற நிலை யில், மோடி 2015 பிபரவரியில் இருந்தே பிகார் தேர்தலுக்கான திட்டத்தை முன்னெ டுத்தார். முக்கியமாக பிப்ரவரி 17 ஆம் தேதி பிகாரில் உள்ள ஒவ்வோரு தொகுதியிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் செயல்படவேண்டிய விதம், மற்றும் மோடியின் புகழ்பாடும் அத்தனை சாதனங் களையும் தனியார் நிறுவனங்கள் மூலம் வாரி இறைக்கத் துவங்கினார்கள்.
மார்ச் மாதம் சூரத்தில் உள்ள  ஆடை நிறுவனத்தின் மூலம் 17 கோடி மோடி படம் போட்ட சேலைகள் பிகாருக்கு அனுப்பப் பட்டன. ஆகஸ்ட் மாதம் தேர்தல் அறிவிக் கப்பட்ட உடன் 500 தேர்தல் ரதங்கள் மாநி லம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டன.
தேர்தல் விதிமுறைகள் கண்மூடித்தன மாக மீறப்பட்டன. பிகாரிலும் குஜராத் மாடலைக் கொண்டுவரும் நிலையில் ஒரு சம்பவத்தை அரங்கேற்றவேண்டும் என்ற நிலையில் சில பாஜக தலைவர்கள் ஒன்றிணைத்து தாதரியில் அக்லாக் என்ற முசுலீம் படுகொலை மூலம் மாட்டிறைச்சிப் பிரச்சனையை பெரிதாக்கி அதன் மூலம் தேர்தல் பிரச்சனையை திசை திருப்பினர். மோடியும் திட்டமிட்ட இந்த செயல் மூலம் மோடி தன்னை ஒரு நாட்டின் முக்கியப் பிரதிநிதி என்ற நிலையை மறந்து ஜாதி ரீதியாக  பேச ஆரம்பித்தார்.
அதன் பிறகு மோடியின் பேச்சில் அத்துமீறல்கள் அதிகமாகினது; முக்கியமாக நிதீஷ் குமாரின் பிறப்பைக் கேலி செய்யும் விதமாக டி.என்.ஏ தவறானது என்று உளறினார். இந்தப் பிரச்சனைபெரிதான போது நான் நிதீஷின் அரசியல் டி.என்.ஏ வைக் கூறினேன் என்று மழுப்பினார். லாலுவைப் பேய் என்றார், லாலுவின் வீட்டு முகவரி எப்படி பேய்க்குத் தெரிந்தது என்றார், மூன்று முட்டாள்கள் என்று கூறினார். மறைமுகமாக மாடுமேய்க்கும் லாலு அரசியலுக்கு வந்ததால் தான் பேரா சைப்பட்டு ஊழல் புரிந்தார் என்றெல்லாம் ஆணவமாக பேசினார்.
மோடியின் அகந்தையால் நீதி, நேர்மை, பேச்சில் கண்ணியம் அத்தனையும் காணாமல் போனன! அவருக்குப் பிகார் தேர்தலில் எப்படியும் 79க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே என்ற வெறி அவரின் கண்களில் தாண்டவமாடின  இந்த நிலையில் நாடு முழுவதும் சிறு பான்மையினர் மற்றும் தலித்துக்கள் மீதான தாக்குதல் போன்றவை அதிகரிக்கத் துவங் கியதும், பிகாரில் தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வரத் தொடங்கிய கடைசி 2 கட்டத் தேர்தலில்மீதம் இருக்கும் 130 தொகுதிகளில் முடிந்த அலை வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற வெறியோடு எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு மதவாதம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டனர்!
நமது தாயாக இருக்கும் பசுமாட்டைத் தின்பவருக்கு உங்கள் ஆதரவா? என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே இதற்கு இடம் கொடாத நிலையில்  முழுப் பக்க விளம்பரம் கொடுத்தனர். தேர்தல் ஆணையமும் எப்போதும் போல் வேடிக்கைப் பார்த்தது, மறுநாளும் இதே போன்று விளம்பரம் வர எதிர்கட்சி களின் புகாரை அடுத்து விளம்பரத்தை வெளியிட்ட பத்திரிகைமீது வழக்குப் பதிவு செய்தது. ஆனால், பிகார் பாஜக வினர் மீதோ டில்லி தலைமை மீதோ விளக்க அறிக்கை கூட கேட்கவில்லை. இறுதியாக  அமித்ஷா பிகாரில் பாஜக தோல்வியடைந்தால் பாகிஸ்தானில் தீபாவளி கொண்டாடுவார்கள் பட்டாசு கொளுத்துவார்கள் என்று கூறி பிகாரில் இந்து முஸ்லீம்களிடையே பிளவை ஏற்படுத்த முயன்றார்.
இந்த அளவு தரமற்ற முறையில் இறங்கி வெற்றிக்கனியைச் சுவைக்க நினைப்பவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்று அமைதி சகோதரத்துவம் மற்றும் ஒற்று மையை விரும்புபவர்கள் அச்சமடை யத்துவங்கினர்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று சரிசமமாக அமர்ந்தாலும் இந் துத்துவ மதவெறி அமைப்புகளின் செயலுக்கு கிடைத்த அங்கிகாரமாக கருதி இன்னும் அதிகமாக அவர்கள் கொடுஞ் செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் பிகார் மக்கள் மிகத் தெளிவாக அதற்கு இடம் கொடுக்காமல்  செய்து விட்டனர்.
எந்த மாநிலத்தை கல்வியறிவில்லாத மாநிலம், முட்டாள்கள் நிறைந்த மாநிலம், மாடு மேய்ப்பவர்கள், நாடோடியாய் திரியும் மாநிலம் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியதோ அதே மாநிலமக்கள் இந்தி யாவின் எதிர்காலத்தை இந்துத்துவ வெறியர்களிடம் இருந்து காக்கும் அரணாகத் திகழ்ந்தனர்.
இங்கு லாலு பற்றி குறிப்பிட்டாக வேண்டும், லாலுவின் மீது மாட்டுத் தீவன ஊழல் வழக்கு பற்றி குறிப்பிடும் போது அத்வானியின் ரதயாத்திரை எந்த மாநிலத்திலும் தடையின்றி சென்ற போது, பிகாரில் உனது மதவெறியாட்டம் பலிக்காது என்று கூறி தடுத்து நிறுத்தி கைது செய்தவர். இதில் வெறிகொண்ட பார்ப்பனியம் பல்வேறு திட்டங்களை இட்டு லாலுபிரசாத்தை சிக்கவைக்க எடுத்த சூழ்ச்சி தான் மாட்டுத்தீவன ஊழல்! அந்த ஊழலில் சிக்கிய சில அதிகாரிகளை பின்னாட்களில் டில்லி வரவழைத்து அவர்களுக்குப் பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டன. அன்று பார்ப்பனிய சூழ்ச்சியால் பதவியை இழந்து குற்றச்சாட்டை சுமக்கும் நிலைக்கு ஆளான லாலு இன்று அதே அத்வானியின் பிறந்த நாளில் பார்ப் பனிய சூழ்ச்சியை மக்களின் வாக்கு களின் மூலம் முறியடித்து மீண்டும் பிகார் அரசியலில் புதிய தெம்புடன் வலம் வரத் துவங்கியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு சந்தித்த முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் லாலு பிரசாத் கூறியதாவது, பிகாரை  சகோதரர் நிதீஷ்குமார் வழி நடத்துவார், எனது பயணம் டில்லியை நோக்கி இருக்கும், மதவெறி ஆட்சி யாளர்களை பதவியில் இருந்து தூக்கி வீசுவதுதான் எனது கடமை என்று சூளுரைத்தார்.
இறுதியாக பாஜக வினரும் இந்து மதவெறியினரும் டில்லி தேர்தலில் இருந்து பாடம் கற்கவில்லை, அதே நேரத்தில் பிகார் தேர்தல் காலங்களில் மேலும் அதீத வெறியுடன் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பிகார் மக்கள் அவர்களுக்கு தக்க பாடத்தைக் கற்றுக் கொடுத்தனர், இனி வரும் உபி, தமிழ்நாடு, மேற்குவங்கம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் நடக்கும் தேர்தல்கள் பாஜகவிற்குச் சாதகமாக அமையாது ஆகவே நாட் டில் மதக்கலவரத்தை தூண்ட மதவெறி அமைப்பினர் இறங்குவார்கள், இதை எதிர்கொண்டு அடக்க இந்திய மக்களும் மக்கள் நலம் விரும்பும் தலைவர்களும் வருங் காலங்களில் கண்டிப்பாக முன் வரவேண்டும்.
அதன் மூலமாக இந்தியா எப்பொழுதும் ஒருமதச் சார்பற்ற நாடுதான் என்பதை உலகுக்கு உரத்த குரலில் உரைக்க வேண்டும். இதற்கு தமிழ் நாட்டின் பங்கே மிக முக்கிய மானதாக இருக்க வேண்டும்.
- சரவணா  ராசேந்திரன்

0 comments: